எளிய நடை. சொல்ல வரும் கருத்துகளில் தெளிவு.

எளிய நடை. சொல்ல வரும் கருத்துகளில் தெளிவு.
Published on

நூல் அறிமுகம்

'தண்டவாளங்கள்' சிறுகதைத் தொகுப்பு –
இனிமையான வாசிப்பு அனுபவம்.

முனைவர் வ.வே.சுப்ரமணியன்

ளிய நடை. சொல்ல வரும் கருத்துகளில் தெளிவு. இடறிச் செல்லாத கதாபாத்திரங்கள். எல்லாக் கதைகளும் பல பிரபல இதழ்களில் பிரசுரமாகி பரிசுகளும் பாராட்டும் பெற்ற கதைகள். அவற்றை ஒரே நூலில் கண்டுபடித்து ரசிப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

முதிர்ந்தவர்களால் முதிர்ந்தவர்களுக்கு எழுதப்பட்ட கதைகள் என்பதனால் இவை இளையோர்க்கு 'தேவையில்லை' என்று சொல்ல முடியாது. காதல், பாசம், அன்பு, உறவு இவைகள் அனைவருக்கும் பொதுவானவை. இன்னும் கேட்டால் இக்கதைகளை, இளைஞர்களே அதிகம் படிக்கவேண்டும். வாழ்க்கையின் வளர்ச்சிப் பருவங்களை எப்படி எதிர்கொள்வது என்பதை இக்கதைகள் கற்றுக் கொடுக்கின்றன.

"கொரோனா நோய் சிலருக்கு நன்மை செஞ்சிருக்கு"  என முடியும் "சாந்தி அபார்ட்மெண்ட்" கதையின் பாஸிடிவ் முடிவு சிறப்பு. 'வாழ்க்கையின் சில தவறான முடிவுகளைத் திருத்திக் கொண்டாலும், காலம் தாண்டிவிடின் அவை துயரத்தையே தரும்' என்ற படிப்பினையைச் சொல்லும் "ஒப்பற்ற மனைவி" ஒரு விழிப்புணர்வுக்கதை.

"சைக்கிளும் ஓட மண் மீதே இரு சக்கரம் சுழல்வது போலே" என்று ஒரு சினிமாப் பாட்டு. இல்லறத்திலே ஆண் / பெண் இருவரும் இணைந்து செல்வதை உவமையாகக் கவிஞர் பட்டுக்கோட்டை "கல்யாணப் பரிசு" படத்தில் சொல்லியிருப்பார். ஆனால் "உங்கள் நூல்" தலைப்புக் கதை தண்டவாளங்கள் இன்றைய நடப்பினை எடுத்துக்காட்டுகிறது. அருகருகே சென்றாலும் அரவணைத்துக் கொள்ளாத தண்டவாளங்கள் போல் இன்றைய இல்லற வாழ்வின் வேகமும் , வெறுமையும் கதையில் அழகாகச் சொல்லப்படுள்ளன.

எடுத்துச் சொல்வதற்கும் , ஏற்றுக் கொள்வதற்கும் எல்லாக் கதைகளிலும் ஏதோ ஒன்று நிச்சயம் இருக்கின்றது. அதன் காரணம் நீங்களே குறிப்பிட்டுள்ளதைப் போல "பெரும்பாலும் உண்மைச் சம்பவங்கள்" என்று நினைக்கிறேன். நூலாசிரியரின்  மகள் சுபாஷிணி. சந்தோஷ் அமைத்துள்ள அட்டைப்பட வடிவமைப்பு அற்புதம். நூல் விற்பனை அடுக்குகளில் பளிச்சென்று கண்களைக் கவரும் விதமாக அமைந்துள்ளது சிறப்பு.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com