நாய் ஜென்மமா? மனித ஜென்மமா?

நாய் ஜென்மமா? மனித ஜென்மமா?
Published on

அருள்வாக்கு

ஸ்ரீ சிருங்கேரி சங்கராச்சாரியார்

ந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டாலும் முதலாவது வயிற்றுப்பசியைப் போக்கிக் கொண்டால்தான் முடியும். பசியை நீக்க முடியவில்லை என்றால் சந்தியாவந்தனம் செய்யத் தோன்றாது. ஆகவே, பசியையும் போக்கிக்கொள்ள வேண்டும், பக்தியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டும் இருந்தால்தான் நாம் மனிதர்கள். நாம் விவேகிகள் என்று சொல்லிக் கொள்வதில் ஏதாவது பொருள் இருக்கும். லௌகிக விவகரத்தில் மட்டும் ஈடுபட்டு சகல சௌபாக்கியங்களையும் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து அதிலேயே ஊறிப்போய் விட்டோமானால் ஒரு பயனும் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவர்களாகிவிடுவோம்.

பார்க்கப்போனால் ஒரு நாய் கூடத்தான் எவ்வளவோ சௌபாக்கியத்தை அனுபவிக்கிறது. ஒரு பணக்காரர் வீட்டுக்கு ஒரு நாய் போய்ச் சேர்ந்தால் அதைப் பார்த்துக்கொள்ள ஓர் ஆள் பின்னாலேயே வருகிறான். நமக்குப் பசும்பால் கிடைக்கிறதோ இல்லையோ அதற்குக் கிடைகிறது. அதை வெளியே அழைத்துக்கொண்டு போய்வர ஓர் ஆள். எஜமானனுடன் அது கார் சவாரி செய்கிறது. மற்ற மனிதர்கள் ஆசைப்பட்டாலும் அது கிடைக்காது.

என்ன இருந்து என்ன? அது நாய் ஜென்மம்தானே? பிறப்பதற்கு முன் அந்த மாதிரி நாய் ஜென்மம் வேண்டுமா? அல்லது மனித ஜென்மம் வேண்டுமா என்று கேட்டிருந்தால் என்ன சொல்லி இருப்போம். மனித ஜென்மமே மேல் என்றுதானே சொல்லி இருப்போம். பணக்காருக்குக் கோபம் வந்து துரத்திவிட்டால் அந்த நாய் சாதாரணத் தெரு நாய் ஆகிவிடும். ஆனால் மனிதனுக்கு அப்படி இல்லையே? நாம் எப்பேர்ப்பட்டவருடன் வாழ்ந்தாலும் ஒருவிதமாக வாழ்க்கை நடந்தாலும் அவரைப் பிரிந்து வேறு எங்கே சென்றாலும் முன்பைவிட மேலும் நல்லவிதமாக வாழ்க்கை நடத்த முடியும்.

அதாவது மனிதன் மனிதனாக வாழ்ந்தால் எப்படியோ, நல்ல கர்மங்களின் மூலம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். இம்மைக்குத் தேவையான வற்றைக் கவனிக்கும்போது, மறுமைக்குத் தேவையானவற்றையும் சேர்த்துக் கவனித்தால் மனித ஜென்மம் அடைந்ததன் பயனைப் பெற்றவர்களாவோம். வெறும் இகபர சௌக்கியங்களைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுத் தேடிக் கொண்டிருந்தால் பணக்காரர் வீட்டு நாயைப் போன்ற வாழ்க்கைதான் கிடைக்கும். அந்தப் பணமும் வசதியும் போய்விட்டால் ஒன்றுக்கும லாயக்கில்லாதவர்களாகி விடுவோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com