0,00 INR

No products in the cart.

எங்க ஊர் யானையை திருப்பிக் கொடுத்திடுங்க…

– வினோத்

24 ஆண்டுகளுக்கு முன்பு, ‘சங்கர்’ என்ற இளம் யானை ஆப்பிரிக்காவின் வனப்பகுதியில் இருந்து இந்தியாவுக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டது. இந்திய குடியரசு முன்னாள் தலைவர் சங்கர் தயாள் சர்மாவுக்கு ஜிம்பாப்வே அரசு வழங்கிய பரிசு  இந்த யானை.

தலைநகர் டெல்லியில் தரையிறங்கியதும் அந்த யானை  டெல்லி உயிரியல் பூங்காவில் சேர்க்கபப்பட்டது . இப்போது, இந்த யானை மீண்டும் அதன் தாயகம் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் 16 வயது நிகிதா தவான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

’யூத் ஃபார் அனிமல்ஸ்’ என்ற லாப நோக்கற்ற அமைப்பின் நிறுவனர் 16 வயதான நிகிதா தவான். இவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சங்கர் யானை பல ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

‘சங்கர் யானையை மிருகக்காட்சிசாலையில் இருந்து அகற்றி மற்ற ஆப்ரிக்க யானைகள் இருக்கும் வனவிலங்கு சரணாலயத்தில் மறுவாழ்வு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த யானையை மிருககாட்சி சாலை அதிகாரிகள் தவறாக நடத்துவதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

“நாட்டிலுள்ள அனைத்து சிறைப்பிடிக்கப்பட்ட யானைகளின் அவலநிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நான் விரும்புகிறேன்,” என்கிறார் நிகிதா.

“இந்திய கலாசாரம் யானைகளுக்கு ஒரு உயர்ந்த அந்தஸ்தை அளிக்கிறது. அவை எல்லா இடங்களிலும், கோயில்களிலும், தனி நபர்களாலும் பராமரிக்கப்படுகின்றன. அவை இந்திய வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ளன. இருந்தாலும், நாம் இன்னும் அவற்றை சரியாக கவனிப்பதில்லை,” என்று நிகிதா தெரிவித்தார்.

விலங்குகள் உரிமை செயல்பாட்டாளர்கள் நீண்ட காலமாக இந்தியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட யானைகளை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்கள்.

இங்குள்ள யானைகளில் பல தனி நபர்களால் வளர்க்கப்பட்டு மோசமான நிலையில் வாழ்கின்றன. அவை மத ஊர்வலங்களுக்கும், மரம் வெட்டும் நடவடிக்கைகளுக்கும், சில சமயங்களில் பிச்சை எடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்திய உயிரியல் பூங்காவில் உள்ள இரண்டு ஆப்ரிக்க யானைகளில் ஒன்று சங்கர் – இரண்டாவது கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஆண் யானை.

சங்கர் இப்போது இருப்பது போல எப்போதும் தனியாக இருக்கவில்லை – 1998ஆம் ஆண்டு பொம்பாய் என்ற துணையுடன் இந்தியாவுக்கு சங்கர் வந்தது.

இரண்டு இளம் ஆப்ரிக்க யானைகள் – அவற்றின் பெரிய, விசிறி வடிவ காதுகள், ஆசிய யானைகளிடம் இருந்து இவற்றை வேறுபடுத்திக் காண உதவின. சில ஆண்டுகளாக, சங்கரும் பொம்பாய்யும் மிருகக்காட்சிசாலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்தன. ஒன்றையொன்று தொட்டு, வருடி, நுகர்ந்து இணக்கமாக வாழ்ந்தன. ஆனால், 2005ஆம் ஆண்டு பொம்பாய் யானை எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டது.

இதை தனது மனுவில் நிகிதா சுட்டிக்காட்டியுள்ளார்.பொம்பாயின் இறப்பு முதல் சங்கர் யானை தனிமையில் வாழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் உயிரியல் பூங்காவிற்குச் சென்று சங்கரைப் பார்த்த பிறகு அதன் விடுதலைக்காகப் போராட நிகிதா முடிவு செய்திருக்கிறார்.

“சங்கர் யானையை நான் பார்க்கும்போது மிகவும் சோகமாக காணப்பட்டது. இது எனக்குள் உண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தியது” என்கிறார் நிகிதா.

சங்கரின் தனிமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விருப்பங்களை ஆராய்ந்து வருவதாக மிருகக்காட்சிசாலையின் மிருகக்காட்சிசாலையில் உள்ள மூன்று யானைகளை ஒன்று சேர்க்க முயற்சி செய்கிறோம்.ஆனால் சங்கர் “பயிற்சி பெறாத யானை மற்றும் பிடிவாத குணம் கொண்டவன்” என்பதால் அந்த ஒருங்கிணைப்புக்கு மிகவும் கஷ்டமாகயிருக்கிறது.  என்கிறார் மிருகக்காட்சிசாலையின் முன்னாள் இயக்குநர் ரமேஷ் பாண்டே.

”சங்கர் தனிமைப்படுத்தப்பட்டதால் இது நடக்கிறது,” என்கிறார் நிகிதா.

“காடுகளில் உள்ள யானைகள் கூட்டங்கூட்டமாக வாழ்கின்றன. அவை ஒன்றுடன் ஒன்று வாழ்நாள் முழுவதும் பிணைப்பை உருவாக்குகின்றன. சிறந்த சூழ்நிலையில் கூட, ஒரு மிருகக்காட்சிசாலையில் அத்தகைய உறவைப் பிரதிபலிப்பது கடினம். நெரிசலான அடைக்கப்பட்ட இடங்களில் யானைகளை வைத்திருப்பது உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்” என்கிறார்கள் யானைகளைப் பற்றி ஆய்வு செய்யும்  நிபுணர்கள்.

“சங்கரின் சுதந்திரத்திற்கு ஆதரவான தீர்ப்பு கிடைக்க நீண்ட காலம் ஆகலாம். ஆனால், இந்த வழக்கு இந்திய யானைகளுக்கு சுதந்திரம் கிடைக்க  ஒரு முன்னுதாரணமாகப்போவது நிச்சியம்.

1 COMMENT

  1. யானை சஙீகரை தொந்தரவு செய்ய வேண்டாம். அமைதியாக வாழட்டும். கூண்டூல் அடைக்காமல் திறந்த வெளியில் இருக்கட்டுமே! சரியான துணையாக ஒரு யானையை கட்டாயம் கிடைக்கும்.
    திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பேசும் சித்திரங்கள்

தனுஜா ஜெயராமன்   அண்மையில்  புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, பாரதியார் நினைவு இல்லத்திற்கு சென்றார். அங்கு மாலதி செல்வம் அவர்களின் பாரதியார் ஓவியத்தை கண்டு வெகுவாக ரசித்து பாராட்டினார். தனது ஓவியக்கலை பணிகளுக்காக...

அதென்ன பெயர் 3.6.9 ?

நேர்காணல் ஜான்சன்   21  வருடங்களுக்கு பிறகு திரைக்கதை மன்னன் பாக்யராஜ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம்  '3.6.9'. உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக,  நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது   இது குறித்து  இயக்குநர் சிவ். மாதவ்விடம்...

சிஎம் செல் அறிவிப்பு:  சீரியசா? ஸ்டன்ட்டா?

1
- எஸ். சந்திரமௌலி   அண்மையில் சிஎம் செல் என குறிப்பிடப்படும் தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவு அலுவலகத்திலிருந்து பின்வரும்  அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி,  “பொது மக்கள் வீடு கட்டும்போது அதற்கான பிளான் ஒப்புதல்...

டிஜிட்டல் மோசடிகள்

0
வினோத்    இந்தியாவைப் பொறுத்தவரையில் இதுவரை நடந்த குற்றங்களின் அடிப்படையில்  ரிசர் வங்கி  20 வகை மோசடிகளைப் பட்டியிலிடுகிறது.  இதில் வங்கி சார்ந்தவை 14, வங்கி சாராத நிதி மோசடி 6 என்கிறது. ஃபிஷிங் இணைப்புகள் இந்த முறையில்,...

நாசர் சார்தான் என்னுடைய முதல் குரு

0
 - ஜான்ஸன்   அண்மையில்  லயோலா பொறியியில்   நடந்த கலை விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜீவா கலந்து கொண்டு பேசும்போது, சூர்யா போன்றோரை வளர்த்த இந்த லயோலா கல்லூரியில் இருப்பது எப்போதும் மகிழ்ச்சியான தருணமே. நீண்ட நாட்களுக்குப்...