0,00 INR

No products in the cart.

ஒவ்வொருவருக்கும் தனிதனியான  ஒரு டியூன் 

– ஆதித்யா

 

இசையோடு பிறந்து இசையோடு  வாழும்  மக்கள்

 

மேகாலயா மாநிலத்தின்  கிழக்குப் பகுதி  காசி மலைகளுக்குள் ஒளிந்திருக்கும் அழகான கிராமம்  காங்தாங்குக்கு. மேகாலயாவில் உள்ள மூன்று பழங்குடியினத்தில் காசியும் ஒன்று. காங்தாங்கில் காசி இனத்தவர்கள் தான்  வசிக்கிறார்கள். வீடுகள்  எல்லாமே மூங்கிலாலும் மூங்கில் இலைகளாலுமான குடிசைகள்.  உலகில் மிக அதிகமாக மழை பொழியும் இடமாகக் கருதப்பட்ட சிரபுஞ்சி, காங்தாங் கிராமத்துக்கு அருகில்தான் இருக்கிறது.

தலைநகர் ஷில்லாங்கிலிருந்து மூன்று மணிநேர கார் பயணம். இந்தக் குக்கிராமத்தில் எல்லாருக்கும் மூன்று பெயர்கள்.

அரசாங்க பதிவுகளுக்காக ஒரு பெயர். வீட்டில் கூப்பிட ஒரு செல்லப்பெயர், இது தவிர,  ஒரு தனி இசைக் கோவை பெயராக இருக்கிறது.

அவர்களுக்குள் ஒருவரையொருவர் அழைத்துக்கொல்லும்போது இந்த இசையை வாயால் எழுப்புகின்றனர். ஒரு ஹம்மிங் போல ஒவ்வொருவருக்கும் தனித்தனியான  ஒரு டியூனில்  மென்மையான ஒசையாக  ஒலிக்கிறது.  கிராமவாசிகள் ஒருவரையொருவர் இதன் மூலம் தான் அழைத்துக்கொள்கிறார்கள்.   இதில் அருகிலிருப்பவரை அழைக்க அதே  டியூனின்  ஒரு சிறுவடிவம். 

இந்தப் பகுதியில் வாழும்  ’ஜிங்க்ர்வாய் இயாவ்பே’  என்ற  இன மக்களிடம் ஒரு தனித்துவமான மரபும் இருக்கிறது. இந்த மரபின்படி, காங்தாங்கில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், குழந்தையின் தாய் பெயரோடு சேர்த்து ஒரு இசைக்கோர்வையையும் அடையாளமாக சூட்டுவார்.

வார்த்தைகளால் சூட்டப்படும் பெயர் என்பது அதிகாரபூர்வ தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த இசைக்குறிப்பே அவர்களது அடையாளமாக வாழ்க்கை முழுக்க வருகிறது. ஒருவரையொருவர் அழைத்துக்கொள்ளவும் இதுவே பயன்படுகிறது. ஒரு மனிதர் இறக்கும்போது அந்த இசைக்குறிப்பும் அழிந்துவிடும், அந்த இசை வேறு எவருக்கும் பெயராக சூட்டப்படுவதில்லை 

இந்த கிராமத்தில் ஒருவரையொருவர் அழைக்க அடிக்கடி இப்படி இசை எழுப்பவது எதற்கு என்று புரியாத இங்கு வரும்  டூரிஸ்ட்கள்,  இந்த கிராமத்துக்கு  வைத்திருக்கும் பெயர் ’விசிலடிக்கும் கிராமம்’. 

2 COMMENTS

  1. அரிய தகவல். காங்தாங் சென்று அங்குள்ள மக்கள் இசைப் பெயரால் ஒருவரை ஒருவர் அழைத்துக்கொள்வதை நேரில் கேட்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது – ஜெயகாந்தி, பாலவாக்கம்.

  2. துள்ளாத மனமும் துள்ளும்-இசை
    இன்பத் தேனையும் வெல்லும்
    பட்டுக்கோட்டையார் பாடல் நினைவுக்கு வருகிறது
    திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

தாய் தந்தை கூட மகன் …மகள் வீட்டுக்கு வரும்போது விருந்தாளிகள் ஆகி விடுகிறார்கள்

நியூக்ளியர் ஃபேமிலி செல்லம் சேகர்   சின்னஜ்சிறிய  குடும்பம் ... தற்காலத்தில் இதுதான் சாத்தியமான ஒன்று என்பது நிதர்சனம்.  “கூட்டு குடும்பம்” என்பது  ஒரு பெரிய தோட்டம் . அதில் பல மலர்கள். அனைத்தும் பூஜைக்கு உரியவை. ...

10 லட்சம் பேர் இவரிடம் ஆங்கிலம் கற்கிறார்கள்

- தனுஜா ஜெயராமன்   போட்டிகளும், சவால்களும் நிறைந்த உலகத்தில் ஒரு பெண் தனியாக நின்று ஒரு துறையில் சாதிப்பதென்பது மிகப்பெரிய விஷயம். அதுவும் சிறிய நகர்புற பிண்ணனியில், அதுவும்  நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த...

7 ஆண்டுகளில் சுமார் 65 ஆயிரம் மாணவ / மாணவியர்களிடம் பாரதியின் கருத்துக்கள்

உரத்த சிந்தனையின் பாரதி உலா தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்   பாரதியின் உயர்ந்த கருத்துக்களை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் உரத்த சிந்தனை அமைப்பின் பாரதி உலா இன்றைய இளைய தலைமுறைக்கு நவீன தொழில்நுட்பத்தில் ஆர்வம்...

இடிந்த வீடு, கிழிந்த புத்தகம்

கடைசிப் பக்கம் - சுஜாதா தேசிகன் சுஜாதாவின் ’ ‘ஸ்ரீரங்கத்து கதைகள்’ தொகுத்துக்கொண்டு இருந்தேன். அதில் அப்பாவின் ‘ஆஸ்டின்’ என்ற சிறுகதையை அதில் சேர்க்க வேண்டுமா? என்ற சந்தேகம் வர, ஒரு மாலை சுஜாதா...

எந்த  எழுத்தாளனும்  தன் படைப்பு புத்தகமாக வெளியாவதில்  மகிழ்ச்சியடைவார் 

இந்த வாரம் இவர்   ஒவ்வொரு எழுத்தாளனின் உள்ளத்திலும் ஓரமாய் ஒரு ஏக்கம் இருக்கும்... சென்னை புத்தகத் திருவிழாவில் தன்னுடைய புத்தகம் வெளியாக வேண்டும்... அது பேசப்படவேண்டும்...  இந்த அங்கிகாரத்தைப் பெறும்  ஆர்வத்திற்கு  தமிழக முதல்வர்...