0,00 INR

No products in the cart.

வியாபார மொழி

சிறுகதை

ஆர்.நடராஜன்

 

பொது கூட்டத்தில் பேசிய மொழி வளர்ச்சி மந்திரி “வடவர் மொழியும் வேண்டாம், வடவர் வழியும் வேண்டாம்… நாம் நாமே நமக்கு நாமே” என்று உரக்க முழங்கிவிட்டு வீட்டுக்கு வந்தார். நல்ல பசி… “சாப்பிட என்ன இருக்கிறது” என்று மனைவியிடம் கேட்டார்.

“உப்புமா இருக்கு, இட்லி வேணுன்னா ஊத்திதரட்டுமா” என்றார் அவர் மனைவி.

“யாருக்குடி வேண்டும் இதெல்லாம், டெல்லி தாபாவுக்கு ஆள் அனுப்பி ஆளு பரோட்டாவும், பானீ பூரியும் வாங்கிவரச் சொல்“ என்றார். வேலையாளும் புறப்பட்டார்.

மனைவி கிண்டல் செய்தார். “வாயில வடக்கத்தி மொழி நுழைய மாட்டேங்குதுன்னு சொல்றீங்க. வடக்கத்தி உணவு மட்டும் நுழையுதா.”

“வாயில வடக்கத்தி உணவு நுழைந்தா பத்தாது, இந்தியும் நுழையணும்னு சொல்றீயா.  கூடிய சீக்கிரம் பார் என் வாயிலும் இந்தி நுழையும். மக்களுக்குச் சொல்றது நமக்கு சரிபடுமா என்ன“ என்று கேட்டார்.

யாரோ சீண்டி விட்டது போல எப்படியாவது இந்தி கற்றுக்கொள்வது என்று முடிவெடுத்தார். அது வெளியே தெரியவராமல் பார்த்துக்கொள்ள வேண்டுமே என்ற கவலையும் இருந்தது.

பள்ளிக்கூடத்திற்கு அருகில்தான் மந்திரியின் பங்களா இருந்தது. “கொஞ்ச நாளைக்கு டியூஷன் சொல்லிக் கொடுப்பதற்காக இந்தி ஆசிரியரை அழைக்கலாம்” என்று நினைத்தார். ஆங்கிலம் தெரிந்த ஆசிரியரை அழைக்கலாம் என்றால் “மந்திரிக்கு ஆங்கிலம் தெரியாத என்று நினைப்பார்கள்” என்று அவரையும் அழைக்கவில்லை. இங்கே அங்கே என்று கஷ்டப்பட்டுத் தேடி மந்திரியின் உதவியாளர் ஒரு தமிழாசிரியரைப் பிடித்தார். அவர் முன்பு இந்தி ஆசிரியராக இருந்தவராம். பள்ளிக்கூடத்தில் இந்தி ஒழிக்கப்பட்ட பிறகு தமிழ் புலவர் தேர்வு எழுதி தமிழாசிரியர் ஆனவர். “வீட்டில் தமிழாசிரியர் வருவது பிள்ளைகளுக்கு பாடம் கற்றுத் தருவதற்கு என்று சொல்லிக் கொள்ளலாம்” என்று அவரையே இந்தி கற்றுக்கொடுக்க அழைத்தார் மந்திரி.

நவநீதன் என்ற அந்த ஆசிரியர் தினமும் மாலை வேளையில் பள்ளிக்கூடம் முடிந்த பின்பு மந்திரி வீட்டுக்குச் சென்று இந்தி சொல்லிக் கொடுத்து வந்தார்.

ஒரு நாளைக்கு மந்திரியின் சம்சாரம் மந்திரியை வாட்டி எடுத்துவிட்டார். “மாலை நேரமிது. கட்சி ஆபிசுக்கும் போகாமல், வெளி மீட்டிங்கும் போகாமல் இப்படி விழுந்து விழுந்து இந்தி படிக்கிறீர்களே எதற்காக. தனி அறையில்தான் படிக்கிறீர்கள் என்றாலும் வேலைக்காரிக்குக்கூட இந்த விஷயம் தெரியக்கூடாது என்று நான் ரகசியம் காக்கிறேன். ஏன் இப்படி ரகசியமாக இந்தி கற்றுக்கொள்கிறீர்கள்.”

இந்தி ஆசிரியர் டியூஷன் முடிந்து போன பிறகு, மனைவியை அருகில் அமர்த்தி வைத்துக்கொண்டு, மந்திரி காதோடு காதாகச் சொன்னார், “அடியே என் சம்சாரமே இதில் நீ ரகசியம் காக்கத்தான் வேண்டும். நம்ம முதல்வரும், நானும் சேர்ந்து செய்கிற தொழிலுக்கு வடக்கத்திய அரசியல்வாதிதான் கூட்டாளி. வடக்கே நமக்கு இரண்டு தொழிற்சாலையில் பங்கு இருக்கு. அங்குள்ள அரசியல்வாதி இந்தியில் பேசுகிறார். அவருக்கு தமிழ் தெரியாது.”

“உங்களுக்கு மட்டும் ஆங்கிலம் தெரியுமாக்கும்?”

“ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தெரியும். அதை விட்டுத்தள்ளு. அந்த வடக்கத்தி அரசியல்வாதி பச்சாஸ், பச்சீஸ் என்று சொன்னா எது 25 எது 50 என்று தெரியல முளிக்கிறேன். இதற்காக இங்கிருந்து இந்தி தெரிந்த ஒரு ஆபிசர கூட்டிட்டு போகலாம் என்று பார்த்தால் அவன் ஏதாவது வெளியே உலறி வைத்துவிடுவானோ என்று பயமா இருக்கு.”

முகமலர்ந்து மந்திரியின் சம்சாரம் சொன்னாள், “ஓ இதுதானா சங்கதி அப்போ நல்லா கத்துக்கோங்க.”

“கொஞ்ச காலம்தான் இப்படி கஷ்டப்படணும் நம்ம பிள்ளைகள்தான் டேராடூன்ல படிக்கிறாங்க. அவங்க இந்தியெல்லாம் கத்துக்கிறாங்க. அவங்க ஒரு நிலைமைக்கு வரவரைக்கும் நாம் இந்தி பேசித்தானே ஆகணும். வியாபாரம் பண்ண முடியவில்லை என்றால் எதற்கு அரசியலில் இருக்கணும்.”

“அப்போ அரசியலுக்குத் தமிழ்… வியாபாரத்திற்கு இந்தி… என்கிறீர்களா.”

“என்ன நீயே இப்படி கிண்டல் செய்கிறீயே.”

“இல்லங்க ஏதார்த்தமாகத்தான் கேட்டேன்.”

“உன் குரலில் ஒரு குத்தல் தெரிகிறதே.”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க, நாளையில் இருந்து இந்தி வாத்தியார் வரும்போது என்னையும் பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள் நானும் கத்துக்கிறேன். அரசியல் உங்களுக்கு வியாபாரம் என்று வச்சுக்கலாமா.”

“வடக்கே வியாபாரத்தில பணம் மட்டும் முதலீடு அல்ல புரிஞ்சுக்கோ.”

 

3 COMMENTS

  1. கதை காமெடியாக இருந்தாலும் .”மொழி”முக்கியம் என்ற கருத்தை
    உணர்த்தியது ___ janakiparanthaman _____ kovai _36

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

0
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

1
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...