0,00 INR

No products in the cart.

நீயா? நானா? பார்க்கலாம் ஒரு கை!

பொலிடிகல் பிஸா

– எஸ். சந்திர மௌலி

 

குடும்பக் கட்சி

குடும்பக் கட்சி  என்று  வாரிசு அரசியல் செய்யும்  காங்கிரஸ், தி.மு.க.  உட்பட அனைத்து  அரசியல்  கட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்துவந்த மம்தா பானர்ஜி, கடந்த சில ஆண்டுகளாக அப்படி வசைபாடுவதை நிறுத்திக் கொண்டுவிட்டார். காரணம் என்னவென்று சொல்லவேண்டிய தேவையில்லை. இப்போது, அவரது கட்சியின் நெ. 2 ஆக இருப்பவர், அவரது உறவினரான அபிஷேக் பானர்ஜி. அண்மையில், நடந்த உள்ளாட்சித் தேர்தலில், ‘கஜாரி பேனர்ஜி’ என்ற பெண்மணிக்கு சீட் கொடுத்தார் மம்தா. கஜாரி, மம்தாவின் சகோதரரியின் மனைவி! இதன் பின்னணி என்ன தெரியுமா? மம்தாவின் சகோதரர் கார்த்திக், பா.ஜ.க.வில் சேர திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்துவதாக கிசுகிசுக்கப்படுவதுதான்!   அட அப்படி போகுதா விஷயம்!

அடி மேல் இடி

ந்திர சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்த சந்திரபாபு நாயுடுவுக்கு சமீபத்திய உள்ளாட்சித் தேர்தலிலும் படுதோல்வி! அதிலும் குறிப்பாக அவரது சொந்தத் தொகுதியான குப்பம் தொகுதிக்குட்பட்ட ஏரியாக்களிலேயே, தெலுங்கு தேசம் கட்சி தோல்வியைத் தழுவியது நாயுடுவை மிகுந்த அப்செட் ஆக்கிவிட்டது என்கிறார்கள் அவரது கட்சியின் மூத்த தலைவர்கள். குப்பம் தொகுதியில் ஒரு வீடு கட்டி அங்கே  அடிக்கடி விசிட் அடியுங்கள்!  இல்லையென்றால், அடுத்த தேர்தலில்  குப்பம் தொகுதியும் கை நழுவி விடும் என எச்சரிக்கிறார்கள் நாயுடுவுக்கு நெருக்கமானவர்கள்!

நீயா? நானா? பார்க்கலாம் ஒரு கை!

ராஜஸ்தானில் வானிலை சூழ்நிலைப்படி புயல் எல்லாம் வராது என்றாலும், ராஜஸ்தான் அரசியலில் என்றைக்குமே புயல் ஓயாது. கொஞ்ச காலமாக சற்று அடங்கி இருந்த அஷோக் கெலாட், சச்சின் பைலட் மோதல் மீண்டும் தலைதூக்கியுள்ளது.  ஏதோ சூட்சுமம் செய்து, மீண்டும் ராகுலுக்கு நெருக்கமாகிவிட்டார் சச்சின் பைலட் என நொந்து போயிருக்கிறார் முதலமைச்சர் அஷோக் கெலாட். அண்மையில் ராஜஸ்தானில் நடந்த காங்கிரஸ் பேரணியைப் பார்வையிட முதல் வரிசையில் முக்கியத்துவமான சீட் பைலட்டுக்கு ஒதுக்கப்பட்டதாம். அது மட்டுமில்லை, சச்சின் பைலட்டோடு அனுசரணையாகப்போகும்படி கேலாட் அறிவுறுத்தப்பட்டிருக்கிறாராம்.

கட்சி யார் கட்டுப்பாட்டில்?

வெகுநாட்களாக நியூசில் அடிபடாமல் இருந்த பீகாரின் லாலு பிரசாத் யாதவ், அண்மையில் தன் டுவிட்டரில் வெளியிட்ட ஒரு சின்ன வீடியோ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 1977 மாடல் ஜீப் ஒன்றை லாலு ஓட்டுவது போன்ற வீடியோ அது. வீடியோ வெளியான கையோடு, “பிசியான ரோடில் ஜீப் ஓட்டும் அளவுக்கு நலமாக இருக்கிறார் என்றால், உடல் நிலையை பாதிப்பு என காரணம் காட்டி, கோர்ட் கேஸ்களில் ஆஜராவதிலிருந்து விலக்கு தரவேண்டும் என ஏன் கேட்டுக் கொண்டிருக்கிறார்  லாலு பிரசாத்?” என கேள்வி எழுந்துள்ளது.  அடுத்த கேள்வி, அவரிடம் டிரைவிங் லைசென்ஸ் இருக்கிறதா? ஆனால், சர்ச்சைகளுக்கு பதிலளிக்காமல் மெளனம் சாதிக்கிறார் லாலு. “கட்சி இன்னமும் தன் கட்டுப்பாடில்தான் உள்ளது என்பதை இந்த வீடியோ மூலமாக சொல்கிறார் லாலு என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

களமிறங்கும் இன்னொரு  வாரிசு

கோவாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கப்போகிறது. அதில், மறைந்த மத்திய அமைச்சரும், கோவா முன்னாள் முதலமைச்சருமான மனோகர் பரிக்கரின் மகன் உட்பல் பரிக்கர் பா.ஜ.க.சார்பில் போட்டியிட விரும்புகிறார். ஆனால், பா.ஜ.க. மேலிடம் இன்னமும் அதற்கு பச்சைக் கொடி காட்டவில்லை.  கடந்த தேர்தலிலேயே அவர் போட்டியிட விரும்பினார் என்றாலும், பா.ஜ.க. மேலிடம், முன்னாள் மஹாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மூலமாக, அவரை சமாதானம் செய்துவிட்டது. இந்த முறை உட்பல் பரிக்கார் தேர்தலில் தனக்கு சீட் கொடுத்தே ஆகவேண்டும் என அடம் பிடிக்கிறாராம். பா.ஜ.க. இன்னமும் இறுதி முடிவு எடுக்கவில்லையாம்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

நல்ல கார்ட்டூனிஸ்ட் இடம் தமிழ்நாட்டில் இன்று காலியாகவே இருக்கிறது.

கார்ட்டூன்கள் பலவிதம் !   சுஜாதா தேசிகன்                                         ...

புத்தாண்டு சிறப்பிதழிலிருந்து….

0
36 ஆண்டுகள்  வங்கிப் பணி..30 நாடகங்களுக்கு மேல் எழுதி,தயாரித்து,இயக்கி நடித்துள்ள டி.வி ராதாகிருஷ்ணன் தன் நாடகங்களுக்காக பல முன்னணி அமைப்புகளிலிருந்து விருது பெற்றிருப்பவர். 20க்கும் மேற்பட்ட ஆன்மீக,சமூக,இலக்கிய நூல்கள் எழுதியிருக்கிறார். அவருடைய  “வால்மீகி...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

0
வாசகர் ஜோக்ஸ் ஓவியம்: ரஜினி   “கூண்டில் ஏறியதும் தலைவர் சோடா கேட்டாராமே?” “பொதுக்கூட்ட மேடையில் ஏறிய நினைப்பில் கேட்டுவிட்டாராம்.” - சி.ஸ்ரீரங்கம், திருவெறும்பூர்   அப்பா: “ஸ்கூல் போனியோ டீச்சர்கிட்ட என்ன கேட்டே?” பையன்: “அடுத்த லாக்டவுன் எப்ப டீச்சர்னு கேட்டேன்.” - பி.பாலாஜி...

தேவி பிரசாத் இசையமைத்து, சமந்தா ஆடும் ஒரு பாடல் காட்சி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது

0
புஷ்பா தி ரைஸ் லதானந்த்   தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் செம்மரக் கடத்தலுக்குப் பயன்படும் லாரியின் ஓட்டுநராகக் கூலிக்கு வேலைசெய்யும் அல்லு அர்ஜுன் கடத்தல் தொழிலில் கடினமாக...

நீங்கள் எவ்வளவுதான் பிசியான வேலையில் இருந்தாலும், உங்களுடைய மனைவி, மக்களுக்காக  நேரம் ஒதுக்குங்கள்

0
அண்ணாத்தே வந்த பாதை – 11   எஸ்.பி.முத்துராமன்    /   எழுத்து வடிவம் : எஸ்.சந்திரமெளலி   "ஏவி.எம்.மின் “ராஜா சின்ன ரோஜா”  படப்பிடிப்பின்போது ரஜினி, கௌதமி மற்றும் குழந்தைகள் மட்டுமில்லாமல் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் கூட முழுமையான...