0,00 INR

No products in the cart.

அசத்தல், அக்மார்க் தரம்

உங்கள் குரல்

 

ந்து மாநிலத் தேர்தல்கள் மூலம் இந்திய ஜனநாயகத்துக்கு, மக்கள் மூன்று செய்திகளை தெரிவித்து விட்டனர் என்பதை தலையங்கத்தில் விளக்கி யிருந்த விதம் அசத்தல் மட்டுமல்ல, அக்மார்க் தரம்.

ய்யா வைகுண்டரின் அருளுரையில், அத்தனை வரிகளும் அரிய முத்துக்கள். இன்னும் சரியாக சொன்னால், நம் நெஞ்சத்தை தூய்மைப் படுத்தி, நிறைவான வாழ்வுக்கு வழி காட்டும் கலங்கரை விளக்கம். ‘ கலி என்பது மாயை. மனிதன் பணிவோடு இருந்தால் அந்தப் பணிவுக்குள் கலி அகப்பட்டு அடங்கிப் போகும்…’ அடடா… எவ்வளவு அர்த்தம் செறிந்த வார்த்தைகள்…படித்ததும்  தாமதியாது,டைரி எடுத்து, குறித்து வைத்துக் கொண்டேன்.
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

ந்து மாநில தேர்தல் முடிவுகள் பி.ஜே.பி.க்கு சாதகமாக இருந்தாலும் கூட பி.ஜே.பி., உ.பி.யில் சென்ற தேர்தலை விட இடங்கள் குறைவு வாக்கு சதவீதம் குறைவு என தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது என்பதே உண்மை.
 -சி. கார்த்திகேயன், சாத்தூர் 

சை இளவரசரின் 25′ – கவர் ஸ்டோரி டாப்.  விருதுகள் எனது லட்சியமில்லை. பாட்டு ரசிகர்கள் மத்தியில் ஹிட் ஆகி அவர்கள் பாராட்டினால் போதும் ‘ என்ற எண்ணமே அருமை.
-எம். செல்லய்யா, சாத்தூர்

‘இதோ ஒரு புத்தக மனிதர்’ கட்டுரையை  படித்து மகிழ்ந்தேன். ஒரு பதிப்பாளரின் வாழ்க்கை  இவ்வளவு சுவராசியமான வரலாறா?
-அ.ச.நாராயணன், பாளையங்கோட்டை

“சின்ன சைக்கிளை நொறுக்க ஒரு புல்டோசர் தேவைப்பட்டிருக்கிறது”

‘”தமிழ் எழுத்தாளார்கள் , 1 கோடியே 20 லட்சம் ரூபாய்  ராயல்ட்டி பெறப்போகிறார்கள்” தராசாரின் கிண்டலுக்கு அளவே இல்லையா?
– எஸ்.ராமதாஸ், சேலம்

ந்த வாரம் இவரான ஷேன் வார்ன்; சராசரி ரன்கள் எடுக்கும் முன் பேட்ஸ்மேன்களை அவுட் செய்தவரை சராசரி ஆயுட்காலம் முன் ஆண்டவர் அவுட் செய்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தமே!
– மதுரை குழந்தைவேலு, சென்னை

வாராவாரம் கடைசிப் பக்கம் தான் நான் முதலில் படிப்பது. பல புதிய விஷயங்களை  எளிதாக அறிந்துகொள்ள முடிகிறது.
-கரிசல் புலி.கே.பாலமுருகன், பெருநாழி

ல்கியில் பல ஆண்டுகளாக வந்துக்கொண்டிருந்த காஞ்சி மஹாபெரியவரின் அருள்வாக்கை ஏன் நிறுத்தி விட்டீர்கள். அதற்கு மாற்றாக வேறு பல மாகன்களுடைய அருளுரைகளைப் போடுகிறீர்கள். ஆனால் மஹாபெரியவரின் படமும் வார்த்தைகளும் இல்லாத கல்கியைப் பார்க்க கஷ்டமாக இருக்கிறது.
– எம். சண்முகம், சேலம்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...

அற்புதமாக கொண்டாடி அசத்தி விட்டார்

0
உங்கள் குரல்   குழம்பிய மனநிலையில் இருந்த எனக்கு மகாசுவாமிகளின் அருளுரையை படித்த பிறகு மனத்தெளிவும், உறுதியும் கிடைக்கப் பெற்றேன். - கலைமதி, நாகர்கோவில் சுஜாதா தேசிகன் வெளிநாடு குறித்து சுஜாதா அன்று கூறியதாக கடைசி பக்கத்தில் பதிவிட்டது...

அந்த நிகழ்ச்சியை அப்படியே நேரில் பார்த்தது போல மனநிறைவு தந்தது. 

0
"சுஜாதா தேசிகன்" அவர்களின் கடைசிப் பக்கத்தில் வந்த "தலைவாழை" படிக்கும் போதே ‘இலையில் சாப்பிட வேண்டும்’ என்ற ஆர்வம் ஏற்பட்டது. என் அப்பா  வீட்டில் வாழை மரம் வளர்த்தார். அதில்தான் தினமும் உணவு...

மம்முட்டி வாராவாரம் கலக்குகிறார்.

0
உங்கள் குரல்   யார் வேண்டுமானாலும் இணைய இதழைத் தயாரிக்கலாம். ஜெயமோகன், ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா போன்ற எழுத்தாளர்கள் இணைய இதழை தன் பெயரிலேயே நடத்துகிறார்கள். இந்த இணைய இதழ்களைப் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அவரவர்களுடைய...

‘மனித நேயத்தை யாராலும் மடிய வைக்க முடியாது’

0
உங்கள் குரல்   விஜய் கிருஷ்ணா அவர்களின் முகநூல் பக்கம் படித்ததும் மனம் நெகிழ்ந்தது. பொதிகை தொலைக்காட்சியில் மங்கையர் சோலை என்ற நந்தவனத்தில் பூக்கும் மலர்களை மிக அழகாக சொல்லி அவர்களுடைய பாசத்தையும் நேசத்தையும் வாசத்தையும் ...