0,00 INR

No products in the cart.

அட்டைப்படம் அசத்தல்

‘அப்பா ரொம்ப கோபக்காரர்’ சிறுகதை படித்தேன். முன்கோபி, கோபக்காரன் என்று விமர்சிக்கப்படும் மாதவனின் அப்பா , கதை முழுவதும் அப்பாவை எடுத்தெறிந்து பேசும் கோபக்காரர் என்று சித்தரிக்கப்பட்டுள்ளதையும், , ஆஸ்பிடலில் அட்மிட் ஆகியுள்ள மனைவியின் காலை தடவிக் கொடுத்து விட்டு, திரும்பி நின்று அவர் கண்ணீர் மல்குவது மனைவி மீதுள்ள பாசத்தின் ஆர்ட்டீசியன் ஊற்று அவருள் இருப்பதை , கதையை  படிப்பவர்களை மலைக்க வைக்கிறது.
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

ணக்கம்.  “தமிழ்நாட்டின் வானிலை மனிதன் பிரதீப் ஜான்” அவர்களின் நேர்காணல் படித்ததும் ஒரு வானிலை அறிக்கை கேட்டது போல மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டிற்குள் உட்கார்ந்து மழை வருமா? வராதா என்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு  நல்ல தகவல்களை சொல்லுவது  பாராட்டுக்குரியது.  அருமையான நேர்காணல் ஒன்றை பிரசுரித்து எங்களுக்கு வானிலை அறிக்கை எப்படி சொல்லப்படுகிறது என்று புரிய வைத்த “கல்கி” இதழுக்கு பாராட்டுக்கள்.                       
–  பிரகதாநவநீதன், மதுரை

‘இந்தியா இந்தியர்களின் நாடு என்று தராசார் கூறியுள்ளதே  சரி.

லக மகா கவிஞன் பாரதி ‘வங்கத்தில்  பிறந்திருந்தால்  நோபல் பரிசு வாங்கியிருப்பான் என்று கவிஞர். கண்ணதாசன்  ஆதங்கப்பட்டுள்ளதில் தமிழர்களை தாண்டி ,  உலகில் பாரதியின்  எண்ணத்தை படித்த , கடைப்பிடிப்போர்  ஆதங்கமும்  அடங்கும்.
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

21 ஆண்டுகளுக்கு  பிறகு ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டத்தை இந்தியாவிற்கு பெற்றுத்  தந்திருக்கும்  21 வயதுடைய ஹர்னாஸ் சந்து,  “நம்மைப்பற்றி நாம் தான் பேச வேண்டும்” என்பது துணிவான, இன்றைய இளைஞர்களுக்கு தேவையான அறிவுரை.
– லலிதா சடகோபன்,  ஶ்ரீரங்கம்

னப் பெருக்கத்துக்கு மட்டுமே ஒரு பெண்ணுக்கு ஆண் தேவை;மற்றபடி, அவளுக்கு அவன் கணவனாக தொடர்வது அனாவசியம்; தான் பெற்ற குழந்தையின் தந்தையாக இருந்தால் போதும் என்ற மேலை நாட்டு கலாச்சார போக்கை அருமையாக படம் பிடித்துக் காட்டியது, “சிங்கிள் மதர்” தெலுங்கு மொழிமாற்ற சிறுகதை.
– உஷா, நாமக்கல்.

ட்டைப்படம் அசத்தல்  பேட்டியை உள்ளே தேடிப் பாத்து ஏமாந்தேன்!
-பாண்டியன், தூத்துக்குடி

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

வேட்டிகட்டி  காத்திருக்கும்  “தம்பிக்கு”  வாழ்த்துகள்

0
“ஒரு நாய் கூட மீறாத சட்டம்”  என்ற எமர்ஜென்சி காலத்தைப்பற்றிய கட்டுரை சூப்பர்,  மிகையில்லாத சரித்திர பதிவு. - தமிழரசு, ஈரோடு ஒரு கட்சியை ஒவ்வொரு தலைவர் மறைவிற்கு பிறகு சின்னம் முடக்கம், பிளவு  என்று...

ஆரம்பமே அசத்தலாகயிருக்கிறது.

1
  உங்கள் குரல்   மத்திய அமைச்சரவை சார்ந்த இலாகாவில் பல லட்சம் இந்திய இளைய சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகள் இருந்தும் அவைகள் தனியார் கார்பரேட் நிறுவனங்கள் மூலம் பலன் தரும் விஷயமாகவும் அமைத்து விட்டு, அக்னி...

கேள்விகளும் பதில்களும்  அவரைப் போலவே அழகாக இருந்தது.

2
யார் வேண்டுமானாலும் யூடியூப் சானல் துவங்கலாம் என்ற நிலையில் ஜாதி, மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோக்கள் யூடியூபில் பதிவு செய்யப்படுவது பல பிரச்னைகள், மோதல்களை உருவாக்கும். யூடியூபில் பதிவு செய்யப்படுகின்ற ஆபாச வீடியோக்கள்...

“கண்ணனின் விளக்கம்” உண்மையின் உரைகல்.

0
உங்கள் குரல்    மணிரத்தினத்தின் “அலைபாயுதே” படம் மாதிரி இரண்டு தடவை படித்த பின்பே கதை புரிந்தது . இனி, எங்கள் வீட்டு “டோபி”யை பார்க்கும் போது இந்த கதை தான் நினைவுக்கு வரும். - ஜானகி பரந்தாமன், ...

ஜாதியைச் சுட்டிக்காட்டும் கிராமங்களின் பெயர்களை என்ன செய்யப் போகிறார்கள்?

0
உங்கள் குரல்    ஜூன் 3ம் அதுவுமாய் கலைஞா்  பிறந்தநாளை  முன்னிட்டு  கலைஞா்  படம் அட்டைப்படமாக  அலங்காிக்கும்  என நினைத்தேன். இருப்பினும்  சொல்லாமல்  சொல்லும் விதமாய் பிரதமா் மோடி - முதல்வா் ஸ்டாலின் படத்தைப் போட்டு ...