
"கூண்டில் ஏறியதும் தலைவர் சோடா கேட்டாராமே?"
"பொதுக்கூட்ட மேடையில் ஏறிய நினைப்பில் கேட்டுவிட்டாராம்."
– சி.ஸ்ரீரங்கம், திருவெறும்பூர்
அப்பா: "ஸ்கூல் போனியோ டீச்சர்கிட்ட என்ன கேட்டே?"
பையன்: "அடுத்த லாக்டவுன் எப்ப டீச்சர்னு கேட்டேன்."
– பி.பாலாஜி கணேஷ், சிதம்பரம்
"மன்னர் ஏன் மிகவும் கலக்கமாக உள்ளார்?"
"அவர் போர்க்களத்திலிருந்து ஓடிவந்ததைப் படம் எடுத்து யாரோ ஓ.டி.டி.யில் வெளியிடப் போவதாகக் கூறினார்களாம்."
– வெ.பாலாஜி, சென்னை
"மாப்பிள்ளை பையன், பொண்ணுக்குப் பக்கத்துல உட்கார்ந்திருந்த தோழி கழுத்துல தாலி கட்டிட்டானாமே?"
"பெண்ணைவிட தோழி நிறைய நகையும் மேக்-அப்பும் போட்டிருந்ததால பையன் ஜெர்க் ஆயிட்டானாம்."
– விரேவதி, தஞ்சை
"என்ன சார், அந்த ஆபிசு பத்திகிட்டு எரியுதுன்னு சொல்றாங்க?"
"அதுவா… அங்க உள்ளவங்க 'தீயா' வேலை செய்கிறார்களாம்!"
– ஆர். சுந்தரராஜன், சிதம்பரம்
"பளுதூக்கும் போட்டிக்கு நம் நாட்டின் சார்பில் யாரை அனுப்பிவைக்கப் போகிறார்கள் மந்திரியாரே?"
"என்ன சேடிப்பெண்ணே, இப்படிக் கேட்டுவிட்டாய்… மகாராணியார் பல்லக்குத் தூக்கிகளை அனுப்பி வைத்தால் பதக்கம் நிச்சயம்!"
– சு.அருண்பிரகாஷ், குமாரகிரி