0,00 INR

No products in the cart.

ஸ்ரீரங்கம் கதைகள், ஓவியங்கள், சன்மானம்

கடைசிப் பக்கம்

 

சுஜாதா தேசிகன்

ரு நாள் எழுத்தாளர் சுஜாதா ‘ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்’ மாதிரி இன்னொரு செட் எழுத உத்தேசம். அவ்வப்போது சில குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறேன் ஒரு பத்து, பன்னிரண்டு கதை தேறும் என்றார். சூடான தேநீரில் தோய்த்த மேரி பிஸ்கட் போல் மனம் மகிழ்ச்சியில் தோய்ந்தது.

ஒவ்வொரு வாரமும், அவர் என்னைத் தனியாக ஓர் அறைக்கு அழைத்துச் சென்று அடுத்து எழுதப் போகிற கதையை முழுவதும் சொல்லிவிடுவார். முதலில் உண்மைக் கதையைச் சொல்லிவிட்டு அதை எப்படி ‘கதை’ யாக மாற்றப் போகிறேன் என்று என்னிடம் கூறுவார். மறுவாரம் அவர் சொன்ன கதை எழுத்து வடிவமாக பத்திரிக்கையில் வரும் போது பரவசத்துடன் சிறுகதை எழுத எனக்குப் பெரிய பாடமாக இருந்தது. ஓர் எழுத்தாளனுக்கு ஒழுங்காக கதை சொல்லத் தெரியவேண்டும் என்பது முதல் தகுதி.

சில சமயம் நான் சிறுகதை எழுத நினைக்கும் போது, காலை நடையின் போது நானே எனக்குச் சொல்லி அதை ரிகார்ட் செய்து கேட்பேன். கேட்கும் போது சுவாரசியமாக இல்லை என்றால் எழுத மாட்டேன். இப்படிப் பல வாசகர்களை நான் காப்பாற்றியிருக்கிறேன்.

சுஜாதா ஸ்ரீரங்கத்துக் கதைகளை எழுதி முடித்த பின் எல்லாவற்றையும் சேர்த்து ஒரே புத்தகமாகப் போடும் பேச்சு வந்தது. நானே எல்லாக் கதைகளையும் தொகுத்து அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தேன்.

”சினிமா படத்தில் காமெடி டிராக் தனியாக வருவது போலப் புத்தகத்தில் நான் படம் வரையட்டுமா ? ” என்றேன்.

“நிச்சயமா செய்யுங்கள்.. ”

”ஸ்ரீரங்கத்தில் சில முக்கியமான இடங்களைப் படம் வரையலாம் என்று இருக்கிறேன்… உங்களுக்குப் பிடித்த இடங்களைச் சொல்லுங்கள்…” என்றவுடன் சர சர என்று ஸ்ரீரங்கத்தை வரைந்து தந்தார்.

“மெயின் ரோட்டிலிருந்து உள்ளே வரும் போது மூங்கில் கடைகள் இருக்கும்… அங்கே தாமரைக் குளம் இருக்கும்… பார்த்திருக்கிறீர்களா ?” என்றார்

“ஆமாம் பார்த்திருக்கிறேன்… அதையும் வரைந்துவிடவா ?”

“ஓ தாராளமா…”

“ஆயிரம் தாமரை மொட்டுக்களே…” .. என்று மனதில் பாடிக்கொண்டு ஸ்ரீரங்கம் சென்றபோது அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. குளத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

“… இங்கே தாமரை .. “ என்று ஒருவரைக் கேட்டேன்.

“தாமரையா ?..”  என்று என்னை பி.ஜே.பி. கட்சிக்காரன் போலப் பார்த்தார்.

தாமரையைத் தேடிக்கொண்டு குணசீலம் வரை சென்றேன்.  அங்கே ஓர் இடத்தில் சின்னக் குட்டையில் சில தாமரை பூத்திருந்தது.

அதை மனதில் வாங்கிக்கொண்டு சிறுவயது ஞாபகத்தைக் கொண்டு வரைந்த ஓவியம் இது.  அந்தக் கால கிராபிக்ஸ் !

இதேபோல இன்று ராஜகோபுரமாக இருக்கும் பழைய மொட்டை கோபுரத்தை வரைய முற்பட்டேன். பல இடங்களில் தேடியும் பழைய ‘மொட்டைக் கோபுரம்’ படம் எனக்குக் கிடைக்கவில்லை.( இன்று இணையத்தில் சுலபமாக கிடைக்கும் ! )

தற்போது இருக்கும் கோபுரத்தைப் படம் பிடித்து அடிப்பாகத்தை மட்டும் வரைந்தேன் (பார்க்க மஞ்சள் வண்ணம்).  ஏ.கே. செட்டியார் புத்தகத்தில் ஸ்டாம்ப் அளவுக்கு ஒரு படம் இருந்தது. ஆனால், அதில் எனக்கு வேண்டிய details கிடைக்கவில்லை.

படத்தில் இருந்த கான்கிரிட் வீட்டைக் குடிசையாக மாற்றினேன். பிறகு முன்பு இருக்கும் பெட்டிக்கடையின் சட்டை, டிரவுசரை கழட்டி அதில் இருக்கும் மண்டபத்தை மட்டும் வரைந்தேன். சில அண்டுகளுக்கு முன் மொட்டை கோபுரம் படம் ஒன்று எனக்குக் கிடைத்தபோது வரைந்ததையும் அதையும் ஒப்பு நோக்கினேன். அட பரவாயில்லை என்று தோன்றியது !

1994ல் தற்போது உள்ள ஸ்ரீரங்கத்து ராஜகோபுரத்தை வரைந்தேன்.  இந்தப் படம்  சுஜாதாவின் கணிப்பொறியில் கடைசிவரை Wall Paper ஆக வீற்றிருந்தது. அவருடைய கணினியில் ஏதாவது ரிப்பேர் என்றால் முதலில் அவர் “இந்த வால் பேப்பர் மட்டும் மாத்தாதீங்க. அது அப்படியே இருக்கட்டும்” என்பார். கடைசிவரை இந்த வால் பேப்பர் அவர் கணினியை அலங்கரித்தது எனக்குக் கிடைத்த பெருமை.

இன்றும் இந்தப் புத்தகத்தைத் திருப்பும் போது அதில் எல்லோரும் பழக்கப்பட்டவர்கள் மாதிரியே எனக்குத் தோன்றும். சமீபத்தில் ‘ஸ்ரீரங்கத்துக் கதை’ ஓவியங்களுக்கு என்ன சன்மானம் வாங்கினீர்கள் என்று ஒருவர் கேட்டார்.  புத்தகம் வந்த போது சுடச் சுட முதல் பிரதியை நான் தான் அவரிடம் காண்பித்தேன்.  அப்போது அவர் கண்களில் தெரிந்த ஆனந்தத்தை பார்த்ததுத்தான் எனக்குக் கிடைத்த பெரிய சன்மானம்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...