0,00 INR

No products in the cart.

பிரம்மாண்டம் என்பது கோடிகளை கொட்டிப் படம் எடுப்பது அல்ல

 காசியிலுள்ள கியான்வாபி மசூதி,  வழக்கு குறித்து  உங்கள் நிலைப்பாடு என்ன ?
– இரா. அருண்குமார்,  புதுச்சேரி – 605001

கியான்வாபி மசூதியில் நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் வழக்கறிஞர் குழு ஆய்வு நடந்துகொண்டிருக்கும்போதே அதன் ரிப்போர்ட் ஊடகங்களுக்கு கசிந்து விட்டது. . மசூதிக்கு உள்ளே தொழுகைக்கு முன் சுத்தம் செய்து கொள்ளும் குளத்தின் அடியில் சிவலிங்கம் கிடைத்திருக்கிறது என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சொல்லி இருக்கிறார். அது சர்ச்சையை கிளப்பவே உடனடியாக மசூதியின் அந்தப் பகுதி சீல் வைக்கப்பட்டிருக்கிறது. அது லிங்கம் இல்லை; முகலாய காலத்து குளங்களில் செயற்கை நீரூற்று அமைத்திருப்பார்கள். அதற்கான கல்தான் இது என்று மசூதி நிர்வாகம் சொல்கிறது.

இதன் முழு விபரம் இன்னமும் தெரியவில்லை. அதற்குள்  இதற்காகவே காத்திருந்தது போல உத்திரப் பிரதேச மாநில துணை முதல்வர் ‘சிவபெருமானே மசூதிக்கு உள்ளே எழுந்தருளி விட்டார்,’ என்ற ரீதியில் ஒரு ட்வீட் பதிந்திருக்கிறார். அதுவும் ‘புத்த பூர்ணிமா அன்று சிவன் “தோன்றி” இருக்கிறார் பார்த்தீர்களா?’ என்றெல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தப் பஞ்சாயத்தில் நடுவில் புத்தர் எதற்கு வந்தார் என்பது அந்தப் பரமசிவனுக்குத்தான் வெளிச்சம். உச்ச நீதிமன்றம் தனது விசாரணையின் முடிவில் இந்த அவலங்களுக்கு ஒரு நிரந்தர முடிவு கட்ட வேண்டும். இந்தியாவில் எந்த மசூதியும் மந்திர் ஆக மாறாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். க்யான்வாபி விசாரணையில் லிங்கம் வந்தால் என்ன, அந்தப் பரமசிவனே நீதிமன்றத்தில் தோன்றி  சாட்சி அளித்தாலும்  அது மசூதியாகவே தொடரும் என்று கண்டிப்பு காட்டியிருக்க வேண்டும் .

அதைவிடுத்து  அப்படியென்றால் “முதலில் இருந்து வருவோம்” என்ற ரீதியில் வழக்கை மாவட்ட நீதி மன்றத்து தள்ளிவிட்டிருக்கிறது.  இவற்றையெல்லாவற்றையும் பார்க்கும் போது இன்னொரு  ராம் ஜென்மபூமிபோராட்டத்துக்கும் வன்முறைக்கும்  அரசியல் கட்சிகள்  அடிக்கல் போட்டுவிடுவார்களோ என்று அச்சமாகியிருக்கிறது.

? மாத்தி யோசிக்கும் திறனை மாணவர்களிடம் மேம்படுத்த என்ன பண்ணலாம்?
– நெல்லை குரலோன், பொட்டல் புதூர்

இன்றைய மாணவன் மாற்றி அல்ல சதாரணமாகவே  எந்த ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்காமலிருக்கும் நிலை குறித்த  விழிப்புணர்வை ஆசிரியர்களிடம் ஏற்படுத்த வேண்டும். அதை எப்படிச்செய்வது என கல்வித்துறை மாற்றி யோசிக்க வேண்டும்.

“தி.மு.க. பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது” என்று அண்ணாமலை பேசியிருப்பது பற்றி…
– இராம தாஸன், வாணரப்பேட்டை

ஒன்றும் இருக்காது என்று தெரிந்த பின்னரும் ஏன் கஷட்டப்பட்டு கண்ணில் நீர்வர  உரிக்க வேண்டும்.

“90 சதவீத தமிழ்நாட்டு அமைச்சர்களுக்கு ஆங்கிலமே தெரியாது, விமானம் கூட ஏற தெரியாது” என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை  சொல்லுகிறார்…
– மலர்விழி, கோவை

தமிழக அமைச்சர்களுக்கு  ஆங்கிலம் தெரியாது என்று சொல்லும் இவருக்கு  கட்சியில் ஆங்கிலம்  தெரியாத அமைச்சர்கள் இருப்பது தெரியாது. விமானம் ஏற  ஆங்கில தெரிந்திருக்கவேண்டுமா? டிக்கெட் வாங்கினால் போதும் என்று அல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

பேரறிவாளன் விடுதலை எதை காட்டுகிறது?
– மதுரை குழந்தைவேலு, சென்னை

தனி மனித சட்டப்போராட்டதிற்கு  நீதிமன்றம் அளிக்கும் மதிப்பையும், இந்த நாட்டின் ஜனநாயக மாண்பையும்.

 “2026-ல் தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சியமைக்கும்” என்று அண்ணாமலை கூறியுள்ளாரே… இது சாத்தியமாகுமா?
– எம். நிர்மலா, , புதுச்சேரி – 605001

நிச்சயமாக சாத்தியமில்லை.  திராவிட கழகங்களுடன் கூட்டணியில்லாமல் 20 சீட்கள் கூட பெறமுடியாது.

 துரோகம் என்பது தெரிந்து தானே செய்யப்படுகிறது?

– மீ.யூசுப் ஜாகிர்,வந்தவாசி.

ஆம்… அதைச் செய்பருக்கு மட்டும்.

‘வீர பாண்டிய கட்டபொம்மன்’, ‘ரத்தக்கண்ணீர்’ போன்ற படங்கள் நாடகங்களாக பலமுறை அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளதா?
– சி. கார்த்திகேயன், சாத்தூர்

ஆம் … தமிழக சினிமாத்துறையின் அடித்தளம்  மேடை நாடகங்களிலிருந்து எழுந்தது. பல நகரங்களில் பல நாட்கள் நடந்த நாடகங்கள் தான் பின்னாளில் திரைப்படங்களாக உருவாயின. அதில் நடித்த நடிகர்கள் திரைப்படங்களிலும் நடித்தனர். சினிமாவில் பிரபலமாயிருந்த போதும் சிவாஜி கணேசன், எம். ஆர் ராதா போன்றவர்கள் நாடகங்களை நடத்திக்கொண்டிருந்தார்கள்.

 “ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய & மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது; ஜிஎஸ்டி முடிவுகளுக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது” என்ற உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறதே?
 – சந்திர சேகர், திருமங்கலம்

ஒன்றிய அரசுக்கு மற்றுமோர் குட்டு. ஆனால் இந்த தீர்ப்பு பல புதிய பிரச்னைகளை உருவாக்கும்.

கலைஞரை நினைக்கும் போது எந்த ஞாபகம் தங்களுக்கு முதலில் வரும்?
– மாடக்கண்ணு, ரோஸ்மியாபுரம்

அவரது அபார நினைவாற்றல். தமிழ்மொழியறிவு,  எந்தக்கேள்விக்கும் சமயோசிதமான பதில் அளிக்கும் ஆற்றல்.

தாமஸ் கப பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா வென்றுள்ளது பற்றி..?
-சா.சொக்கலிங்க ஆதித்தன் ரோஸ்மியாபுரம்

இதுவரை, சாய்னா மற்றும் சிந்து ஆதிக்கம் செலுத்தும் பெண்களின் கோட்டையாக இருந்த பேட்மிட்டன் போட்டிகளில்  நமது இளைஞர்களும்  கொடிக்கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். குழு ஆட்டங்களில் தங்கம் பெறுவது என்பது மிகப்பெரிய சிறப்பு. இந்திய  முன்னாள் ஆட்டக்காரரும் கோச்சுமான பிரகாஷ் படுகோனே  சொன்னது போல் தனது 73 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக தாமஸ் கோப்பையை 2022 இறுதிப் போட்டியில் வென்றதின் மூலம் புதிய சரித்திரம் படைத்திருக்கிறது.

“கடந்த 10 ஆண்டுகளில் நிமிர்ந்து நின்று பதில் சொல்லும் அளவிற்கு தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர்ந்துள்ளது” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். உண்மையாகவே தமிழ்நாடு பா.ஜ.க. வளர்ச்சியடைந்துள்ளதா ?
– ஜோஷ், அயன்புரம்

இவர்கள் யாருக்கு என்ன பதில் சொல்லுகிறார்கள்? கேள்விகள் தானே கேட்கிறார்கள்  அதைக் கேட்க புதிய ஆட்கள் வந்திருக்கிறார்கள். அதை வளர்ச்சியாக பார்க்கும் இந்த அம்மையார் அதற்காக எதுவும் செய்யவில்லை என்பதுதான் உண்மை.

R R R படம் எப்படி?
– மனோகரன்,  புதுக்கோட்டை

வெள்ளையன் ஆட்சியின்போது ஆந்திரத்தில் ஏகாதிபத்தியக் கொடுமைகளின் சிக்கிய பழங்குடி மக்கள். ஒரு போராளிக்கும் முரட்டு    போலீஸ் அதிகாரிக்குமிடையே நிகழும் போராட்டம் என்ற, ஒரு வரிக் கதை தான். 3 டி யில் எடுக்கப்பட்டு இந்தியாவையே கலக்கிக்கொண்டிருக்கிறது.

பிரம்மாண்டம் என்பது கோடிகளை கொட்டிப் படம் எடுப்பது அல்ல… சின்னஞ்சிறு விஷயத்தைக்கூட நுணுக்கமான சித்தரிப்போடும், விவரிப்புக்கு ஏற்ற புதுமையோடும் அமைப்பதுதான் பிரம்மாண்டம். அதை இந்தப்படம் சொல்லுகிறது.

இதற்கான காட்சிகளை, இப்படிக்கூட யோசித்து எடுக்க இயலுமா என்ற பிரமிப்பு அடங்கவே நேரம் பிடித்தது. எது நிஜம் து கிராபிக்ஸ் என்று கண்டுபிடிக்க முடியாத  படத்தின் கலை நேர்த்தி, கதாபாத்திரங்களாகவே கூடுவிட்டுக் கூடு பாய்ந்த நடிகர்களின் அர்ப்பணிப்பு, இசை, எடிட்டிங்.

ராஜமௌலி மீண்டும் தன் பாணியில் சாதித்திருக்கிறார்.

போலி என் கவுன்ட்டா்  விவகாரம் என்ன நடக்கிறது? நம்ம கண்ணை நம்மாலே நம்ப முடியலையே தராசாரே!
– நா.சரவணன்,  செம்பனாா்கோவில்

கண்ணால் காண்பதும் பொய்யே என்கிறீர்களா?  நாம் பார்த்தது ஊடகங்கள் காட்டிய மலர் தூவி  மக்கள் பாராட்டிய போலீஸைத்தான். ஆனால், விசாரித்த ஆணையம் பார்த்த போலீஸ் வேறு என்பது வெளிச்சமாகியிருக்கிறது.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தில் சந்தேக நபர்களாகக் கைது செய்யப்பட்ட நான்கு பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு போலியான நடவடிக்கை என்று அது தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தான் குற்றவாளிகள் என நம்பிய போலீஸார் அதை நீதிமன்றத்தில் நீருபிக்க முடியாது என்று கருதி என்கவுண்டர் ஆக்கிவிட்டார்கள் என்ற பேச்சு அந்த சம்பவம் நடந்தவுடனே எழுந்த ஒரு பேச்சு.   இப்போது அதை விசாரித்த ஆணையம் அறிக்கையாக கொடுத்திருக்கிறது.

கும்பல் தாக்குதல் படுகொலையை எப்படி ஏற்க முடியாதோ அதுபோல், உடனடி நீதி என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த நேரத்திலும் சட்டத்தின் ஆட்சியே நிலவ வேண்டும். குற்றத்திற்கான தண்டனை என்பது சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி மட்டுமே இருக்க வேண்டும்’ என்று ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆணையத்தில் முன்னாள் சிபிஐ டைரக்டர் கார்த்திகேயன் ஓர் உறுப்பினர்.

 

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

ஸ்ரீரங்கம் கதைகள், ஓவியங்கள், சன்மானம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் ஒரு நாள் எழுத்தாளர் சுஜாதா ‘ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்’ மாதிரி இன்னொரு செட் எழுத உத்தேசம். அவ்வப்போது சில குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறேன் ஒரு பத்து, பன்னிரண்டு கதை தேறும்...

அப்பா, அம்மாவைத் தேடியபோது கிடைத்த அக்கா

1
- மோகன்   கோவையில் 1970களில் ப்ளூ மௌண்டேன் என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்கு விஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்...

கேள்விகளும் பதில்களும்  அவரைப் போலவே அழகாக இருந்தது.

2
யார் வேண்டுமானாலும் யூடியூப் சானல் துவங்கலாம் என்ற நிலையில் ஜாதி, மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோக்கள் யூடியூபில் பதிவு செய்யப்படுவது பல பிரச்னைகள், மோதல்களை உருவாக்கும். யூடியூபில் பதிவு செய்யப்படுகின்ற ஆபாச வீடியோக்கள்...

ஆழ்ந்த அஞ்சலி என்று எளிதில் விலகிவிட முடியாது …

3
அஞ்சலி  குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அண்மையில் காலமானார்.  அவரைக் குறித்து அவரது நண்பரும் எழுத்தாளாருமான பாரதிபாலன்...   பாரதி பாலன்  அது 1987 குமுதம் ஆசிரியர்...