0,00 INR

No products in the cart.

வேண்டாமே! இந்த அக்னிப் பரீட்சை

தலையங்கம்

 

ராணுவச் சேவையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் ‘அக்னி பாதை’  என்றொரு திட்டம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவச் சேவையில் சேர்வதற்கு தயாராகிவரும் இளைஞர்களிடையே இந்தப் புதியத் திட்டம் பெரும் வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்புடன் ஒன்றிய அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது.  ஆனால், திட்டத்துக்கு  எதிர்ப்புகளும் அதை முன்னிட்டு நடத்தப்படுகிற வன்முறைச் செயல்களும் எழுந்திருக்கின்றன. அவை  கண்டனத்துக்கு உரியவை என்பதோடு, கடுமையான தண்டனைக்கும் உட்படுத்தப்பட வேண்டியவை என்பது  உண்மையானாலும்  இந்தப் போராட்டங்களில் பின்னே உள்ள இளைஞர்களின் கோபத்தை அரசு புரிந்துகொள்ள வேண்டும் .

தங்களது வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகுமோ என்ற எண்ணம் எழுந்துள்ளது. அத்தகைய எண்ணம் தவறானது என்று மத்திய அரசு அறிவித்துக்கொண்டிருந்தாலும் போதுமான விளக்கங்களை அளிக்காமலிருப்பதினால்  அவர்களின் சினம் கனலாக கனிந்து பெருஞ் ஜுவாலையாக எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த அக்னிபத் திட்டம் 2020இல்  முப்படையின் தலைமை தளபதி மறைந்த பிபின் ராவத் தலைமையிலான ராணுவ விவகாரத் துறையால் திட்டமிடப்பட்டது. இந்திய ராணுவத்தை நவீனமயமாக்க வேண்டும் என்பதற்காக செலவுகளைக் குறைக்கும் திட்டங்களில் இது முக்கியமானதாகும். மத்திய அரசின் ராணுவத்துறை கொண்டு வந்திருக்கும் ‘அக்னிபத்’

இந்தத் திட்டத்தின்படி வேலைக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் போர் வீரர்கள் நான்கு ஆண்டு ஒப்பந்தத்தில் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அந்த ஒப்பந்தக் காலம் முடிவடைந்ததும் அவர்களில் 25 சதவிகித வீரர்கள் மட்டுமே பணியில் தொடர அனுமதிக்கப்படுவார்கள். மீதி 75 சதவிகிதம் பேரின் பணிக்காலம் முடிவடைந்து விடும். பிஎஃப் போல அவர்கள் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் தொகையும் வேறு சில உதவித் தொகைகளும் சேர்ந்து சுமார் 12 லட்சம் அவர்களுக்கு வழங்கப்பட்டு பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

ஒன்றிய  அரசின்  பட்ஜெட்டில் முப்படைகளுக்குமான ராணுவ செலவுகளுக்கு ரூ.5.25 லட்சம் கோடி. (மொத்த பட்ஜெட்டின் அளவு ரூ.39.45 லட்சம் கோடி.)). இந்த ரூ.5.25 லட்சம் கோடியில் ஓய்வூதியத்திற்கு மட்டும் ரூ.1.20 லட்சம் கோடி. இதை வெகுவாக குறைக்கும் நோக்கத்தில் அக்னிபத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 17 வருடம் பணியாற்றும் சிப்பாய் ஒருவருக்கு ஆகும் மொத்த செலவை விட 3 ஆண்டுகள் மட்டும் பணியாற்றும் சிப்பாய் ஒருவருக்கு ஆகும் மொத்தச் செலவு ரூ.11.5 கோடி குறைவாக இருக்கும் என்று இந்திய ராணுவம் கணித்துள்ளது. 5 லட்சம் சிப்பாய்களுக்குப் பல லட்சம் கோடி மிச்சப்படுத்த முடியும். இதுதான் இந்தத் திட்டத்தின் அடிப்படை.

ஆனால்,  செலவினத்தைக் குறைக்கவும்,  தேர்தல் வாக்குறுதிகளின்படி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க (அதுவும் சுழற்சி முறையில்) ராணுவத்தைப் பயன்படுத்திக்கொள்வது தவறு.  ராணுவப் பணி என்பது ஜாலியான தற்காலிக வேலை தேடும் ‘சாகச முகாம்’ இல்லை. இராணுவத்தில் பணிபுரிவது என்பது  வாழ்க்கைக்கும் உயிரிழப்பிற்கும் இடையேயான போர்.  முழுமையான  உண்மையான அர்ப்பணிப்பு உள்ளவர்களால் மட்டுமே முடியும்

இந்தத் திட்டத்தின் மூலம்  4 ஆண்டுகள் பணிக்குப்பின் விடுவிக்கப்படும்  இளைஞர்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? என்ற கேள்வி எழுகிறது. அவர்களுக்குத் தொழில் துவங்க வங்கிக் கடன்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றெல்லாம் இந்தத் திட்டத்தில் இடம் இருந்தாலும் இவர்கள் அனைவரும் போர்ப் பயிற்சி பெற்றவர்கள். ஆயுதங்களைக் கையாளத் தெரிந்தவர்கள்.  இவர்களால் தீவிரவாத குழுக்களுக்கும் மாவோயிஸ்ட் குழுக்களுக்கும் வேலை சுலபமாகி விடும். இப்படி ஈராக் ராணுவத்தைக் கலைத்து எல்லாரையும் வேலையிலிருந்து தூக்கியதில், வேலை போன வீரர்கள் சேர்ந்தும்தான் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் வலுப் பெற்றதற்கு காரணம்.  என்பது வரலாறு.

மேலும், தொழில் வளர்ச்சி குறைவாக உள்ள வட மாநிலங்களில் வேலை வாய்ப்புக்கு இளைஞர்களில் ஒரு சாரார் ராணுவத்தேர்வைத்தான் நம்பி இருக்கிறார்கள். இப்போது ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவது துவங்கினால் இதில் வேலை உத்தரவாதம் இல்லை என்ற நிலை உருவாகிறது.  ராணுவப்பணியை ஒரு பெருமையான வாழ்வாதாரம்  என்று நம்பி வளரும் லட்சக்கணக்கான இளைஞர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்தும்  இருக்கிறது

நமது ராணுவத்தைச் சம்பளச் செலவுகளைக் குறைத்து தொழிநுட்பங்களின்உதவியுடன் அதிநவீனப்படுத்த வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது. ஆனால், அதிரடியாக, எழப்போகும் எதிர்மறை விளைவுகளைக் கணிக்காமல் அறிவித்தால் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாகிவிட்டது இந்த திட்டம். அதனால் தான் பல முன்னாள் மூத்த ராணுவ அதிகாரிகளும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

விவசாயச் சட்டம், குடியுரிமைச்சட்டம் போல, காலம் கடந்து இல்லாமல் இந்த திட்டத்தை உடனே  திரும்பப் பெற்று நாட்டு இளைஞர்களின் நம்பிக்கையைப் பெறவேண்டிய கட்டாயத்திலிருக்கிறது இந்த அரசு. தவறினால் அக்னிபத் திட்டம் இந்தியாவை நிஜமாகவே நெருப்பு சூழ்ந்த பாதைக்குத்தான் கொண்டு சென்றுவிடும்.

3 COMMENTS

 1. நம்முடைய ராணுவம் பரிந்துரை செய்யப்பட்ட திட்டம். முப்படைத் தளபதிகள், நமது பிரதம மந்திரி, பாதுகாப்பு மந்திரி, அஜித் தோவல் போன்றவர்கள் ஆராய்ந்த பிறகே அறிவிக்கப்பட்டது. இவர்கள் எல்லோரையும் விட வேறு எவருக்கும் இவ்விஷயத்தில் அதிக அறிவும், அனுபவமும் இருக்க இடமில்லை. நமது ராணுவத்தில் short service commission என்று 7 வருடப் பணிக்காலம் முடித்தவர்கள் ஏராளம்..அதைவிட குறைவாக 5 வருடம் முடிந்து வெளிவந்தவர்களும் பலர். ஒருவர்கூட தீவிரவாதி ஆகவில்லை. கல்கியில் தரப்படும் உதாரணம்- ஈராக் ராணுவம். ஈராக் ராணுவத்துடன் இந்திய ராணுவத்தை ஒப்பிடுவது அக்னி பத்தை எதிர்த்து எழுத வேண்டிய கட்டாயத்திலா என்று தெரியவில்லை. இறைவழிபாடு முடிந்து வரும் ஒரு தரப்பு கையில் கல்லுடன் வருகிறது. இன்னொரு தரப்பு பிரசாதத்துடன் வருகிறது. இது போன்றதுதான் ஈராக், இந்திய இராணுவ வேறுபாடு. அக்னிபத் உருவாக்கும் தழல் சீனா, பாகிஸ்தான் இதயத்தைச் சுடும் . புரிந்தோ, புரியாமலோ எதிர்க்கும் இந்தியர்களை நினைத்து வேதனைப்படுகிறேன்

 2. ராணுவத்தில் இளைஞர்களுக்கு
  ஒழுக்கமும் நாட்டுப்பற்றும்தான் போதிக்கப்படுகிறது என்பதுதான் பொதுவான எண்ணம். தேசப்பற்றுக்கு பதில் தீவிரவாதத்தனம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது என்ற கருத்தே வேடிக்கையாக இருக்கிறது.

  ராணுவத்தில் கட்டாயமாக பணிபுரிய வேண்டும் என்பது பல நாடுகளில் நடைமுறையில் இருந்தது. ஐரோப்பாவில் 2010 வரையிலும் சுவிஸர்லாந்தின் இன்றளவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியும் மீண்டும் கொண்டுவர யோசித்து வருகிறது. இந்த நாடுகள் கொண்டு வந்த கட்டாய ராணுவ சேவை என்பது போருக்கான ஆயத்தம் மற்றும் வேறு பல காரணங்களே அன்றி கண்டிப்பாக தீவிரவாதத்திற்கு அல்ல.

  அக்னிபாத் மூலம் இந்தியா யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல அதிகப்படியான வாய்ப்பை அளிக்கும் முகமாகத்தான் இருக்கிறது. அடிப்படை பயிற்சி பெற்றவர்கள் நாட்டு சேவையையே தங்கள் பணியாகத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது வேறு ஏதாவது துறையையும் மேற்கொள்ளலாம்.

  உலகம் முழுவதும் இராணுவப் பயிற்சியை முக்கிய அம்சமாகக் கருதும் பொழுது இராக்கை உதாரணமாக காட்டுவது அறியாமையின் உச்சம். லட்சக்கணக்கான இளைஞர்கள் 4 வருட இன்ஜினியரிங் படித்துவிட்டு அதற்கு பிறகு எந்தவிதமான வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் இல்லாமல் இருக்கிறார்கள். இங்கு சிலருக்கு உத்தரவாதம் இல்லாவிட்டாலும் நாலு வருடம் சம்பளத்தோடு முடித்த பிறகும் ஒரு பெரிய தொகையை கையில் கொடுக்கிறார்கள். இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்காவிட்டால் இப்படி ஒரு தொகை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கூட ஒரு வேடிக்கையான எண்ணம் எழும்புகிறது.

  உண்மையில் நம் அண்டை நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் இதை எண்ணி கவலை கொள்ளும் விஷயமாக இருக்கும் போது நாட்டிற்குள் இதற்கு எதிராக போராட்டம் நடப்பது மிகவும் வேதனையானது.

 3. The opinion expressed is on party lines.It is a good plan under existing mass unemployment among
  educated to become useful citizens after the period and those suitable to be absorbed in services
  which are more sophisticated and modernized.Just look! on the opening day 47 thousand applications
  have come from educated graduates for a very small portion required for Air force itself on the first day itself The editorial is reflecting opinion of the opposition parties for the sake of opposition to the ruling party

  Pl.get translated as not able to type,if you want to include!

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

0
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

1
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...