ஏழு லட்சம் நபர்கள் முதல் பத்து லட்சம் நபர்களுக்கு மேல் வரை வேலை இழக்கும் அபாயம் உள்ளது

ஏழு லட்சம் நபர்கள் முதல் பத்து லட்சம் நபர்களுக்கு மேல் வரை வேலை இழக்கும் அபாயம் உள்ளது
Published on

முகநூல் பக்கம்

மிகவும் கஷ்டப்பட்டு சிறுகச் சிறுக சேமித்த எதையும் நமது ஒரேயொரு செயல் காலி செய்துவிடும். அது பணமோ அல்லது நல்ல பெயரோ, எதுவாகவும் இருக்கலாம்.

டெக்ஸ்டைல் துறை ஏற்கெனவே தள்ளாடி தத்தளிக்கிறது. நூல் விலை ஏற்றம் எல்லாம் கேட்டால் கிறுகிறுத்துப் போய் விடுவோம். சீன வைரஸ் தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை. மெதுவாக தள்ளாடி எழுந்து நிற்க முயற்சிக்கும் நேரத்தில் ஜி.எஸ்.டியை 12 (தற்போது 5 சதவீதம்) சதவீதமாக உயர்த்தியிருப்பது மிகவும் மோசமான செயல். சில பிரிவுகளில் மூலப்பொருட்களின் மீதான வரி விதிப்பு உற்பத்திப் பொருட்கள் மீதான வரிவிதிப்பினை விட அதிகமாக இருப்பதால் (Inverted Duty Structure) அனைத்தையும் சீராக வைக்க உயர்த்தினோம் என்று விளக்கம் தருகிறார்கள். உற்பத்தித் துறை கூட்டமைப்புகள் இந்த விளக்கத்தை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்து விட்டன.

குறைந்த பட்சம் லட்சம் யூனிட்கள் மூடப்பட்டு ஏழு லட்சம் நபர்கள் முதல் பத்து லட்சம் நபர்களுக்கு மேல் வரை வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக  அனைத்து அமைப்புகளும் தெரிவிக்கின்றன. சிறு, குறு வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் பாடு வெகுவாக திண்டாட்டம் தான். டெக்ஸ்டைல் உற்பத்தியாளர்களை மட்டுமல்ல, துணி விலைகளும் ஆயத்த ஆடை விலைகளும் நிச்சயம் உயரும்.  

MSram முகநூல் பக்கத்திலிருந்து…

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com