0,00 INR

No products in the cart.

 ஏன் இந்த மன  மாற்றம்?

கவர் ஸ்டோரி

– ஆதித்யா 

 

போராட்டமும் வெற்றியும்

சுதந்திரப் போராட்டக் காலத்துக்குப்பின் இதுபோன்றதொரு போராட்டத்தை இந்தியா கண்டதில்லை… ஓராண்டுக் காலமாக, மாநிலம் விட்டு மாநிலம் சென்று, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள், இளைஞிகள், பெண்கள் ஒருங்கிணைந்து, ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டார்கள்.

இந்தப் போராட்டம், கடும் குளிரிலும், மழையிலும், உலகமே கொரோனாவால் முடங்கிய பொழுதிலும் அசராமல் தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 800 பேருக்குமேல் உயிரிழந்துள்ளார்கள். எனினும், திட்டமிட்டபடி நடைபெற்ற போராட்டத்தில் தொய்வில்லை.  போராட்டக் களத்தில், தற்காலிக வீடுகள் அமைத்துக்கொண்டார்கள். டிராக்டர்களையே வீடுகளாகவும் மாற்றிக்கொண்டார்கள். தங்களுக்குத்தாங்களே மருத்துவ வசதி வழங்கிக்கொண்டார்கள். மாலை நேரங்களில் இசைக்கருவிகள் இசைத்து உற்சாகப்படுத்திக் கொண்டார்கள். குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்தலும் நடந்தது. போராடும் மக்களுக்கு உடுப்புகள், உணவுகள் வழங்குவதற்குப் பல்வேறு சமூகச் சேவை அமைப்புகள் முன்வந்தன.

ஓராண்டுகளானாலும், கூப்பிடு தூரத்தில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளைச் சந்திக்கப் பிரதமர் விரும்பவில்லை. உள்துறை அமைச்சருக்கும் நேரமில்லை.

இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மைகள் அதிகம்.அங்கே போராடுபவர்கள் விவசாயிகளே இல்லை… தீவிரவாதிகள் என, அரசின் அதிகார அமைப்பு வர்ணித்தது. ’இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ என ஒன்றிய அரசின் அமைச்சர்களும், ’ஒரு கமாவைக்கூட மாற்ற மாட்டோம்’ என்றும், போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசியும் வந்தனர். மாநிலத் தலைவர்களும் பேசி வந்தனர்,

பிரதமரின் அறிவிப்பு

இந்த நிலையில் பிரதமர் அவருக்கே உரிய பாணியில் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில், ’மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக’ அறிவித்தார். அதோடு நாட்டு மக்களிடம் மன்னிப்பையும் கோரினார்.

கண்முன்னே நீண்ட காலம் நிகழ்ந்த அறப்போராட்டம் ஒன்று வெற்றியுடன் நிறைவடைந்திருக்கிறது. உழவர்களின் நெஞ்சுரத்தின் முன் இந்த அரசு அடிபணிந்தது. 

எப்படிக் கிடைத்தது இந்த வெற்றி?

அடிக்கடி திருக்குறளை மேற்கோள் காட்டும் பிரதமர் நரேந்திர மோடியிடம்  ’எண்ணித் துணிகக் கருமம்’ என்ற குறளை யாரும் எடுத்துச் சொல்லியிருக்க மாட்டார்கள் போலிருக்கிறது. அப்படியிருந்தால் அவர் விவசாயிகள் தொடர்பான மூன்று சட்டங்களை இயற்றியிருக்க மாட்டார். எதிர்ப்பு வந்தபோது பிடிவாதமாக இருந்திருக்கமாட்டார்.

இவ்வளவு எதிர்ப்பு இருக்கும்போது ’பிரதமர் சட்டங்களை விலக்கிக்கொள்வது தவறல்ல’ என்று கூட அவருக்குச்சொல்லப்படவில்லை. அல்லது அவர் ஏற்கத் தயாராக இல்லை. இத்தனை பிடிவாதமாக இருந்த அரசை எதிர்த்து ஒரு அறவழிப் போராட்டங்களின் மூலம் விவசாயிகள் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

இந்த வெற்றியின் காரணம் அந்த அமைப்பின் கட்டுக்கோப்பும் ஒழுக்கமும் இடையில் நுழைந்த வன்முறையாளர்களைத் தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு விலக்கி ஒதுக்கி போராட்டத்தைத் தொடர்ந்தனர். முக்கியமாக இணைய விரும்பிய அரசியல் கட்சிகளை ஒதுக்கினர். ’சீக்கியர்களைத் தவிர வேறு மாநிலத்தவர்களோ இனத்தவர்களோ இத்தனை நெடிய போராட்டத்தைத் தொடர்ந்திருப்பார்களா’ என்பது சந்தேகத்திற்குரியது. அதன் பொருட்டு அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு ஏராளம் உள்ளது. ’நம்பிக்கை, அதிகார வர்க்கத்தின் ஆணவப் போக்கிற்கு அமைதியான முறையில் எதிர்ப்பு’ என்ற அண்ணலின் வழியை மேற்கொண்டு, இந்த வெற்றியைச் சாதித்திருக்கிறார்கள்

எதிர்வரும் தேர்தல்கள்தான் காரணமா?

கண்ணுக்கெட்டிய தொலைவில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் தேர்தல் வருகிறது. கண்டிப்பாக விவசாயிகளின் எழுச்சி, ஆளுங்கட்சிக்குப் பலத்த அடி கொடுக்கும் என்பது அரசின் வாக்கெடுப்புக்கள் மூலம் தெரியவந்தது ஒரு காரணம். நாட்டின் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று சொல்லப்பட்ட சட்டங்களினால் தன்னுடைய கட்சிக்குத் தேர்தலில் பயன் இல்லை என்பதால் ஒரே இரவில் தேச நலனைவிடக் கட்சி நலன் பெரிது எனச் சட்டங்கள் திரும்பப் பெற்றிருக்கிறார் பிரதமர். பிடிவாதமாக்கியிருந்த அரசு தனது அதிகார பலத்தை விவசாயிகளின் ஒற்றுமைக்கு முன் கைவிடத் தீர்மானித்தது அரசியல். இந்த முடிவு வடமாநிலத் தேர்தல்களில் வெற்றிக்கு உதவுமா என்று கேட்டால் நிச்சியம் என்று சொல்ல முடியாவிட்டாலும் பா.ஜ.க.வின் தோல்வியின் வீழ்ச்சி குறையும் என்பதுதான் உண்மை.

பஞ்சாப் அரசியலும் பா.ஜ.க.வும்

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி உட்பூசலினால் நிலைகுலைந்து போயிருக்கிறது. கட்சியினால் பதவி விலக்கப்பட்ட கேப்டன் அமரீந்தர் சிங் தனிக்கட்சி துவக்கியிருக்கிறார். கட்சி தொடங்கும் முன்னும், கட்சியைத் தொடங்கிய பின்னரும் முதலில் அவர் சந்தித்தது, பிரதமரையும், உள்துறை அமைச்சரையும்தான். சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து என் கட்சி ஆட்சியைப்பிடிக்கும் என்ற பேரத்தை முன் நிறுத்தி அதில் வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது. இதுதான் பிரதமரின் மன மாற்றத்துக்கான காரணம்.

”எதிர்வரும் 2022 மாநிலத் தேர்தலில் அவர் முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க. கூட்டணியால் அறிவிக்கப்பட்டால் ஆச்சரியமில்லை. எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட வேண்டும். அதற்கான விலை எதுவானாலும் கொடுக்கத் தயார்” என்ற பா.ஜ.க.வின் நிலைப்பாடு வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

இது முழுக்க முழுக்க ஜனநாயக ரீதியில் கட்டுக்கோப்பாக நடைபெற்ற நம் விவசாயிகளின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என விவசாயிகளும் சாமானியனின்  நம்பிக்கை! இது எதிர்வரும் தேர்தலுக்கான தற்காலிக ஏற்பாடு… தேர்தலுக்குப்பின் வேறு வடிவில் இதே சட்டங்களைக் கொண்டுவரப்படும் ராஜ தந்திரம் என பா.ஜ.க.வினரும், இது மோடியின் சார்வாதிகாரப்போக்குக்கு எதிராக எழுந்திருக்கும் மக்களின் மனப்போக்கின் அலை. அது வரும் தேர்தல்களில் எதிரொலிக்கப் போகிறது என அரசியல் கட்சிகளும் கணிக்கின்றன.

ஆனால், சாமானியனுக்கு மக்கள் சக்தி ஒன்று திரண்டால் எந்த அரசும் அவர்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதை இந்த விவசாயிகள் புரிய வைத்திருக்கிறார்கள். “போராடி என்ன நடந்துவிடப்போகிறது” என்று நினைக்கும் சராசரி மனிதர்களுக்கு இந்தப் போராட்டத்தின் வெற்றி நமது ஜனநாயகம் வலிமையானது என்ற நம்பிக்கையை அளித்திருக்கிறது.

2 COMMENTS

 1. மரபு மீறாமல் அதிகார வர்க்கத்திற்கு அடிபணியாமல் வே ளாண் சட்டத்தை ரத்து செய்யவைத்த விவசாயிகள் நம் நாட்டின் முது கெலும்புகள் என்பதை நிரூபித்து விட்டார்கள். இந்தவெற்றியின் எதி ராெ லி
  எதிர் வரும் தேர்தலில் நிச்சயம் அம்பல மாகும் என்பதை “ஏன் இந்த மனமாற்றம் ?”
  கவர் ஸ் டாே ரி உறுதியாக்குகிறது.
  து.சேரன்
  ஆலங்குளம்

 2. மக்கள் ‌ஏமாற மாட்டார்கள்! காலம் பதில் சொல்லும்! காத்திருங்கள்!

  திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

Other Articles

Stay Connected

263,924FansLike
1,880FollowersFollow
1,600SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

எடப்பாடியின் பிடிவாதமும் – ஓ.பி.எஸ்.ஸின் மௌனமும்

0
கவர் ஸ்டோரி - ஹர்ஷா   மௌனம் மிக வலிமையான மொழி. சொல்லாத சொற்கள் சொல்லிய சொற்களைவிட கனமானது.  கோபத்தின் வெளிப்பாடாகவோ அமைதியின் அடையாளமாகவோ இருக்கும் மொழி மௌனம். ஆனால் ஒரு அரசியல் கட்சியில் தலைவர்களின்  மௌனம் கட்சியில் குழப்பத்தை...

மழையால் ஓர் உபயோகம் எனக்கு நடந்திருக்கிறது.

சுஜாதா தேசிகன்                                             ...

85 நிமிடங்களுக்கு அமெரிக்க அதிபர்

0
- ஹர்ஷா   அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே மிக வயதான அதிபராகப் பொறுப்பேற்றவர் ஜோ பைடன்தான். அவர் கடந்த 2019 டிசம்பரில் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது, அவர் நல்ல உடல் நலத்தோடு...

உங்கள் குரல்

0
“பள்ளி திறந்ததால் படு உற்சாகத்தைக் குழந்தைகள் பெற்றுள்ளனர்“ என்று நினைக்கும்போது மகிழ்ச்சி தித்திப்பாய் இனிக்கிறது. ’பாரதி மணியின்’ நல்ல பண்பை  கல்கி வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட சுஜாதாதேசிகருக்கு வாழ்த்துகள். - து.சேரன்.  ஆலங்குளம் “அணையின் வலிமை’ என்பது...

“ரஜினியின் உதவியை மறுத்துவிட்டேன்!” தமிழருவி மணியனின் பண அனுபவம்

2
முகநூல் பக்கம்   "பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார். வறுமையின் கோரத்தை நன்கு உணர்ந்த பாரதியார் நண்பருக்கு எழுதும்போது, `எப்பாடு பட்டேனும் பொருள் தேடுக’ என்று எழுதியிருக்கிறார். ’பணம்...