0,00 INR

No products in the cart.

வித்வத் சந்நியாசம் என்றால் என்ன ?

உத்தவ கீதை – 13

டி.வி. ராதாகிருஷ்ணன்

கிருஷ்ணன் உத்தவருக்கு மேலும் கூறலானார்…

எனது பக்தன்,பகுத்தறிவால், இந்த உலகம், இறைவனால் ஏற்படுத்தப்பட்ட மாயை என்றுணர்ந்து,பின்பு அந்த ஞானத்தையும் விட்டுவிட வேண்டும்.

இது “வித்வத் சந்நியாசம்” என்று பெயர்.

ஞானம் பெற்றவர்க்கு நானே வாழ்க்கையின் முடிவு, நானே முக்தி, என்னைத்தவிர வேறு எதுவும் கிடையாது. தவம் செய்தல், புண்ணிய இடங்களை தரிசித்தல், புண்ணிய நீரில் நீராடல், ஜெபித்தல், தானம் போன்றவைகள் எல்லாவற்றையும்விட,ஞானத்தால் கிடைக்கும் புண்ணியமே சிறந்தது. எனக்கு உகந்தது.

ஆகையால், என்னை நினை, என்னை வணங்கு, என்னை அடைக்கலம் புகு…என்னை அடைவாய்.

இந்த உடல், மனது, இந்திரியங்கள் ஆகிய மூன்றும் பிரகிருதியின் செயல்பாடாகும். அது ஒரு மாயை. பிறப்பு, இருத்தல், வளர்தல், மாறுதல், தேய்தல், இறப்பு ஆகிய இந்த ஆறு நிலைகளும் மனத்துக்கும்… உடலுக்கும் ஏற்படும் செயல்கள்.

உன்னுள் உறையும் ஆன்மாவுக்கில்லை. ஆன்மாவையும் அவை கட்டுப்படுத்தாது. இதை உணர்ந்து கொள்…

இப்போது உத்தவர் கேட்டார்…

கண்ணா, இந்த பிரபஞ்சமே உன் வடிவம். இறுதியாகவும், முடிவாகவும் கூறும் பாசங்களையும், பந்தங்களையும் நீக்கும் ஞானத்தைக் கூறினீர்கள்.

உங்கள் மீது பக்தி உண்டாக்கும் பக்தி மார்க்கத்தை எப்படி கண்டுபிடிப்பது? எப்படி செயல்படுவது? என்று கூறுங்கள்…

உலகில் மனிதர்கள் மூன்று விதமாகத் துன்பப்படுகிறார்கள்…

1. இயற்கையால் ஏற்படும் அழிவுகள்

2. மற்ற உயிர்களால் ஏற்படும் தொல்லைகள்

3. உடம்பு,மனது போன்றவற்றால் ஏற்படும் வியாதிகள்

ஆகையால், உன் பாதங்களைச்  சரணடைகிறேன். உன் பாதங்கள், மழையினின்று காப்பாற்றும் குடை போன்றது. அதே நேரத்தில் மழை போன்ற அழுத்தத்தையும் அளிக்க வல்லவை.

“உலகம்” என்ற குழியில் வீழ்ந்து “காலம்” என்ற சர்ப்பத்தால் கடிபட்டு, தாகத்தால், புலனின்பங்களில் ஈடுபட்டு முடிவை நோக்கியிருக்கும் எனக்கு முக்தியைத் தரும் நல்வழியினைக் காட்டுங்கள்.

கிருஷ்ணன் உத்தவருக்கு சொல்லலானார்…

பிறருக்குத் துன்பம் கொடுக்காமலிருத்தல்,உண்மையைப் பேசுதல், திருடாமை, பேராசையற்றிருத்தல், பணிவு, அதிக செல்வம் சேகரிக்காமல் இருத்தல், நம்பிக்கை, நேர்மை, மௌனம், மனத்தில் உறுதி, மன்னிக்கும் மனப்பான்மை, பயமின்மை, உடல் தூய்மை, எண்ணங்களில் தூய்மை, காயத்திரி மந்திரம் சொல்லுதல், விருந்தோம்பல், கடவுளை வணங்குவது, புனித இடங்களைத் தரிசித்தல், சமூகத் தொண்டு, மனத்தில் “போதும்”என்ற மனப்பான்மை, குருவணக்கம் ஆகியவை ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய இயம, நியமங்களாகும்.

மகாபாரதப் போரில் அர்ச்சுனனின் அம்பால் அடிபட்டு… அவன் அமைத்த அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர் நோக்கியிருக்கும் போது, பீஷ்மரிடம் தர்மபுத்திரர் இதே கேள்வியைக் கேட்டார்.

உறவினர்கள், ஆசாரியர்கள், நண்பர்கள், யாவரையும் போரில் இழந்த நிலையில், தர்மபுத்திரர் மிகவும் மனம் வருந்தி, பீஷ்மரிடம் ,தன் பாவங்களை நீக்கி முக்தியடையும் வழியைக் காட்டுமாறு பீஷ்மரிடம் வினவினார்.

அப்போது பீஷ்மர் கூறியதை… நான் உனக்குக் கூறுகிறேன்…

ஞானம் என்பது பிரகிருதி,புருஷன்,மகாதத்துவமாகிய பிரபஞ்ச அறிவு,அகங்காரம்..ஐந்து தன் மாத்திரைகள் ஆகிய ஒன்பதும் மேலும் பதினொன்றுமாகிய பஞ்சேந்திரியங்கள்..5,கர்மேந்திரியங்கள் 5 மற்றும் மனது, மேலும் மூன்று என்று சொல்லக் கூடிய சத்துவ குணம்,ரஜோ குணம்,தமோ குணம் ஆகியவை பற்றிய அறிவாகும்.

உலகிலுள்ள யாவையும் ஒன்றே என்ற பிரம்மத்தின் கூறுகளே என்பதை உணர்ந்தவன் ஞானி.ஆகவே விஞ்ஞானம், முக்குணங்களின் சேர்க்கையால் தோன்றுதல்,இருத்தல், மறைதல் என்று எல்லா செயல்களும் நடைபெறுகின்றன.

ஆகையால் உலகில் யாவையும் “மாயை”-நிரந்தரமற்றவை.

“ஒன்றிலிருந்து தோன்றி உருமாறி, மறுபடியும் அதே நிலையை மீண்டும் அடைவதே வாழ்க்கையின் நியதி”

இதை வேதங்களின் கூற்றினாலும், நமது பார்வையாலும், அனுமானத்தினாலும், அறிஞர்களின் கூற்றாலும் அறிந்து கொள்ள முடியும்.

யாகங்கள், நற்கருமங்கள் செய்வதால் கிடைக்கும் பிரம்ம லோகமும் நிரந்தரமற்றது. அழிவுறக் கூடியது.

நான் உனக்கு எளிதான பக்திமார்க்கத்தை எடுத்துரைப்பேன். என்னுடைய கதைகளைக் கேட்டல், என்னைப் பற்றிக்கூறும் பிரவசனங்களைக் கேட்டல், என்னிடம் ஆழ்ந்த பக்தி, என்னைப் புகழ்ந்து பாடும் பாடல்களைக் கேட்டல், எனக்குச் சேவை செய்தல், என்னை உடலின் எட்டு அங்கங்களாலும் வணங்குதல் (தலை,மார்பு, இரு கைகள், இரண்டு முழங்கால்கள், இரண்டு கால்கள்)மற்றும் உலகிலுள்ள எல்லாப் பொருள்களையும் கடவுளின் (எனது) அம்சமாகப் பாவித்தல்,எனது பக்தர்களுக்குச்  சேவை செய்தல்,தர்மம் செய்தல்,உபவாசமிருத்தல் போன்றவை பக்தியின் பாதைகளாகும்.

இப்போது உத்தவர் கேட்டார்…

பக்தன் கடைப்பிடிக்க வேண்டிய இமயம் என்பது என்ன? தவிர்க்க வேண்டியவை யாவை? பொறாமை என்பது என்ன? தன்னைக் கட்டுப்படுத்துதல் என்பது என்ன? திதிக்ஷா என்பது என்ன? தர்மம் என்பது என்ன? தவம் என்பது என்ன? வீரம் என்பது என்ன? நேர்மை என்பது என்ன? தியாகம் என்பது என்ன? மனிதனுக்கு தைரியம் என்பது என்ன? செல்வத்தின் பயன் என்ன? யாகம் என்பது என்ன?தட்சணை என்பது என்ன? செல்வம் என்பது என்ன? லாபம் என்பது என்ன? ஞானம் என்பது என்ன? தயக்கம் என்பது என்ன? இன்பம்,துன்பம் என்பது என்ன? படித்தவன், அறிவாளி என்பவன் யார்? முட்டாள் என்பது யார்? இன்பம் என்பது என்ன? துன்பம் என்பது என்ன? நல்வழி…தீயவழி என்பவை எவை? ஸ்வர்க்கம் என்பது என்ன? நரகம் என்பது என்ன? நண்பன் என்பவன் யார் ? வீடு என்பது என்ன? செல்வந்தர் என்பவர் யார்? ஏழை என்பது யார்? எல்லாம் அறிந்த இறைவனே! எனக்கு இவற்றுக்கெல்லாம் விளக்கம் அளியுங்கள்.

கிருஷ்ணன் சொல்லலானார்…

(உத்தவரே சொல்கிறேன்…) பிறருக்குத் துன்பம் கொடுக்காமலிருத்தல், உண்மையைப் பேசுதல்,பிறர் பொருளைத் திருடாமை, பேராசையற்று இருத்தல், பணிவு, அதிகப் பொருளைச் சேகரிக்காமல் இருத்தல், நம்பிக்கை, நேர்மை, மௌனம், மனதில் உறுதி, மன்னிக்கும் மனப்பான்மை, பயமின்மை, உடல் தூய்மை, எண்ணங்களில் தூய்மை, காயத்திரி மந்திரம் ஜெபித்தல், விருந்தோம்பல்,கடவுளை வணங்குவது, புனித இடங்களைத் தரிசித்தல், சமூகத் தொண்டு, மனத்தில் நிறைவு மனப்பான்மை, குருவணக்கம், ஆகியவை ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய இயம, நியமம் ஆகியவாகும்.

இவைகளைக் கடைபிடித்தால் பக்தன்… ஆசைப்பட்டதை,”முக்தியையோ” அல்லது “பொருளையோ” அடைவான்.

“சமா” என்பது ஞானத்தால் என்னை சார்ந்திருப்பது…

“தமா” என்பது இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவது…

“திதிக் ஷா” என்பது, உணவு, ஆசை, பொறாமை, உடலின்பம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துதல்.

“தர்மம்” என்பது உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் துன்பம் கொடுக்காமலிருத்தல்…

“தவம்” என்பது எல்லாச் சுகங்களையும் விட்டு விடுவது…

“தைரியம்” என்பது  தன்னை வெல்லுதல்…

“நேர்மை” என்பது எல்லா உயிர்களையும் சமமாக பாவித்தல்…

“ரிடா” என்பது எல்லோரிடமும் உண்மையான அன்பான பேச்சு

“சௌகா” என்பது பலனின் பற்று வைக்காது செயல்களில் ஈடுபடுவது.

“தியாகம்” என்பது உலகப் பற்றினைத் துறந்து சந்நியாசம் ஏற்றுக்கொள்ளல்

“நேர்மை” என்பது மனிதர்களின் செல்வம்

“யாகம்” என்பது இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படுவது

“தட்சணை” என்பது குருவுக்குக் கொடுக்கப்படும் காணிக்கை

“பிராணாயாமம்” என்பது மூச்சின் வழியாக மனத்தைக் கட்டுப்படுத்தல்

“செல்வம்” என்பது இறைவனின் அருளைப் பெறுதல்

“கூச்சம்” என்பது தவிர்க்கப்பட்ட செயல்களைச் செய்தல்

“ஞானம்” என்பது வேற்றுமைகளைத் தவிர்த்து எல்லாமே ஒன்றுதான் என்பதை உணர்வது

“இன்பம்” என்பது இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகப் பார்த்தல்

“அறிஞர்” என்பவர்,பற்றிலிருந்து விடுபட்டு முக்தி அடையும் வழியறிந்தவர்

“முட்டாள்” என்பவர்,இந்த உடலை “நான்” என எண்ணுபவர்

“நேர்வழி” என்ப்பது இறைவனை அடையும் வழி

“தீயவழி” என்பது மனத்தில் சஞ்சலம் ஏற்படுத்தும் செயல்கள்

“சொர்க்கம்” என்பது சத்துவ குணத்தல் மனத்தில் ஏற்படுவது

“நரகம்” என்பது தமோகுணத்தால் மனத்தில் ஏற்படுவது

“குரு” என்பது “நான்” (கண்ணன், இறைவன்)

நண்பன் என்பது நான் (கண்ணன்.இறைவன்)

“வீடு” என்பது நம் உடல்

“செல்வந்தன்” என்பவன் நல்ல குணங்களை உடையவன்

“வறியவன்” என்பவன் மனத்தில் திருப்தியில்லாதவன்

“பரிதாபத்துக்குரியவன்” என்பவன் இந்திரியங்களையும் கட்டுப்படுத்துபவன்

தலைவன் என்பவன் இந்திரியங்களால் துன்பப்படாதவன்

அடிமை என்பவன் இந்திரிய சுகங்களுக்கு அடிமையானவன்

உத்தவரே! உம்முடைய கேள்விகளுக்கு எல்லா பதில்களையும் கூறிவிட்டேன்.

மற்றவர்களின் நல்ல குணம்,தீய குணம் என்று பார்ப்பது தீய குணமாகும்

நன்மை, தீமை இரண்டையும் அறிந்து, உணர்ந்து அவைகளிலிருந்து விடுபடுவீராக!

(தொடரும்)

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

“அட! பேராண்டி! அவரோட மாப்பிள்ளையா நீ?

0
  ஒரு நிருபரின் டைரி - 20 - எஸ். சந்திரமெளலி   ஏ. நடராஜன்   என்னும்  அனுபவப் பொக்கிஷம்  திருச்சி வானொலி நிலையத்தில் திரு. ஏ. நடராஜன் (நண்பர்கள் வட்டாரத்தில் ஏ.என். சார் அல்லது தூர்தர்ஷன்  நடராஜன்)  பணிபுரிந்துகொண்டிருந்த...

தேவ மனோகரி – 20

0
தொடர்கதை                                               ...

அம்மாக்களின் எதிர்பார்ப்புகளைக் காப்பாற்ற வேண்டாமா?

0
  ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  - 20 மம்முட்டி தமிழில் கே.வி.ஷைலஜா கம்ப்யூட்டர்   படப்பிடிப்பிற்கு நடுவில் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது இயக்குநர் சத்யன்அந்திக்காடின் இரட்டைக் குழந்தைகளுக்கும் கம்ப்யூட்டரில் ஆர்வம் இருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொண்டேன். சத்யன் இதுவரை அவர்களுக்கு...