0,00 INR

No products in the cart.

“எல்லாரும் சமம்னா யார் ராஜா?”

நெஞ்சுக்கு நீதி விமர்சனம்

– லதானந்த்

தாத்தாவின் சுயசரிதைத் தலைப்பு என்பதைத் தவிரப் பேரனின் திரைப்படத்துக்கும் தலைப்புக்கும் அதிக சம்பந்தம் ஏதும் இல்லை.

“வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுத் தூக்கில் தொங்கவிடப்படும் இரு சிறுமியரின் இறப்புக்குக் காரணம் ஆணவக் கொலையே” என்ற கோணத்தில் வழக்கு ஒன்று ஜோடிக்கப்பட்டு, சிறுமியரின் பெற்றோரே கைதுசெய்யப்பட்ட நிலையில், வழக்கின் உண்மைத் திருப்பங்களைக் காவல்துறை அதிகாரி ஒருவர் கண்டறிவதுதான் கதை. துப்புத் துலக்கும்போது அவருக்குக் காவல் துறையிலிருந்தும் அரசியலில் இருந்தும் பற்பல குறுக்கீடுகள் வந்தாலும், திறமையாக அவற்றைச் சமாளிக்கிறார்.

ஆர்டிகிள் 15 என்ற பாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வமான தமிழாக்கம்தான் இந்தப் படம். பெரும்பாலும் மூலப் படங்களில் இருந்து தமிழில் மறு ஆக்கம் செய்யப்படும்போது இடம், பொருள், ஏவல் மாற்றங்களினால் சில சமயங்களில் மூலக் கதையின் ஜீவன் பிசிறடித்துப் போய்விடுவதுண்டு. ஆனால் இந்தப் படத்தில் இயல்பான த்ரில்லர் படத்தைப் பார்ப்பதைப் போன்றதோர் உணர்வே மேலிடுகிறது. தொய்வில்லாத நகர்வோடு படம் பயணிக்கிறது. கூர்மையான எடிட்டிங் படத்துக்கு இன்னும் வேகம் சேர்க்கிறது. திறமையான இயக்கத்துக்கு அருண் காமராஜுக்கு ஒரு ‘ஜே’ போடலாம்!

உதயநிதியின் நடிப்பில் படத்துக்குப் படம் மெருகேறி வருகிறது. IPS அதிகாரி விஜயராகவனாக நடித்து நீதி கிடைக்க நெடும் போராட்டத்தில் ஈடுபடுகிறார். எந்த ஓர் இடத்திலும் மிகை நடிப்பு என்பதே இல்லை.

ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைகள், அதிகார மீறல்கள் பலவும் தோலுரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. சக பணியாளர்களின் ஜாதி பற்றி கதாநாயகன் விசாரிக்கும் காட்சியின் போது ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர்.

திபு நினன் தாமஸின் இசை படத்துக்குப் பக்க பலம். இளவரசு, மயில்சாமி, சாயாஜி ஷிண்டே நடிப்பு கச்சிதம்.

“மொழியைக் கற்றுக் கொள்வது ஆர்வம்; திணிப்பது ஆணவம்!” என்பது போன்ற அரசியல் சாய வசனங்களும் ஆங்காங்கே ஒலித்து ஓய்கின்றன.

பொதுவாக ஜாதி வேறுபாடுகளைச் சாடும் படங்களில் க்ரைம் த்ரில்லிங் என்ற அம்சம் இருக்காது; க்ரைம் த்ரில்லர் படங்களில் ஜாதிப் பாகுபாட்டுக்கு இடம் இருக்காது. ஆனால் நெஞ்சுக்கு நீதியில் இரண்டுமே சம அளவில் கலக்கப்பட்டிருக்கின்றன.

வன்புணர்வு செய்யப்பட்ட சடலங்களை மரத்தில் தொங்கவிடுவது திரைக்கதையின் பலவீனமா? அல்லது வில்லன்களின் மடத்தனமா? உடற்கூறாய்வில் உண்மைகள் தெரிந்துவிடாதா?

தமிழரசன் பச்சமுத்துவின் வசனங்கள் பொளேர் ரகம்.

“எல்லாரும் சமம்னா யார் ராஜா?”

“சமம்னு நெனைக்கிறவன்தான் ராஜா”

“நடுவில் நிக்கிறது இல்ல சார், நடுநிலை!  நியாயத்தின் பக்கம் நிக்கிறதுதான் நடுநிலை” போன்றன சில உதாரணங்கள்.

பொதுவாக நெஞ்சுக்கு நீதி = நம்பிப் பார்க்கலாம்!

 

 

லதானந்த்
இயற் பெயர் டி.ரத்தினசாமி. புனைபெயர் லதானந்த். வனத் துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வனங்களில் வினோதங்கள், மெமரி பூஸ்டர், வாங்க பழகலாம், எனப்படுவது, பிருந்தாவன் முதல் பிரயாகை வரை ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். உடைந்த கண்ணாடிகள், பாம்பின் கண் ஆகியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள். ’நீலப்பசு’ என்னும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கிய மேடை அமைப்பு, 2021ஆம் ஆண்டுக்கான ’பாரதிதாசன் விருது’ வழங்கியுள்ளது. கோகுலம் இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ள இவருக்கு, ‘சிறந்த சிறார் எழுத்தாளர்’ என்னும் விருதை தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா’ அமைப்பு வழங்கியுள்ளது.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

0
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

0
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...