0,00 INR

No products in the cart.

கண்ணியத்தை காக்காததற்கு கட்சி அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீங்கள் கேட்டவை – தராசு பதில்கள்

 

? சென்னை செஸ் ஒலிம்பியாட்  பற்றி…
-நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

முன்னேற்பாடுகள் கச்சிதமாக செய்யப்பட்டுக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. ஆனால், வெளியான விளம்பர படத்தில்  உலகம் அறிந்த விஸ்வநாத் ஆனந்தோ, அல்லது பிரஞ்யாவோ அல்லது மற்ற கிரான்ட் மாஸ்டர்களோ இல்லாது உறுத்தல்.  ரோட்டிலும் பாலங்களிலும்  செஸ் கட்டங்கள்  வரைவது மிக மோசமான விளம்பரம்.  பொதுமக்கள் பயன்படுத்தும் பாலங்களில் இத்தகைய ஓவியங்கள்  கண்ணைப் பறிக்கும், மின்னும் வண்ணங்களில் இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு  இடையூறாக இருக்கும்.

“தமிழ்நாட்டில் மிகச் சிறந்த கட்சியாக பா.ம.க. செயல்பட்டுவருகிறது; 34 ஆண்டுகளில் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவிலும் பல சாதனை படைத்திருக்கிறது” என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாரே…?
– இரா. அமிர்தவர்ஷினி, புதுச்சேரி

ஆளும் கட்சியின் திட்டங்களை வரவேற்பதிலும் சரி, குறைகள் சொல்லுவதிலும் சரி உடனடியாக தரவுகளுடன் செயல்படும் கட்சி பா.ம.க. ஒவ்வொரு ஆண்டும் மாநில பட்ஜெட் வெளியாகும்போது அதை நுணுக்கமாக ஆய்ந்து அறிக்கைகள் வெளியிடும் கட்சி அது ஒன்றுதான். அதனுடைய ஜாதி அடையாளத்தினால்தான் அந்த கட்சி அதற்கான  இடத்தை பிடிக்க முடியாமல் தனித்திருக்கிறது.

ஓ.பி.எஸ்.க்கு பின்புலம் வலுவாக இருப்பதுபோல் தெரிகிறதே?!
– நெல்லை குரலோன்,
பொட்டல்புதூர் – 627423

பின்புலம் எப்படியிருக்கிறதோ தெரியவில்லை. பின் நிற்கும்
கட்சிக்காரர்களின் பலம் குறைவாகத்தான் இருக்கிறது.

அரசு விழாவில் இந்து மத முறைப்படி பூமி பூஜை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. எம்.பி., செந்தில்குமாரின் செயல் பற்றி…
– எம். நிர்மலா, புதுச்சேரி

கண்டிக்கப்பட வேண்டியது. அரசு விழாக்களில் பூமி பூஜை என்பது காலம் காலமாக நடந்துவருவது.  அமைச்சர் பங்குகொள்ளும் விழாக்களில் நிகழ்ச்சி நிரல் முன்னதாக அனுப்பப்பட்டிருக்கும். அதைப் பார்த்த உடனேயே தவிர்க்கச் சொல்லியிருக்கலாம். அதைவிடுத்து விழாவுக்கு வந்தபின், அழைப்பாளர்கள்,  அதிகாரிகள், அலுவலர்கள் முன்  ஒரு மூத்த அதிகாரியை கண்டிப்பது தவறு. அவர் சார்ந்திருக்கும் கட்சியின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றான கண்ணியத்தை  காக்காதற்கு கட்சி அவர் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

“மேக வெடிப்பு”  பற்றி..!    வாசுதேவன் ,பெங்களூரு

குறுகிய நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிக மிக அதிக கனமழை பெய்வது “மேக வெடிப்பு” என்று சொல்லப்படுகிறது. அதாவது, திடீரென 100 மி.மீட்டர் (10 செ.மீ) மேல் ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் மழை கொட்டுவதை மேக வெடிப்பு என்று வானிலை ஆய்வு மையம் வரையறுக்கிறது. சமீபத்தில் அமர்நாத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெரு வெள்ளம் ஏற்பட்டது.

கோதாவரியில் ஏற்பட்ட மேகவெடிப்பு பிற வெளிநாடுகளால் ஏற்படுத்தப்படும் சதி என்று தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் சொல்லுவது அபத்தம்,

“கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள் ?”
– எம். பானுமதி,மாங்குப்பம்

காவல்துறையின் நுண்ணறிவுப்பிரிவின் தோல்வி, சம்பவத்தை சமயோசிமாக கையாளாமல் வளரவிட்டது, இப்படி எல்லா முனைகளிலும் தாமதித்துவிட்டது அரசு. கலவரத்திற்கு காரணமானவர்களையும் ஸ்ரீநிதியின் மரணத்திற்கு காரணமானவர்களையும் சட்டத்தின்முன் கண்டிப்பாக நிறுத்தியாகவேண்டும் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இல்லை.  அதற்கு இவ்வளவு பெரிய கலவரம் தேவையா என்பதுதான் கேள்வி.

கலவரக்காட்சிகளைப் பார்க்கும்போது யார் இந்த இளைஞர்கள் என்றே தோன்றியது. யாரோ தங்களின் சுயலாபத்திற்காக தூண்டியுள்ளார்கள். எல்லா கலவரங்களின் போதும் நடப்பது போல. இதனை திட்டமிட்டு நிதானமாக செயல்படுத்தி இருக்கின்றார்கள். சொன்னதை செய்யுமாம் கிளி என்பதைப்போல யாரோ ஆட்டுவிக்க வன்முறையில் ஈடுபட்டுள்ளார்கள். என்று தோன்றுகிறது.

இவர்களில் ஒரு சிலராவது ஏன் இதனைச் செய்கின்றோம் என்று கேள்வி எழுப்பி இருந்தாலே போதும். பள்ளி அலுவலகத்திற்கு சென்று சான்றிதழ்களை எரித்துள்ளார்கள். ஆய்வகத்தை நாசம் செய்திருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் பள்ளிக்கு சென்றிருப்பார்கள் தானே? பள்ளியினை கோயிலாக பார்க்க வேண்டாம், ஆனால் குறைந்தபட்ச மரியாதையும்கூடவா இல்லை? குழந்தைகளின் கல்வி பற்றி கொஞ்சமேனும் சிந்திந்திருந்தால் இப்படி செய்திருப்பார்களா?

தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஓராண்டில் ரூ.3,000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்களை மீட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறாரே…
– ச. இராமதாசு சடையாண்டி,  வானூர் அஞ்சல்,

அவரும் வாராவாரம் சொல்லிக்கொண்டுதானிருக்கிறார். எந்தகோவில் எந்த சொத்துக்கள் என்ற விபரங்களை அரசின் இணையதளத்தில் வெளியிட்டால் விபரங்கள்  தெரிந்துகொள்ள வசதியாகயிருக்கும்.

‘கணவரைப் பிரிந்து வாழும் மனைவி, தாலிச்சங்கிலியை கழற்றுவது, கணவருக்கு அளிக்கும் மன ரீதியான துன்புறுத்தல்தான்’ என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளதே?
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

“தாலியை அகற்றுவது பெரும்பாலும் சம்பிரதாயமற்ற செயலாகக் கருதப்படுகிறது. திருமண உறவிற்கு முற்றுப்புள்ளி வைக்க “தாலியை அகற்றுவது போதுமானத என நாங்கள் கூறவில்லை” என்று தன் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி.

“பிரிவின் போது தாலிச் சங்கலியை அகற்றிய செயல், வழக்கில் கிடைக்கப்பெற்ற பல்வேறு சான்றுகள், இரு தரப்பினருக்கும் சமரசம் செய்தும் திருமண உறவை தொடரும் எண்ணம் இல்லை என்ற உறுதியான முடிவுக்கு வருமாறு எங்களை நிர்பந்திக்கிறது ” என்றும்  தீர்ப்பில் தெரிவித்து உள்ளனர்.

பொியாா் பல்கலைக்கழகத்தின் தற்போதைய ஜாதி ரீதியான கேள்விக்கு யாா் பொறுப்பேற்பது?
– நாகராஜன், செம்பனாா்கோயில்

பல்கலைக்கழக தேர்வுகளில் கேள்வித்தாட்கள் ஒருவரால் உருவாக்கப்படுவதில்லை. அதற்கென நியமிக்கப்பட்டிருக்கும் குழுவிலிருக்கும் ஆசிரியர்கள் தயாரித்து துறைத்தலைவரின் ஒப்புதலுடன் தான் இறுதி செய்யப்படும். அதனால் சமபந்தப்ட்ட அனைவருமே பொறுப்பேற்க வேண்டும்.

அண்மையில் நீங்கள்  ரசித்த படம் ?
– அ.ச நாரயணன், பாளையங்கோட்டை

மாதவனின் ராக்கெட்ரி படம் பார்த்தபின் மன அழுத்தத்தை குறைத்தது. இந்தப் படம் தான்.

பிரம்மாண்டமான சிலைகள்  ஏன் சீனாவில் மட்டுமே  வடிக்கப்படுகிறது?
– ஆரோக்கிய தாஸ், தேனி

பிரம்மாண்ட சிலைகளை உருவாக்குவதில் சீன நிறுவனங்கள் தேர்ச்சி பெற்றுள்ளன. அங்குள்ள நிறுவனங்கள் நீண்ட காலமாக பிரம்மாண்ட சிலைகளை தயாரித்து வருகின்றன. சீனாவில் உள்ள ‘ஸ்பிரிங் டெம்பிள் புத்தர்’ போன்ற பல பிரம்மாண்ட சிலைகள் இதற்கு உதாரணம். இம்மாதிரி பிரம்மாண்ட வெண்கலச் சிலைகள் நிர்மாணிப்பில் சீனா உலகப்புகழ் பெற்றது. பாரம்பரிய வார்ப்பு முறைகளுடன் நவீன நுட்பங்களையும் இணைத்து சீன நிறுவனங்கள் பெரிய சிலைகளை உருவாக்குகின்றன. அதன் பல்வேறு பாகங்கள் தனித்தனியாக வடிவமைக்கப்பட்டு பின்னர் பிரம்மாண்டமான சிலைகள் உருவாக்கப்படுகின்றன. சீனாவில் சிலை வார்ப்புகளுக்கான பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இதன் காரணமாக மிகக் குறுகிய காலத்தில் சிலைகளின் பாகங்களை வடிவமைத்து வழங்க முடிகிறது உலகின் பலநாடுகள் தங்கள் நாட்டில் பெரிய சிலைகளை அமைக்க சீன நிறுவனங்களை நாடுவதற்கு இதுவே காரணம்.

1 COMMENT

  1. “அதனுடைய ஜாதி அடையாளத்தினால்தான் அந்த கட்சி அதற்கான இடத்தை பிடிக்க முடியாமல் தனித்திருக்கிறது”. :
    உங்களின் இந்த சரியான கணிப்பை அன்புமணி சார் கவனத்தில் கொள்வது நல்லது.
    கே.ஆர்.எஸ். சம்பத், திருச்சி 620017.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...