0,00 INR

No products in the cart.

ரெய்டு

  ரிங்க அண்ணா வெச்சுடறேன்…” போனை டேபிள் மேல் வீசி விட்டு “அம்மா அம்மா…” என அலறினபடி கிச்சனுக்கு ஓடினான் செந்தில்.

குக்கரின் மூன்றாவது விசிலுக்காகக் காத்திருந்த பார்வதி எரிச்சலுடன் திரும்பினாள்.

‘என்னடா’ என்றது பார்வை.

“அப்பாவோட ஆபிஸ்ல காலைலிருந்து ரெய்டாம். மூணு கார்ல ஸ்க்வாட்காரங்க வந்து இறங்கியிருக்காங்களாம். ஆபிஸ்க்கு எதிர்ல பேக்கரி வெச்சு நடத்துற திருப்பதி அண்ணன் போன் பண்ணி எனக்கு தகவல் சொன்னாரு.”

“அடக் கடவுளே…” பார்வதி நிலைகுலைந்து போய் டேபிளில் சரிந்தாள்.

“என்னடா இது சோதனை!’ அது அரசாங்க ஆபிசே கிடையாது, கொள்ளைக் காரங்க குடியிருக்கிற கூடாரம்ன்னு ஏற்கெனவே நம்ம ஊருல நல்ல பேரு! பாதிக்கப்பட்ட யாரோ ஒருத்தர்தான் மேலிடத்துல புகார்
பண்ணியிருக்கனும். அதனாலதான் இப்படி நடந்திருக்குது…” யூகித்தாள்.

“அம்மா… அப்பா…” செந்தில் முடிக்க முடியாமல் கதறினான்.

“அந்த அங்காளம்மன்தான் அவரைக் காப்பாத்தணும்! லஞ்சம் வாங்காதீங்கன்னு தலைபாடா அடிச்சுக்கிட்டேன். அரசாங்கம் கொடுக்கிற சம்பளமே போதும். சந்தோசமா நிம்மதியா வாழலாம்ன்னு பலவிதமா சொல்லிப் பார்த்தாச்சு. அந்த மனுசன் மதிச்சா தானே. ’எல்லோரும் வாங்கறாங்க. நான் வாங்காம தனியா நின்னா கூட்டமா சேர்ந்து என்னை அழிச்சுடுவாங்க..’ன்னு கண்ணைக் கசக்குனாரு. லஞ்சம் வாங்க இப்படியொரு நியாயம். இப்போ கூட்டத்தோட சேர்ந்து அவரும் சிறைக்குப் போகப் போறாரு! நாம மானம், மரியாதையெல்லாம் கெட்டு சீரழிஞ்சு தெருவுல நிக்கப் போறோம்.”

கண்ணீர் சிந்தின அம்மாவை கவலையோடு பார்த்தான்.

“அம்மா என் ஃப்ரெண்ட்சுக்கெல்லாம் தெரிஞ்சா அவ்வளவு தான்ம்மா. கிண்டல் பண்ணியே கொன்னுடுவாங்க…” முனகினான்.

“சொந்தக்காரங்க முன்னாடி தலைகுனிஞ்சு நிக்கணுமே. செய்திச் சேனல், பத்திரிக்கைகள், யூ ட்யூப் வீடியோ.. கடவுளே.. மயக்கம் வருதே. நான் எங்கேயாவது கொஞ்ச நாள் தலைமறைவாகிடட்டுமா”.

“நான் பூஜை ரூம் போறேன். எனக்கு கடவுளை விட்டா வேற கதி இல்லை..”

பார்வதி கேஸ் அடுப்பை அணைத்துவிட்டு பூஜையறை ஓடுகிறாள்…

  ஸ்ரீதரன் வீடு திரும்பினபோது இரவு ஒன்பது மணி.

“வந்துட்டீங்களா…”  கட்டி அணைத்துக் கொண்டு கதறினாள் பார்வதி.

“இந்த வேலையே வேணாம். ராஜினாமா பண்ணுங்க முதல்ல..”

அவளை மென்மையாக விலக்கினவன் அப்பா படத்திற்கு முன் வந்து கண்கலங்கி நின்றான்.

“எங்க ஆபிஸ்ல ஏழு பேர் சிக்கிட்டாங்க. மொத்தம் ஒன்பது லட்சம் லஞ்சப் பணம் மாட்டியிருக்கு. நானும் இன்னொருத்தரும் மட்டும்தான் தப்பிச்சோம்.”

புரியாமல் பார்த்தாள். மனதில் சந்தோசம். நிம்மதி.

“ஆனா… நீங்க எப்படி.. அவங்க ரெய்டுக்கு வர்றது முன்னாடியே தெரியுமா.”

“ம்ஹூம்..” திரும்பினவனின் கண்களில் நீர்த் தேக்கம்.

“என்னை அப்பாதான் காப்பாத்தினாரு.!” அழுதான்.

“நீதி, நேர்மைன்னு நூறு சதவீத ஒழுக்கத்தோட வாழ்ந்த மனுசன் அவரு. இன்னைக்கு அவரோட நினைவு நாள். அதனால இன்னைக்கு ஒருநாளாவது லஞ்சம் வாங்காம இருக்கலாம்ன்னு முடிவு பண்ணி…” முடிக்கமுடியாமல் வெடித்தான்.

“அப்பாவோட புண்ணியம்தான்  என்னைக் காப்பாத்தியிருக்கு…”

படமாக சிரித்துக் கொண்டிருக்கிறார் அவர்!

 

 

4 COMMENTS

  1. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.ஆனால் ,இவன் அந்த ஒரு நாள் திருடாததால் தப்பித்தான் .நேர்மையின் வலிமையை உணர்த்தியது “ரெய்டு கதை”

    Janakiparanthaman __ kovai __36 phone ___ 9047588922

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

0
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

1
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...