0,00 INR

No products in the cart.

ஜெனிவாவிலிருந்து திருப்பாவை

– ஆதித்யா

 

“மாதங்களில் நான் மார்கழி” என்கிறார் கண்ணன். .  இந்தியாவின் பல மாநிலங்களில் மார்கழி மாதத்தை ஒரு விழா மாதமாகவே கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில்  அந்த மாதம் முழுவதும் வீடுகளின் முன்னால் வண்ணக் கோலங்களிட்டு மலர்களால் அலங்கரித்து  ஆண்டாளின் திருப்பாவை பாடல்களைப் பாடி கொண்டாடி மகிழ்கிறார்கள்.  இன்றைய  உலகமான முகநூல், இன்ஸ்டாகிராம் தளங்களில் பலவிதமான  மார்கழி கோலங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.  அவற்றில் அண்மையில் முகநூலில்  திருப்பாவை பாசுரங்களுடன் வெளியாகிருந்த ஹரிணி கிருஷ்ணவராஹனின் சில மாறுதலான  படங்கள் நம்மை கவர்ந்தன.  அவை பற்றி அவரிடம் பேசியபோது…

உங்களைப்பற்றி சொல்லுங்கள்?
விஜயவாடாவில் பிறந்து  தெலங்கானாவின்  பல நிலக்கரி சுரங்கப் பகுதிகளில் வளர்ந்தவள் நான். (தந்தை சுரங்களின் தலைமை மருத்தவ அதிகாரி) எங்கள் மூதாதையர்கள் தமிழ் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து விஜய நகர சமஸ்தானத்தில் புலவர்களாக இருந்தவர்கள். நான் முதுகலைப் படிப்பு முடித்தபின் ஹைதராபாத்தில் பணியிலிருந்தேன். திருமணத்துக்குபின் சுவிட்சர்லாந்தில் ஜெனிவா நகரில் வாழ்க்கை. சிறுவயது முதலே கதை கேட்பதிலும் சொல்லுவடிலும் படம் வரைவதிலும் ஆர்வம் அதிகம்.

நீங்கள் வரையும் படங்கள்  எந்த வகையைச் சேர்ந்தது?
மஹராஷ்டிர மாநிலத்தில் ஷ்யாத்திரி மலைத்தொடர் பகுதிகளில் வாழும்  பழங்குடி மக்களின் ஓவியக்கலை இது. இதன்பெயர்  வார்லி (WARLI ART)  பழைமையான இந்த ஓவியக்கலையின்  தொடக்கம் 10ஆம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால் 1970 வரை வெளியுலகத்தால் அறியப்படவில்லை.  இயற்கையில் கிடைக்கும் பொருட்களால்  காவி, வெள்ளை வண்ணங்கள் தயாரிக்கப்பட்டு வீடுகளின் சுவற்றில் வரையப்படும் ஓவியங்கள் இவை.

இந்த கலையை யாரிடம் கற்றீர்கள்?
இது ஒரு இந்திய பழங்குடி மக்களின் ஓவியக்கலை என்பதை அறியாமலேயே நான் பார்த்த படங்களின் அடிப்படையில் வரைந்து கொண்டிருந்தேன். ஜெனிவாவில் நடந்த ஓர் ஓவியக் கண்காட்சியில் இந்தபாணி ஓவியங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு  அந்த கலைஞரிடமிருந்து தான் இது நம் மலைவாழ் மக்களின் ஓவியப்பாணி என்பதை அறிந்துக் கொண்டேன். அன்று முதல் இந்த ஓவியத்தை முறையாக கற்க ஒரு குருவைத் தேடிக்கொண்டிருந்தேன்.

இன்று ஓவியங்கள் கற்க  யூட்யூப், இன்ஸ்டாகிராம் போல் வழிகள்  இருந்தாலும் நான் முறையாக ஒரு குருவிடம் கற்கதான் விரும்பினேன். கடைசியில்  என் நீண்ட தேடலுக்கு விடையாக ’ஆயுஸ்’ என்ற அமைப்பு (ஆதிவாசிகளின் யுவ சக்தி) என்ற அமைப்பின் மூலம்  ’தாஹனு’ என்ற பழங்குடி கிராமத்தில்  வாழும்  சந்தீப் போஹீர்(SUNDHIP BHOIR) என்ற  பழங்குடி ஓவியரை  அறிந்து அவரிடம் கற்றேன்.

அந்த பழங்குடி மக்களின்  கிராமத்துக்குப் போய் கற்றீர்களா?
ஆம்.   மஹராஷ்டிர மாநிலத்தில்  ‘தானு’ என்ற மலையும் கடலும் சார்ந்த கிராமத்தில் வசிக்கும் அந்த ஓவியரிடம் கற்றேன். அது ஒரு இனிய அனுபவம். கடல், மலை அழகான சூரிய உதயம், எளிமையாக வாழும் வெள்ளந்தியான மக்கள்  என்ற சூழலில், தங்கள் மொழியைத்தவிர மற்ற எந்த மொழியையும் அறியாத அவர்களிடம் சைகை மொழியில் உரையாடினேன். இந்த ஓவியம் முக்கோணம், சதுரம், வட்டம் போன்ற ஜியோமிட்டிரி வடிவங்களை மட்டுமே கொண்டது. வளைவான கோடுகள் கிடையாது. ஆதி மனிதன் அறிந்த சூரியன், மலை மரம் வடிவங்களை மட்டுமே அறிந்திருந்த மனிதன்  உருவாக்கிய ஓவிய வடிவம் என்பதை அவர்களிடமிருந்து புரிந்து கொண்டேன்.

அவர்களின் ஓவியத்தையும் கலைப்பொருட்களை  மட்டுமே அங்கு வருபவர்களிடமிருந்து மாறுபட்டு நான் அங்கு ஓவியம் கற்க வந்திருக்கிறேன் என்பது அவர்களுக்கு ஆச்சரியத்தையும்  மகிழ்ச்சியையும் தந்தது.  என்னுடைய ஆழமான ஆர்வத்தைக் கண்டு என் ஆசிரியர்  நான் சந்திக்க விரும்பிய  ’ஜிவ்ய சோம மாஷே’ என்ற கலைஞரை அறிமுகப்படுத்தினார்.  இவர் பத்ம ஶ்ரீ விருது பெற்றவர், இந்த  பழங்குடி மக்களின் ஓவியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்.  அது பிரபலமடைய உதவியவர்.

இந்த ஓவியப்பாணியில் எத்தனை ஆண்டுகளாக வரைகிறீர்கள்?
பத்தாண்டுகளுக்கும் மேலாக வரைந்துகொண்டிருக்கிறேன். இந்தக் கொரோனா காலத்தில்  குழந்தைகளுக்கு இதை ஆன்லைன் மூலம் ஒர்க் ஷாப்கள் நடத்தி கற்பிக்கிறேன். விரும்புவர்களுக்குக் கற்றுத்தர தயாராகியிருக்கிறேன்.  என்னுடைய முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்தப்பாணியில் திருப்பாவைக்கு ஓவியங்கள் வரையும்  எண்ணம் எப்படி எழுந்தது?
இந்த ஓவியக்கலை படத்தின் வழியே கதை சொல்வதற்காக அமைந்தது.  நண்பர் ஒருவரின் 60 ஆம் ஆண்டு திருமணவிழாவிற்கு அவர்கள் வாழ்க்கையின் முக்கியக் கட்டங்களை இந்தப்பாணியில் ஓவியமாக்கி பரிசளித்தேன். மிக மகிழ்ச்சியடைந்தார்கள். அடுத்த கட்டமாக நமது தெய்வங்களான இராமர் கிருஷணர் விஷ்ணுவின் அவதாரங்களை வரைந்தேன். இந்த வார்லி ஓவிய அடிப்படைகளான  முக்கோணங்கள் வட்டங்கள் சதுரங்கள் மூலம் சொல்ல முடியும் என்பதை உணர்ந்தேன்.

நான் வைஷ்ணவ சம்பிரதாயங்களையும்  நாலாயிர திவ்ய பிரபந்தங்களையும் ஆன்லையனில் குருவின்மூலம் கற்றுக்கொண்டுவருகிறேன்.  திருப்பாவையில் சொல்லப்படுவது ஆண்டாளின் கதை, சம்பவங்களின் தொகுப்புத் தானே அதை இந்த ஓவியத்தில் காட்சிப்படுத்தினால் என்ன என்று தோன்றிற்று.  மார்கழியில் ஒவ்வொரு நாளும் காலையில் 4 மணிக்கு  அந்தந்த நாளுக்கான பாடலின் காட்சியை வரைகிறேன்.  நண்பர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இப்போது சிலர் சொன்ன யோசனையின் பேரில் அந்தப் படத்துக்கான விளக்கமாகப் படத்துடன்  அந்தப் பாசுரத்தின் பொருளையும் ஆங்கிலத்தில் கொடுக்கிறேன்.

முகநூலைத்தவிர உங்கள் ஓவியங்களை காட்சிப் படுத்தியிருக்கிறீர்களா?
ஜெனிவாவில் ’பொலீரோ’ என்ற அமைப்பு  ஆர்ட்டிஸ்டிஸ் டீசி (Artistes d’ici”)  என்ற கண்காட்சியை நடத்துகிறது. அதில்  வைக்கப்பட்டிருந்த இந்த ஓவியங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. சென்னையில் சில காட்சிகள் நடந்திருக்கின்றன.  விரும்பும் நண்பர்களுக்கு  பைகளில் அச்சிட,  கோஸ்ட்டர்களில், திருமண அழைப்புகளில் இடம் பெற வரைந்து கொடுக்கிறேன். இந்த ஓவியப்பாணியை உலகெங்கிலுமிருக்கும் ஓவியர்களிடம் எடுத்திச் செல்ல விரும்புகிறேன்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

நல்ல கார்ட்டூனிஸ்ட் இடம் தமிழ்நாட்டில் இன்று காலியாகவே இருக்கிறது.

கார்ட்டூன்கள் பலவிதம் !   சுஜாதா தேசிகன்                                         ...

புத்தாண்டு சிறப்பிதழிலிருந்து….

0
36 ஆண்டுகள்  வங்கிப் பணி..30 நாடகங்களுக்கு மேல் எழுதி,தயாரித்து,இயக்கி நடித்துள்ள டி.வி ராதாகிருஷ்ணன் தன் நாடகங்களுக்காக பல முன்னணி அமைப்புகளிலிருந்து விருது பெற்றிருப்பவர். 20க்கும் மேற்பட்ட ஆன்மீக,சமூக,இலக்கிய நூல்கள் எழுதியிருக்கிறார். அவருடைய  “வால்மீகி...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

0
வாசகர் ஜோக்ஸ் ஓவியம்: ரஜினி   “கூண்டில் ஏறியதும் தலைவர் சோடா கேட்டாராமே?” “பொதுக்கூட்ட மேடையில் ஏறிய நினைப்பில் கேட்டுவிட்டாராம்.” - சி.ஸ்ரீரங்கம், திருவெறும்பூர்   அப்பா: “ஸ்கூல் போனியோ டீச்சர்கிட்ட என்ன கேட்டே?” பையன்: “அடுத்த லாக்டவுன் எப்ப டீச்சர்னு கேட்டேன்.” - பி.பாலாஜி...

தேவி பிரசாத் இசையமைத்து, சமந்தா ஆடும் ஒரு பாடல் காட்சி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது

0
புஷ்பா தி ரைஸ் லதானந்த்   தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் செம்மரக் கடத்தலுக்குப் பயன்படும் லாரியின் ஓட்டுநராகக் கூலிக்கு வேலைசெய்யும் அல்லு அர்ஜுன் கடத்தல் தொழிலில் கடினமாக...

நீங்கள் எவ்வளவுதான் பிசியான வேலையில் இருந்தாலும், உங்களுடைய மனைவி, மக்களுக்காக  நேரம் ஒதுக்குங்கள்

0
அண்ணாத்தே வந்த பாதை – 11   எஸ்.பி.முத்துராமன்    /   எழுத்து வடிவம் : எஸ்.சந்திரமெளலி   "ஏவி.எம்.மின் “ராஜா சின்ன ரோஜா”  படப்பிடிப்பின்போது ரஜினி, கௌதமி மற்றும் குழந்தைகள் மட்டுமில்லாமல் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் கூட முழுமையான...