0,00 INR

No products in the cart.

தனக்கான அங்கீகாரத்தை அவர் பெறவும் இல்லை; அதற்கு முயற்சிக்கவும் இல்லை.

வினோத்                                                                         படம் : ஜீவா 

 

டிகர் – இயக்குநர் என்ற தளங்களில் இரு வேறு முகங்கள் காட்டியவர் பிரதாப் போத்தன். நடிகராக அவரை பார்க்கும்போது மென்மையான, கொஞ்சம் சீரியசான, சோகம் இழையோடும் பிம்பமே முன்னால் வரும். ஆனால், அவர் இயக்கிய சில படங்கள் இவரா இயக்கினார் என ஆச்சரியமாக இருக்கும்.

நாடக மேடைகளில் நடித்துக் கொண்டிருந்த இவரின் திறமையைப் பார்த்து இயக்குனர் பரதன் தனது படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என நூறு படங்களுக்கு மேலாக நடித்து முடித்துள்ளார்.

‘மூடுபனி’, ‘அழியாத கோலங்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ என நடிகர் பிரதாப்பின் திரைமொழி மிகவும் வித்தியாசமாக இருந்தது.

பிரதாப் நடித்த படத்தில் நமக்கு மறக்க முடியாத ஒன்று ‘தகரா’. பரதன் இயக்கத்தில் உருவான மலையாள படமான ‘தகரா’ தான் தமிழில் வினீத் நடிப்பில் ‘ஆவாரம்பூ’ என வெளிவந்தது.

பிரதாப் என்றாலே நினைவுக்கு வருவது கையில் கிட்டார் வைத்துக்கொண்டு, “என் இனிய பொன் நிலாவே” என்று பாடுவாரே அந்த காட்சிதான்.

பிரதாப் போத்தனின் குடும்பம் கேரள மாநலத்தில் பிரபலமானது. இவரது அப்பா கொலத்திங்கள் போத்தன் அரசியல்வாதி மட்டுமல்லாமல் வெற்றிகரமான தொழிலதிபராகவும் இருந்திருக்கிறார். “என்னுடைய அப்பா கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்ததில் ஒருவர். அந்தக் கட்சியின் பொருளாளராகவும் இருந்தார். சில காரணங்களினால் கட்சியை விட்டு விலகி தொழிலதிபரானார். இவருக்கு இரண்டு அண்ணன்கள். இப்போது இருவருமே உயிரோடு இல்லை. இரண்டு அக்காக்கள். அதில் ஒருவர் மட்டும்தான் இருக்கிறார். இத்தாலி நாட்டில் இருக்கும் அவர் ஓவியரும் கூட. ஒரே பெண். பிரபலமான விளம்பர கம்பெனியில் நல்ல பொறுப்பில் இருக்கிறார்.

ஏ.சி.திருலோக சந்தருக்கு அடுத்தபடியாக தரமான ஆங்கில கமர்ஷியல் நாவல்களை, தான் புழங்கும் மொழியில் திரைப்படமாக்கியவர் என பிரதாப் போத்தனை குறிப்பிடலாம்.

அதனாலேயே கமர்ஷியல் பட டைரக்டராக வலம் வந்தாலும் தரமான வெகுஜன இயக்குநராக அறியப்பட்டார்.

Robert Ludlum எழுதிய ‘The Bourne Identity’ நாவல்தான் சட்டென பிரதாப் போத்தன் குறித்து நினைக்கும்போதெல்லாம் ஃப்ளாஷ் ஆகும்.

இந்த நாவல் வெளியான சூட்டோடு சூடாக அதைத் தழுவி எழுத்தாளர் ஷண்முகப்ரியன் ஒன்லைன் அமைத்து, கே.ராஜேஷ்வருடன் இணைந்து கதை, வசனம் எழுத… இவ்விருவருடன் சேர்ந்து பிரதாப் போத்தன் திரைக்கதை அமைத்து ‘வெற்றி விழா’ படத்தை இயக்கினார்.உலகளவில் The Bourne Identity நாவலின் சாரம் முதன்முதலில் திரைப்படமாக்கப்பட்டது தமிழில்தான். ஹாலிவுட்காரர்கள் அதன் அருமையை உணருவதற்கு முன்பே இதன் நறுமணத்தை நுகர்ந்தவர் பிரதாப் போத்தன்.

பிரதாப் போத்தன் தனது வாழ்நாளின் மிக முக்கியமான அனுபவமாக நினைப்பது ‘ஒரு யாத்ர மொழி’ மலையாளத் திரைப்படத்தை இயக்கிய காலகட்டத்தை. தன்னுடைய அம்மாவை விட்டுப் போன அப்பாவைத் தேடிப் பிடித்து கொலை செய்ய நினைக்கிற ஒரு மகனுக்கு, தோழனாக தமிழ் மட்டுமே பேசுகிற ஒரு வழிப்போக்கன் கிடைக்கிறார். இருவருக்கும் இடையில் நடக்கிற உணர்வுப்பூர்வமான சம்பவங்களே ‘ஒரு யாத்ரா மொழி’ திரைப்படம். சில ஆண்டுகளுக்கு முன் நான் அவரை  கடைசியாக சந்தித்போது  கூட இந்தப் படம் பற்றித்தான் பேசினார்.

“இந்தப் படத்தில் இரண்டு ஜாம்பவான்கள் நடித்தார்கள். மோகன்லாலும் , அவருடைய ‘காட்ஃபாதராக’ சிவாஜி சாரும். நான் பாக்கியம் செய்திருக்கிறேன். சிவாஜி சார் கடைசியாக நடித்த இந்த மலையாளப் படம் நான் இயக்கியது. ‘டேய். நான் கேமரா முன்னாடி வந்துட்டேன்னா தந்துகிட்டே இருப்பேன். நீ தான் என்ன தேவையோ அத வாங்கிக்கணும்’ என்று சொன்னார். அவர் சொன்னது எத்தனை உண்மை என்பது அவர் நடிக்கத் தொடங்கினபோது தான் தெரிந்தது. அவர் அழகர். பாந்தமானவர். பிறவிக் கலைஞன் என்பது அவருக்குத் தான் பொருந்தும். நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு அவருக்கு. கேமரா முன்னால் நிற்கும்போது ‘சார் …சார்…’ என்று தான் எதையும் என்னிடம் பேசுவார். ஷாட் முடிஞ்சதும் ‘டேய்…அடேய்…போடா…போடா’ என்றபடியே வம்பிழுத்துப் போவார். அந்தப் படத்தை எப்பொழுது நினைத்துக் கொண்டாலும் உணர்வுக் கொந்தளிப்புக்குள் போய்விடுவேன்.”

திரையுலகில் மிக சிலரே தங்கள் துறையைத்தாண்டிய விஷயங்களைப் படிப்பார்கள். பேசுவார்கள். அதில் பிரதாப்பும் ஒருவர். படிப்பதெல்லாம் ஆங்கிலத்தில்தான். சினிமா இலக்கியம் அறிவியல் அரசியல்  என எல்லாம். படிப்பவர்.   நிறைய பத்திரிகையாளார்கள், வங்கி அதிகாரிகள் கல்லூரி ஆசிரியர்கள், ஆடிட்டர்கள் என பல வகை நண்பர்கள் . “பேட்டிக்காக இல்லாமல் என்னோடு வந்து பேசக்கூடாதா?” என்று உரிமையுடன் பத்திரிகையாளர்களிடம் பழகுபவர். அவருடைய ஃப்ரண்ட்லிஸ்ட்டில் இருக்கும் எல்லோருக்குமே தவறாமல் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஃபேஸ்புக்கில் வாழ்த்து மெசேஜ் அனுப்புவதை  ஒரு கடமையாகவே வைத்திருந்தார்.

இறுதிவரை தொடர்ந்து வாசிப்பில் ஈடுபட்டதும், எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதையை வழங்கியதும், திரைப்படத்துறையில் கதாசிரியருக்கு முக்கியத்துவம் தந்ததும் இவரது பலம்.

தனக்கான அங்கீகாரத்தை அவர் பெறவும் இல்லை; அதற்கு முயற்சிக்கவும் இல்லை.

I think in art, but especially in films, people are trying to confirm their own existences.

-Jim Morrison

இதுதான்  பிரதாப் போத்தன் ஃபேஸ்புக்கில் எழுதிய கடைசிப் பதிவு.

நீங்கள் முயற்சி செய்தீர்களோ இல்லையோ தெரியாது பிரதாப்.

ஆனால், நீங்கள் எங்கள் மனங்களில் நிலைத்திருப்பீர்கள்…

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...