0,00 INR

No products in the cart.

நாம கொஞ்சம் மாறியிருக்கலாம்….ஆனா அவங்க அப்படியே இருக்க வாயப்பு இருக்கு …

முகநூல் பக்கம்

நேற்று ரொம்ப ஒரு சந்தோஷமான விஷயம் நடந்தது…..

2015ல கோவை வந்த புதிதில் வேலை எதும் கிடைக்காமல் … மெகா மார்ட் ( தற்போது Unlimited) என்னும் ரீடைல் ஷோ ரூமில் விற்பனையாளராக இருந்தேன்…

காலை பத்து மணிக்கு கடையுனுள் சென்றால் இரவு பத்து மணிக்கு தான் வெளியே வரமுடியும்… இடையில் மத்திய சாப்பாட்டிற்க்கு 20 நிமிடம் ஓய்வு கிடைக்கும்

அதுவும் சாப்பாடு வீட்டில் இருந்து கொண்டு வந்தால் வெளியே போக கூட முடியாது…

ஹோட்டல்ல சாப்பிடனும்னு எதாவது காரணத்தை சொல்லி வெளியே சென்று வெளி காற்றை சுவாசிப்பதில் எப்போதும் ஒரு மகிழ்ச்சி….

வாரத்தில் ஒரு நாள் வீக்ஆஃப் அதுவும் இடைபட்ட நாள்தான்…

சனி, ஞாயிறு கண்டிப்பாக விடுப்பு இல்லை…. ஞாயிற்றுக்கிழமை எல்லோரும் வீட்டில் இருக்க நான் மட்டும் வேலையில்… இடைபட்ட நாளில் நான் மட்டும் வீட்டில் இருக்க எல்லோரும் வேலையில் இருப்பார்கள்….

நின்று கொண்டே இருப்பதால்… மத்தியம் 1 மணிக்கெல்லாம் பசிக்க ஆரம்பித்துவிடும்… சாப்பிட்டு மீண்டும் நிற்க ஆரம்பித்தால்… மாலை 5 மணிக்கெல்லாம் பசிக்க ஆரம்பிக்கும்….

மக்கள் துணி வாங்க வரும் கூட்டமும் மாலை 5 மணிக்கே துவங்கும். ஏழு மணி தாண்டியதும் பசி, சோர்வு என்று நம்மை கட்டி போட்டாலும்  புன்னகையுடன் ஒவ்வொறு வாடிக்கையாளர்களையும் வரவேற்போம்….

அந்த சோர்வு மற்றும் கஷ்டத்திலும் நாங்கள் ஒருவர் (55வயது இருக்கலாம்) வருகைக்காக காத்திருப்போம்…

ஆம் … அவர் வா.ஊ.சி பூங்காவில் பொரி, கடலை மற்றும் முறுக்கு விற்பவர்…. சரியாக 7:30 மணிக்கு கடைக்கு வந்து விடுவார்…அவர் தரும் 5ரூபாய் கடலையும் முறுக்கும் 10 மணிவரை என்னை உற்சாகமாக வேலை செய்ய வைக்கும்… அதிலும் கொஞ்சம் மிச்சப்படுத்தி மகனுக்கு கொண்டு வந்து கொடுத்த நாட்கள் நிறைய …

காசு இருந்தால் கொடுப்போம் இல்லைனா அக்கௌண்ட் தான்… சம்பளம் வந்ததும் கொடுப்போம்…

ஒரு நாள் அந்த ஷோ ரூமை விட்டு வெளியே வர வேண்டிய சூழல். அப்போது அவருக்கு 83 ரூபாய் பாக்கி தரவேண்டும். பிறகு வேறு ஒரு நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தாலும் பழையதை மறக்க முடியவில்லை என்று தான் சொல்லனும் குறிப்பா அந்த 83 ரூபாய். தற்போது கடனாக நான் சிலருக்கு உதவி செய்தாலும்… நான் பட்ட கடன் அந்த 83 ரூபாய் மிகப்பெரும் கடன்……

5 வருடத்திற்கு பிறகு அந்த ஐயாவை நேற்று நவஇண்டியா (கோவை) அருகில் எதார்த்தமாக பார்க்க நேரிட்டது….

அட ஆண்டவா…… என்று உடனே வண்டியை திருப்பி அவர் அருகில் சென்று …. நியாபகம் இருக்கானா…..

ம்ம்ம் இருக்கு…..

யாருனு சொல்லுங்க பார்க்கலாம் …!?

சொல்ல மாட்டேன் ஆனா நியாபகம் இருக்கு…

நான் யார் என்று அவருக்கு தெரியவில்லை அதுதான் உண்மை….

உடனே பர்சை எடுத்து பார்த்தேன்… ஒரு 200 ரூபாயும் சில சில்லரையும் தான் இருந்தது….

ATM போக வேண்டும் என்றால் அந்த டிராபிக் எல்லாம் தாண்டி போக வேண்டும்…

200 ரூபாய் பணத்தை கொட்டுத்து… அண்ணா பழைய பாக்கி இருக்கு ஆனா எவ்ளோனு தெரியலை இந்த பணத்தை வெச்சுக்கோங்க…

போன் இருக்கா …?

இல்ல தம்பி…..

சரி இங்க தான் நான் இருப்பேன். எதாவதுனா நீங்க வாங்கனு சில வார்த்தைகள் பேசிட்டு கிளம்பிட்டேன்….

அவ்ளோ நிம்மதியா இருந்துச்சு நேற்றைய தினம்.

நீங்களும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க… இந்த மாதிரி நிறைய விட்டுட்டு வந்திருப்போம்…

நாம கொஞ்சம் மாறியிருக்கலாம்….ஆனா அவங்க அப்படியே இருக்க வாய்ப்பு இருக்கு …

தேடி பாருங்க….

 வினோத் ஞான்சேகரன்  முகநூல் பக்கத்திலிருந்து…

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

உன்னதமான இசைக்கலைஞர்கள் இவற்றை செய்ய மாட்டார்கள்.

0
முகநூல் பக்கம் சுரேஷ் கண்ணன் முகநூல் பக்கத்திலிருந்து...   இசை ஞானத்தில் நான் ஒரு பாமரன் என்றாலும் இந்த லிடியன் நாதஸ்வரம் என்கிற இளைஞன் ஒரு சாதனையாளன் என்பதை ஒரு மாதிரி 'குன்சாக' உணர முடிகிறது. பியானோவில்...

நல்ல வேளை. எனக்கு இங்கே பேச வாய்ப்பு கிடைத்தது.

1
முகநூல் பக்கம் சபேசன் இராமஸ்வாமி முகநூல் பக்கத்திலிருந்து...   அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம். அவர் ஒரு பெண்ணின் திருமணத்தை நிறுத்த உத்தரவிட்டார். அப்போது திருச்சியில்  கலியமூர்த்தி ஐ.பி.எஸ். உயர் அதிகாரியாக இருந்தார். அவருக்கு அப்துல் கலாமிடமிருந்து...

கோர்ட்டில் நிறுத்தினாலே நீங்கள் குற்றவாளிதான்.

0
நீயாண்டர் செல்வன் முகநூல் பக்கத்திலிருந்து.... குற்றம் சுமத்தபட்டால் மட்டுமே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார் எனும் லாஜிக் எடுபடாத நாடு ஒன்று உள்ளது. அங்கே அரசு வழக்கறிஞர் உங்களை கைது பண்ணி கோர்ட்டில் நிறுத்தினாலே...

அப்போதே அக்னிபாத் இருந்திருந்தால்…..?!

0
முகநூல் பக்கம்   Nagarajarao Ramakrishnan  முகநூல் பக்கத்திலிருந்து...   நான் இளைஞனாக இருக்கும் போது ஏர்போர்ஸில் சேர்ந்து நாட்டுக்காக சேவை புரியவேண்டும் என்று ஒரு ஆசை என் அடி மனதில் வேரூன்றி இலை தழையெல்லாம் கூட விட்டு...