புத்தகங்களை வாங்கிப் படிக்கத் தூண்டுகின்றன.

புத்தகங்களை வாங்கிப் படிக்கத் தூண்டுகின்றன.
Published on

லையங்கத்தில் "முதலையின் வாயில் சிக்கிக் கொண்டு கதறும் யானை" என்று தமிழக ஜவுளித்துறையை ஒப்பிட்டது கருத்து நோக்கிலும் சுவை நோக்கிலும் அருமை…அருமை !
– நெல்லை குரலோன்

நூல் விலை ஏறும் போது , துணி விலையும் ஏறும். தனியார் கடையில் அதிக ரூபாய் என்றாலும் வாங்கிவிடுவர். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். "நல்ல நாளிலேயே நாழி பால் கறக்காது. கோடை காலத்தில் குருணி பால் கரக்கணும்னா எங்கேயிருந்து கறக்கும்" என்று.  நல்ல நாளிலேயே கோ ஆப் டெக்ஸ் , காதி போன்ற அரசாங்க கடைகளில் சொற்ப விற்பனையே. நூல் விளையேற்றத்தில் விற்பனை கேள்வி குறியாகிவிடும் . முற்றுப்புள்ளியாகி விடுமுன்பு விழித்துக்கொள்ள அறிவுறுத்தியது தலையங்கம்.

ஒரு பக்கம் இயற்கையை காப்பாற்ற வேண்டும் என்ற கூக்குரல். இன்னொரு பக்கம் பிளாஸ்டிக் குவியல்கள்.  சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லை என்பதை படத்தோடு, கடைசி பக்கத்தில்  சுஜாதா தேசிகன் வெளியிட்டிருந்தது அபாரம்.
– ஜானு, விழுப்புரம்

"நூல் அறிமுகம் மிகப் பயனுள்ள பகுதி. பலஅறிமுகங்கள்  அருமையாகயிருக்கின்றன. புத்தகங்களை வாங்கிப்படிக்கத் தூண்டுகின்றன.
– ரேவதி, சென்னை

"கண்ணான கண்ணே" கதையைப் படித்ததும் கண்களில் நீர் துளிர்த்தது.  வயது முதிர்ந்தவர்களுக்கு இது தேவையா அது தேவையா என்று பட்டிமன்றம் நடத்துவதை விட, அவர்களுக்கு என்ன தேவையோ அவற்றை கொடுத்தால் அவர்கள் உற்சாகமாக இருப்பார்கள் என்று மனதுக்குள் உறுதி செய்ய வைத்த ஒரு அருமையான சிறுகதை. பாராட்டுக்கள்.
– ராதிகா, மதுரை

"டான்" திரைப்படத்தின் விமர்சனம் மிகவும் அருமை. எந்த கல்லூரியிலும் மாணவர்கள் ஆசிரியர்களை வாடா போடா என்று அழைக்க மாட்டார்கள் என்று அதில் உள்ள தவறை சுட்டிக்காட்டி மாணவர்களுக்கு , முற்பாதி  பிடிக்கும் பிற்பாதி பெற்றோர்களுக்கு பிடிக்குமென்று பிடித்தவர்களை  தரம் பிரித்து சொன்ன கல்கி இதழுக்கு பாராட்டுக்கள்.
– நந்தினி கிருஷ்ணன், மதுரை -6

ராசு பதில்கள் அருமை. சில பதில்கள் சிரிக்க வைக்கின்றன, சில சிந்திக்க வைக்கின்றன.
– ரமேஷ் வைத்தியநாதன், சேலம்

'ஒரு நிருபரின் டைரி' தொடரில் எழுத்தாளர் ஜெயகாந்தன் குறித்து
எஸ். சந்திரமெளலியின் கட்டுரை படிக்க படிக்க சுவாரஸ்யமாகவும் பரவசமாகவும் இருந்தது. 'பத்திரிகைகளில் எழுதவில்லை என்றால் நான் இல்லாமல் போய்விட்டேன் என்றாகிவிடுமா' என்ற ஜே.கே . பதிலில் வீரியமும், எழுத்தாளர் மணியனிடம் 'என்னை சந்திக்க விரும்பும் எம்.ஜி.ஆர், இங்கு வந்தே என்னை பார்க்கட்டுமே' என்று ஜே.கே. கூறுயதில் உள்ள தெனாவட்டு மெய்சிலிர்க்க வைக்கிறது. இரவில் தென்னை மரத்தில் ஏறிய திருடனிடம் ' மரத்தின் தேங்காய்களை பறிக்க ரொம்ப  நாட்களாகவே ஆள் தேடிக் கொண்டிருந்தேன். நல்ல காலம் நீ வந்தாய். எல்லா காய்களையும் பறித்துப் போடு' என்று திருடனுக்கும் பறித்த  தேங்காய்களை சரிபாதியாக பங்கிட்டு கொடுத்த ஜே.கே. வாழ்க்கையை  'ருசித்து' வாழ்ந்துள்ளார்.
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com