0,00 INR

No products in the cart.

புத்தாண்டு சிறப்பிதழிலிருந்து….

36 ஆண்டுகள்  வங்கிப் பணி..30 நாடகங்களுக்கு மேல் எழுதி,தயாரித்து,இயக்கி நடித்துள்ள டி.வி ராதாகிருஷ்ணன் தன் நாடகங்களுக்காக பல முன்னணி அமைப்புகளிலிருந்து விருது பெற்றிருப்பவர். 20க்கும் மேற்பட்ட ஆன்மீக,சமூக,இலக்கிய நூல்கள் எழுதியிருக்கிறார். அவருடைய  “வால்மீகி ராமாயணம்” அமேசான் கிண்டிலில் மின்னூலாக வெளிவந்துள்ளது. கல்கி வாசகர்களுக்காக  உதவ கீதையை எளிய தமிழில் எவருக்கும் புரியும் வண்ணம்  அடுத்த இதழ் முதல் வாரந்தோறும் எழுதுகிறார்.

உத்தவ கீதை என்பது என்ன?
——————–

குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொன்னது “பகவத் கீதை”

உத்தவருக்குக் கண்ணன் சொன்னது “உத்தவ கீதை” எனப்படுகிறது.

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதல் அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி இறுதிவரை அவருடனேயே இருந்தவர் உத்தவர்.

அவர், தனக்கென தன் வாழ்நாளில் கண்ணனிடம் எந்த உதவியையோ, வரங்களையோ கேட்டதில்லை.

இந்நிலையில் துவாபரயுகத்தில் தனது அவதாரப்பணி முடிந்த நிலையில் கண்ணன்,
உத்தவரிடம், “உத்தவரே! இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல
வரங்களும், நன்மைகளும் பெற்றுள்ளனர். ஆனால் நீங்கள் இதுவரை என்னை எதுவுமே
கேட்டதில்லை… ஏதாவது கேளுங்கள்… உங்களுக்கு ஏதாவது நன்மைகள் செய்து விட்டு எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்” என்றார்.

அதற்கு உத்தவர், “கண்ணா…உன் லீலைகளில் எனக்குப் புரியாத  பல சந்தேகங்கள்
இருக்கின்றன. அவற்றைத் தீர்த்து வைப்பாயாக” என்றார்.

பின் உத்தவர் கேட்ட பல கேள்விகளுக்கான விளக்கத்தைக் கண்ணன் சொல்ல ஆரம்பித்தார்.

இதில் பிறப்பு, இறப்பு, இறைவனை வழிபட வேண்டிய முறை போன்றவற்றிற்கு எல்லாம் விளக்கம் உள்ளது.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

நல்ல கார்ட்டூனிஸ்ட் இடம் தமிழ்நாட்டில் இன்று காலியாகவே இருக்கிறது.

கார்ட்டூன்கள் பலவிதம் !   சுஜாதா தேசிகன்                                         ...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

0
வாசகர் ஜோக்ஸ் ஓவியம்: ரஜினி   “கூண்டில் ஏறியதும் தலைவர் சோடா கேட்டாராமே?” “பொதுக்கூட்ட மேடையில் ஏறிய நினைப்பில் கேட்டுவிட்டாராம்.” - சி.ஸ்ரீரங்கம், திருவெறும்பூர்   அப்பா: “ஸ்கூல் போனியோ டீச்சர்கிட்ட என்ன கேட்டே?” பையன்: “அடுத்த லாக்டவுன் எப்ப டீச்சர்னு கேட்டேன்.” - பி.பாலாஜி...

தேவி பிரசாத் இசையமைத்து, சமந்தா ஆடும் ஒரு பாடல் காட்சி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது

0
புஷ்பா தி ரைஸ் லதானந்த்   தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் செம்மரக் கடத்தலுக்குப் பயன்படும் லாரியின் ஓட்டுநராகக் கூலிக்கு வேலைசெய்யும் அல்லு அர்ஜுன் கடத்தல் தொழிலில் கடினமாக...

நீங்கள் எவ்வளவுதான் பிசியான வேலையில் இருந்தாலும், உங்களுடைய மனைவி, மக்களுக்காக  நேரம் ஒதுக்குங்கள்

0
அண்ணாத்தே வந்த பாதை – 11   எஸ்.பி.முத்துராமன்    /   எழுத்து வடிவம் : எஸ்.சந்திரமெளலி   "ஏவி.எம்.மின் “ராஜா சின்ன ரோஜா”  படப்பிடிப்பின்போது ரஜினி, கௌதமி மற்றும் குழந்தைகள் மட்டுமில்லாமல் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் கூட முழுமையான...

புத்தாண்டு சிறப்பிதழிலிருந்து…

2
1980ஆம் ஆண்டில் ஆசிரியர் கல்கி ராஜேந்திரன் மூலமாக பத்திரிகைதுறையில் அறிமுகமானவர் எஸ். சந்திர மௌலி. அன்று தொடங்கிய பேனாப் பயணம் கல்கியோடு இன்றும் தொடர்கிறது என்பதில் அவருக்கு மட்டுமில்லை கல்கிக்கும் பெருமை. இந்த...