0,00 INR

No products in the cart.

புத்தாண்டு சிறப்பிதழிலிருந்து…

1980ஆம் ஆண்டில் ஆசிரியர் கல்கி ராஜேந்திரன் மூலமாக பத்திரிகைதுறையில் அறிமுகமானவர் எஸ். சந்திர மௌலி. அன்று தொடங்கிய பேனாப் பயணம் கல்கியோடு இன்றும் தொடர்கிறது என்பதில் அவருக்கு மட்டுமில்லை கல்கிக்கும் பெருமை. இந்த நாற்பதாண்டுகளில் பேட்டிகள், கட்டுரைகள், கவர் ஸ்டோரிகள், நகைச்சுவை என வெரைட்டியாக ஆயிரக்கணக்கான படைப்புகள்! அவற்றில் சாமானிய ஆட்டோக்காரரின் பேட்டியும் உண்டு; மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமுடனான சந்திப்பும் உண்டு. சந்திர சேகர், வாஜ்பாய், வி.பி. சிங், ஐ.கே.குஜ்ரால், தேவ கௌடா, மன்மோகன் சிங் ஆகிய  இந்தியப் பிரதமர்கள், என்.டி.ராம ராவ், ஜோதி பாசு, உமா பாரதி போன்ற  மாநில முதல்வர்கள் என  இவர் சந்தித்த வி.வி.ஐ.பி.க்களின் பட்டியல் நீளமானது.

கல்கியின் மாவட்ட சிறப்பிதழ்கள், மாநில சிறப்பிதழ்கள் மட்டுமின்றி, கடல் கடந்து மலேசியா சிறப்பிதழுக்கும் பயணம், பார்வை, படைப்பு என பங்களிப்பு செய்தவர். இவர் கல்கியில் எழுதிய டைரக்டர் ஸ்ரீதர் மற்றும் நடிகர் நாகேஷின் வாழ்க்கை அனுபவத் தொடர்கள் பின்னர் புத்தகங்களாக வெளியாகி வாசகர்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றவை. நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, குஜராத்தில் விரிவான பயணம் மேற்கொண்டு, “குஜராத் டுடே” என்ற தலைப்பில் கல்கியில் சிறப்புக் கட்டுரைகள் எழுதியவர்; நரேந்திர  மோடியை சிறப்பு பேட்டி கண்டவர்.

கல்கியில் இவர் எழுதிய பெண் சிசுக்கொலை பற்றிய கவர் ஸ்டோரிக்காக “லாட்லி விருது”ம், ரோட்டரி சங்கத்தின் பத்திரிகையுலக சாதனையாளர் விருதும் பெற்றவர்.

அவரது இந்த நீண்ட பயணத்தில் – தான் கற்றது, பெற்றது, சந்திப்புகள், ஆச்சரிய அனுபங்கள் அனைத்தையும் நம்மோடு வரும் வாரங்களில்  பகிர்ந்துகொள்கிறார்.

2 COMMENTS

  1. ஆவலுடன் காத்திருக்கிறோம்,
    கல்கியின் சிறப்பான செல்ல்ல்லப் பிள்ளையின்
    அனுபவத் தொடருக்காக…

    நெல்லை குரலோன்
    பொட்டல்புதூர்

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

நல்ல கார்ட்டூனிஸ்ட் இடம் தமிழ்நாட்டில் இன்று காலியாகவே இருக்கிறது.

கார்ட்டூன்கள் பலவிதம் !   சுஜாதா தேசிகன்                                         ...

புத்தாண்டு சிறப்பிதழிலிருந்து….

0
36 ஆண்டுகள்  வங்கிப் பணி..30 நாடகங்களுக்கு மேல் எழுதி,தயாரித்து,இயக்கி நடித்துள்ள டி.வி ராதாகிருஷ்ணன் தன் நாடகங்களுக்காக பல முன்னணி அமைப்புகளிலிருந்து விருது பெற்றிருப்பவர். 20க்கும் மேற்பட்ட ஆன்மீக,சமூக,இலக்கிய நூல்கள் எழுதியிருக்கிறார். அவருடைய  “வால்மீகி...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

0
வாசகர் ஜோக்ஸ் ஓவியம்: ரஜினி   “கூண்டில் ஏறியதும் தலைவர் சோடா கேட்டாராமே?” “பொதுக்கூட்ட மேடையில் ஏறிய நினைப்பில் கேட்டுவிட்டாராம்.” - சி.ஸ்ரீரங்கம், திருவெறும்பூர்   அப்பா: “ஸ்கூல் போனியோ டீச்சர்கிட்ட என்ன கேட்டே?” பையன்: “அடுத்த லாக்டவுன் எப்ப டீச்சர்னு கேட்டேன்.” - பி.பாலாஜி...

தேவி பிரசாத் இசையமைத்து, சமந்தா ஆடும் ஒரு பாடல் காட்சி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது

0
புஷ்பா தி ரைஸ் லதானந்த்   தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் செம்மரக் கடத்தலுக்குப் பயன்படும் லாரியின் ஓட்டுநராகக் கூலிக்கு வேலைசெய்யும் அல்லு அர்ஜுன் கடத்தல் தொழிலில் கடினமாக...

நீங்கள் எவ்வளவுதான் பிசியான வேலையில் இருந்தாலும், உங்களுடைய மனைவி, மக்களுக்காக  நேரம் ஒதுக்குங்கள்

0
அண்ணாத்தே வந்த பாதை – 11   எஸ்.பி.முத்துராமன்    /   எழுத்து வடிவம் : எஸ்.சந்திரமெளலி   "ஏவி.எம்.மின் “ராஜா சின்ன ரோஜா”  படப்பிடிப்பின்போது ரஜினி, கௌதமி மற்றும் குழந்தைகள் மட்டுமில்லாமல் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் கூட முழுமையான...