0,00 INR

No products in the cart.

விசிட்டிங் கார்ட்

ந்த ஸ்டேஷனில் வண்டி வந்து நின்றபோது மணி நாலரை இருக்கும். வண்டி ஒரு குலுக்கலுடன் நின்றதால் மேல் பர்த்தில் படுத்திருந்த வேதமூர்த்தி திடுக்கிட்டு எழுந்து தலையைத் தூக்கிப் பார்த்தார். விழுப்புரம் போல இருந்தது. ம்…. சென்னை சென்றடைய இன்னும் மூன்று மணி நேரம் ஆகும். மீண்டும் தூங்கலாம்… அப்பாடா….என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு திரும்பிப் படுத்துக்கொண்டார்.

கீழே லைட்டைப் போட்டு ஓரிரண்டு பேர்கள் ஏறினார்கள். ஒரே பேச்சுக் குரல். ஏற்கெனவே அந்தப் பெட்டியில் ஒரு கணவன், மனைவி, பத்து வயது பெண் குழந்தை அமர்ந்திருந்தனர். ஜன்னலோரத்தில் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன். நேற்றிலிருந்தே இவரிடம் பேச்சுக் கொடுத்து இவரின் ஃபிரண்ட் ஆகிவிட்டான். தன்னை மணிவண்ணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

திரும்ப கீழே பார்த்தார். யாரும் தூங்கப் போவது மாதிரி தெரியவில்லை. மிடில் பர்த்தையும் மடக்கிவிட்டு எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். வேதமூர்த்தி தனக்கு எதிரில் உள்ள அப்பர் பர்த்தைப் பார்த்தார். அதில் பதினெட்டு வயது கல்லூரி மாணவன் ஒருவன் இந்த உலகத்தை மறந்து தூங்கிக் கொண்டிருந்தான். இவர் மெதுவாக கீழிறங்கி அந்த முப்பது வயது இளைஞன் அருகில் சென்றார். “வாங்க சார், எல்லோரும் பேசி உங்க தூக்கத்தை கலைச்சுட்டாங்க போல இருக்கு ….ம்…உக்காருங்க” என்றான் அவரும் அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டார்.

“தம்பி, காபி, டீ ஏதாவது வந்தா கூப்பிடப்பா… தூக்கம் கலைஞ்சு போச்சு, ஒரு வாய் காபி குடிக்கணும் போல இருக்கு” என்றார். அவனும், வரும் சார், வெய்ட் பண்ணுங்க, அஞ்சு மணி ஆனா அடுத்த ஸ்டேஷன்ல வரும் என்றான். வேதமூர்த்தியும் அந்த இளைஞன் மணிவண்ணனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.

“தம்பிக்கு எங்க வேலை? கல்யாணம் ஆய்டுச்சா ?” என்று கேட்டார்.

“ம்…. இங்க சென்னையில ஒரு ப்ரைவேட் கம்பெனிலதான் வேலை பாக்கறேன். கல்யாணம் ஆகி ரெண்டு வயசுல ஒரு பையன் இருக்கான் சார் என்றான். நான் சேத்துப்பட்டுலதான் சார் இருக்கேன்” என்று அவர் கேட்காமலேயே சொன்னான்.

நானும் புரசவாக்கத்துலதான் இருக்கேன். அவசியம் நாம மறுபடியும் சந்திக்கணும் என்று சொல்லிவிட்டு அவனிடம் தன் விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினார். அந்த கார்டில் ‘வேதா என்டர்ப்ரைசஸ்’ என்று அழகாக பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. கோல்டன் லெட்டரில் ‘வேதமூர்த்தி, மேனேஜிங் டைரக்டர்’ என்று எழுதியிருந்தது. அவனும் அதை ஆவலுடன் வாங்கிக் கொண்டு தன் கார்டைக் கொடுத்தான்.

வேதமூர்த்தியும் அவன் கார்டை வாங்கிக் கொண்டு பார்த்தார். அதில், ஜி.மணிவண்ணன், அக்கௌன்டன்ட் , மூர்த்தி க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் என்று பொறிக்கப்பட்டிருந்தது. உடனே வேதமூர்த்தி, “தம்பி, இந்த மூர்த்தி என்பவர்தான் டிராவெல் ஏஜென்சி, குரியர், என்று நிறைய கம்பெனிகள் வைத்திருக்கிறாரே, அவரா?” என்று கேட்டார்.

“ஆமாம் சார், அவரேதான். அவருக்கு பலதரப்பட்ட பிசினெஸ். நான் அவருடைய எக்ஸ்போர்ட் கார்மென்ட் கம்பனில அக்கௌன்டன்டா இருக்கேன்” என்றான்.

“என்ன, கம்பெனி நல்லா போகுதா?” என்று கேட்டார்.

“போகுது சார், எக்ஸ்போர்ட் கார்மென்ட் பிசினஸ் ஸ்டெடியா இருக்கு சார். என்ன… வருமானம் செலவுக்கே சரியாப் போகுது. சேவிங்க்ஸ் ஒன்னும் பண்ண முடியல” என்று வருத்தத்துடன் சொன்னான்.

“எல்லா பிசினஸும் அப்படித்தான் தம்பி, என்ன செய்யறது?. இந்த மாதிரி நடுத்தர வர்க்கத்து மக்களுக்காகவே எங்க கம்பெனில ஒரு ஸ்கீம் கொண்டு வந்திருக்காங்க. …. நீங்க ஆரம்பத்தில் கொஞ்சம் இன்வெஸ்ட் பண்ணினா உங்களுக்கு அந்த தொகைக்கு கூடுதலா ரெண்டு மடங்கு லோன் வட்டியில்லாம கொடுப்பாங்க. நீங்க மெதுவா திருப்பித் தரலாம். இந்த ஸ்கீம்ல சேர்ந்து நிறைய பேர் நன்மை அடைஞ்சிருக்காங்க. எங்கிட்ட ரிஜிஸ்ட்ரேஷன் ஃபார்ம் கூட இருக்கு. நீங்க வேணா எடுத்துக்கிட்டு நிதானமா வீட்டுல போய் இந்த ப்ரோஷரை படிங்க , முடிஞ்சா இன்வெஸ்ட் பண்ணுங்க. ஆனா…. ரிஜிஸ்டர் பண்றதுக்கு ஒரு ஐநூறு ரூபாய் சார்ஜ். அதையும் நீங்க இன்வெஸ்ட் பண்ணும்போது திருப்பிக் கொடுத்துடுவாங்க. நீங்க விருப்பப்பட்டா பண்ணுங்க, உங்க குடும்பத்துக்கு உதவியா இருக்கும்” என்றார் வேதமூர்த்தி.

மணிவண்ணனும் யோசிக்க ஆரம்பித்தான். என்ன ஒரு ஐநூறு ரூபாய்தானே. ரிஜிஸ்டர் செஞ்சுட்டு பின்னாடி ஒரு சிறு தொகையை லோன் எடுக்கலாம், அப்ப இந்த ஐநூறு ரூபாயும் திரும்ப வந்துடும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

வேதமூர்த்தி அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு, என்ன தம்பி, நான் வேணா ஒரு ஃபார்ம் தரட்டுமா ? என்றார். அவனும் ஒரு முடிவுக்கு வந்தவனாய் அவரிடமிருந்து ஒரு ரிஜிஸ்ட்ரேஷன் ஃபார்ம் ஒன்றை வாங்கிக் கொண்டு ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்தான். அவரும் ஒரு ரசீது புக்கை எடுத்து அதில் எழுதி ஒரு ரசீதை கிழித்துக் கொடுத்தார்.

மணிவண்ணனும் பத்திரமாக அந்த ரசீதை தன் பர்சில் வைத்துக் கொண்டான். பிறகு இருவரும் காபியைக் குடித்துவிட்டு மற்ற உலக விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்தனர்.

சென்னை நெருங்கவே, வேதமூர்த்தி, “நல்லது தம்பி, நான் தாம்பரத்தில் இறங்கிடுவேன். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, பிறகு சந்திக்கலாம் என்று சொன்னார். இரண்டு நிமிடங்களில் வண்டி  தாம்பரத்தில் வந்து நின்றது  அவர் கையை அசைத்துவிட்டு இறங்கிக் கொண்டார். ஒரு நல்ல மனிதரின் நட்பு கிடைத்ததை எண்ணி சந்தோஷப்பட்டுக் கொண்டான்.

மணிவண்ணனும் எக்மோர் எப்போது வரும், வீடு போய் சேர வேண்டும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு லக்கேஜ் எல்லாம் எடுத்து ரெடியாகி இறங்குவதற்கு தயாராக வைத்துக் கொண்டான். அரை மணி நேரம் கழித்து வண்டி எக்மோர் வந்தடைந்தது.

அனைவரும் வேகமாக வண்டியிலிருந்து இறங்கினர். மணிவண்ணனும் தன் பெட்டி, ஹேன்ட் பேக் எடுத்துக் கொண்டு வேகமாக இறங்கினான். ஸ்டேஷன் விட்டு வெளியே வந்து பஸ் ஸ்டாப்பிற்கு நடந்து செல்லும்போது, மணி பார்க்க தன் கையைப் பார்த்தான். வாட்சைக் காணவில்லை. போன மாதம்தான் மிகவும் ஆசைப் பட்டு, டைட்டனில் மூவாயிரம் ரூபாய் கொடுத்து அந்த வாட்சை வாங்கி இருந்தான். அது வாங்குவதற்கு அவன் எத்தனை மாதங்கள் சேமிக்க வேண்டியிருந்தது. இப்பிடி திடீரென்று காணாமல் போனதே என்று நொந்து போனான். எங்கு விழுந்ததோ, ட்ரெயினில் போய் பார்க்கலாமா, இந்நேரம் யாராவது எடுத்துக் கொண்டு போயிருப்பார்கள். ம்…… எல்லாம் என் தலை எழுத்து….இதோடு சேர்த்து அந்த ஐநூறு ரூபாயும் செலவழிந்து விட்டது. பணம் போகவேண்டிய நேரம் என்று தன்னையே நொந்து கொண்டான் மணிவண்ணன்.

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தவுடன் அவன் மனைவி ரெடியாக டிபன், காபி எல்லாம் செய்து வைத்திருந்ததால் சிறிது தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஆபீஸ் செல்லத் தயாரானான்.

இன்னிக்கு நிறைய வேலை இருக்கு, நாளை அந்த வேதா என்டர்ப்ரைஸ் போய்க் கொள்ளலாம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

அவன் மனைவியிடம் வாட்ச் தொலைந்து போனதை சொல்லவில்லை. அந்த காலை அமர்க்களத்தில் அவளும் அவன் கையை கவனிக்கவில்லை.

வாட்ச் தொலைந்து போனது மிகவும் ஏமாற்றமும், வருத்தமுமாக இருந்தது அவனுக்கு. அடுத்த நாள் நாலு மணிக்கு ஆபீசில் பெர்மிஷன் போட்டுவிட்டு அந்த வேதமூர்த்தி சார் கொடுத்த விசிட்டிங் கார்டை எடுத்துக் கொண்டான். நாற்பது நிமிடங்களில் அவன் அந்த ஆபீஸ் போய் சேர்ந்தான். வாசலில் ஒரு ப்யூன் , “யாரைப் பார்க்க வேண்டும் சார் ?” என்று கேட்டான். இவனும் வேதமூர்த்தி சாரைப் பார்க்கவேண்டும் என்றான்.

“லிஃப்டில் போங்க சார், இரண்டாவது மாடி, மூணாவது ரூம், வெளியிலேயே போர்ட் இருக்கும், போங்க சார்” என்றார்.

மணிவண்ணனும் நேராக அந்த ரூம் வாசலில் நின்று “மே ஐ கம் இன் சார் ?” என்றான்.

“ஷ்யூர், உள்ளே வாங்க,” என்று குரல் கொடுத்தார் உள்ளிருந்து.

இவனும் கதவைத் தள்ளிக் கொண்டு மெதுவாக உள்ளே நுழைந்தான். எஸ், யார் நீங்க? உங்களுக்கு என்ன வேண்டும்? என்று ஒரு வசீகரமான புன்னகையுடன் இவனைப் பார்த்துக் கேட்டார் அந்த எம்.டி வேதமூர்த்தி. மணிவண்ணனுக்கு மயக்கமே வந்துவிடும் போல இருந்தது. சார், நீங்க……. நான் வேதமூர்த்தி சாரைப் பார்க்க வேண்டும் என்றான்.

“எஸ்…. ஜென்டில்மேன், நான்தான் வேதமூர்த்தி, இந்த கம்பனியின் எம். டி.” என்றார்.

“அது வந்து….. வந்து…… சார் என்னிடம் இந்த விசிட்டிங் கார்டைக் கொடுத்து நான்தான் வேதமூர்த்தி என்று ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு என்னை இங்கு வந்து பார்க்கச் சொன்னார். ஒரு ரிஜிஸ்ட்ரேஷன் ஃபார்ம் ஒன்றையும்  ஃபில் அப் பண்ணி அதற்கு ஒரு ஐநூறு ரூபாயும் வாங்கிக் கொண்டு ஒரு ரசீது கொடுத்தார். ஏதோ இந்த கம்பனில ஒரு ஸ்கீம் இருக்காம், அதில் இன்வெஸ்ட் செய்தால், இரு மடங்கு வட்டியில்லா கடன் கொடுப்பீர்கள் என்றெல்லாம் அவர் சொன்னார். நானும் ஐநூறு ரூபாய் கட்டி ரிஜிஸ்டர் செய்து விட்டு இப்போ உங்க முன் நிற்கிறேன் என்று மூச்சு விடாமல் படபடவென சொல்லி முடித்தான் மணிவண்ணன். அந்த ஐநூறு ரூபாயையும் பின்னால் திருப்பித் தந்து விடுவார்கள் என்றும் சொன்னார் சார்” என்று அழமாட்டாத குறையாக சொல்லி முடித்தான்.

அவர் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, “எங்கே, அந்த ரசீது, ஃபார்ம் எல்லாவற்றையும் கொடுங்கள் என்று கேட்டார். மணிவண்ணன் இரண்டையும் அவரிடம் கொடுத்தான்.

சார், நீங்கள் நன்றாக ஏமாந்து போயிருக்கிறீர்கள். எங்கள் கம்பனி முறைப்படி ரிஜிஸ்டர் செய்யப்பட்ட ஒன்று. இந்த ரசீதை நன்றாகப் பாருங்கள், மேலே ரிஜிஸ்டிரேஷன் நம்பர் இல்லை. இந்த ஃபார்ம் நாங்கள் கொடுத்ததே அல்ல என்றார்.

அந்த மாதிரி எந்த ஸ்கீமும் எங்கள் கம்பனியில் கிடையாது. என்னுடைய கார்டை மிஸ்யூஸ் பண்ணி எவனோ ஒரு ராஸ்கல் உங்களை நன்கு ஏமாற்றி இருக்கிறான். நல்ல வேளை, ஒரு ஐநூறு ரூபாயோடு போச்சே, விட்டுத் தள்ளுங்கள், சின்ன சின்ன திருட்டு செய்யும் ஒரு கான்மேனிடம்தான் நீங்கள் ஏமாந்து இருக்கீங்க , உங்களைப் பார்த்தால் நல்ல படித்த இளைஞனாகத் தெரியுது. எதையுமே நன்கு ஆராய்ந்து பார்த்துத்தான் செய்யணும். அதுவும் ரயில் பிரயாணத்தில் நடந்தது என்று வேறு சொல்றீங்க, அப்போதே உங்களுக்கு சந்தேகம் வந்திருக்க வேண்டாமா? “ஓகே சார், நானே நேரில் வந்து உங்க ஆபீசில் பணம் கட்டி ரிஜிஸ்டர் செய்து விட்டு, இன்வெஸ்ட்மென்ட் பற்றி பிறகு முடிவெடுக்கிறேன் என்றல்லவா நீங்க சொல்லியிருக்கணும்? …. போகட்டும், இனிமேலாவது வெகு ஜாக்கிரதையாக இருங்கள். இது ஒரு படிப்பினை உங்களுக்கு” என்றார் அந்த  ஒரிஜினல் வேதமூர்த்தி.

பியூனைக் கூப்பிட்டு இரு காபி ஆர்டர் செய்தார் அவர்.

“எல்லாம் என் அஜாக்கிரதையால் ஏற்பட்ட அனுபவம் சார், இதை நான் மறக்கவே மாட்டேன். மிக்க நன்றி சார், நான் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான் மணிவண்ணன்.

ஐநூறு ரூபாய் மட்டுமல்ல, மூவாயிரம் பெறுமான டைட்டன் வாட்சையும் அல்லவா அந்த ஆளிடம் பறி கொடுத்து விட்டேன் என்று தனக்குள் நினைத்துக் கொண்டே பஸ் ஸ்டாப்பை நோக்கி வேகமாக நடையைக் கட்டினான் மணிவண்ணன்.

 

2 COMMENTS

  1. இழந்தது ரூபாய்5,00/ மற்றும் டைட் டன் வாட்ச் மட்டுமல்ல வாய்சவுடால் நபரிடம் ஏமாந்தது.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

தேடாதே !

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   தேடாதே ! தேடினால் காணாமல் போவாய் ! வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன... சுஜாதாவின் ‘தேடாதே’ என்ற நாவலின் ஆரம்பிக்கும் வரிகள் இவை. மிளகு போன்ற சின்ன வஸ்துவைத் தேடிக்கொண்டு நம் நாட்டுக்கு வந்தவர்களால் நாம்...

உலகெங்கும் தமிழோசை

0
  - ஸ்ருதி   சௌதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கப்போகிறது. இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான அரஃபா தினம் இசுலாமிய நாட்காட்டியில் பன்னிரெண்டாவது மாதமான துல் ஹஜ்...

இந்த ஆட்டத்தின் ஊடாக காதல் மலர்ந்திருக்கிறது. கவிதைகள் மலர்ந்திருக்கின்றன.

0
 நூல் அறிமுகம்   புதியமாதவி    வாசிப்போம் தமிழ் வளர்ப்போம் குழு   விளையாட்டுகள் வெறும் விளையாட்டுகள் மட்டுமல்ல, அவை  கடந்து வந்திருக்கும் பாதை மனித வரலாற்றை அப்படியே பிரதிபலிக்கின்றன. திறந்தவெளியில் விளையாடும் விளையாட்டுகளைவிட ஓரிடத்தில் அமர்ந்து விளையாடும் விளையாட்டுகள் மனித எண்ணங்களைக் கட்டமைத்தத்தில்...

உன்னதமான இசைக்கலைஞர்கள் இவற்றை செய்ய மாட்டார்கள்.

0
முகநூல் பக்கம் சுரேஷ் கண்ணன் முகநூல் பக்கத்திலிருந்து...   இசை ஞானத்தில் நான் ஒரு பாமரன் என்றாலும் இந்த லிடியன் நாதஸ்வரம் என்கிற இளைஞன் ஒரு சாதனையாளன் என்பதை ஒரு மாதிரி 'குன்சாக' உணர முடிகிறது. பியானோவில்...