என்னென்ன மாற்றங்களோ… அப்பப்பா….

என்னென்ன மாற்றங்களோ… அப்பப்பா….
Published on

– பாலாஜிகணேஷ்

1960

ப்பப் பாரு கதை புத்தகம் படிக்கிறதே வேலையா போச்சு, பாட புத்தகம் படிக்கிற நேரத்தை விட, விகடன், கல்கி அப்புறம் இந்த கருமம் புடிச்ச குமுதம். இன்னொரு வாட்டி கையில் குமுதத்தை பார்த்தேன் அவ்வளவுதான்…

1970

புத்தகத்தை விட்டாச்சு எப்ப பாரு transistor radio அதுல இந்த இலங்கை வானொலி 12 மணி நேரமும் காபி கடை மாதிரி ஒரே சத்தம்..இளையராஜாவா msvயான்னு சண்ட.. ஜானகியா? லதா மங்கேஷ்கரா? யார் நல்லா பாடறாங்கன்னு ஒரே இம்சை.. ஒரு பக்கம் ஹிந்தி பாட்டு ஒரு பக்கம் தமிழ் பாட்டு…

1980

புதுசா வந்திருக்கிற இந்த டிவியை போட்டு உடைச்சிடணும் மழை காலத்துல கோடு கோடா கோர்ன்னு ஒரே சத்தம்… வராத ரூபவாஹினி யை கூட்டிட்டு வர்றேன்ன்னு பாதி நேரம் மொட்டை மாடியில ஒத்த கால்ல தவம்… வெள்ளிக்கிழமை விளக்கேத்தி வைச்சா இந்த வெள்ளை புடவை கட்டிண்டு ஓன்னு அழற பாட்டா போடறானுங்க.

1990

வண்டா இந்த வீடியோ கேசட் ப்ளேயரை கண்டுபிடிச்சவன் 18 மணி நேரம் கேசட் வாடகைக்கு எடுத்துட்டு வந்து வீட்டையே தியேட்டராக்கி வைத்திருக்காங்க… Evil dead எத்தனை வாட்டி போட்டு உயிரை எடுப்பிங்கடா… ஓடி போயிடு வெளியில

2000

கேபிள்  போட்டுட்டு எப்ப பாரு அதுக்கு முன்னாடியே உக்கார்ந்துக்கிறான்… சாப்பாடு டிபன் எல்லாமே ஹாலில்லேயே பாலசந்தர் சீரியல் திங்கட்கிழமை வருமே அது தான் பாக்கற மாதிரி இருக்கு புதன்கிழமை வர்ற விடாது கருப்பு செமயா இருக்கு என்ன இருந்தாலும் ரூபவாஹினி மாதிரி வருமா

2010

24 மணி நேரமும் இந்த இண்டர்நெட்லே என்ன பாக்கிறானோ.. படிக்கிறானா இல்லையானே தெரியல சாமி, இப்படியே போனா எப்படித்தான் படிச்சு வேலைக்கு போயி ஹம்…

2020

Netflix, amazon , WebTV இந்த கர்மேந்திரியங்கள் வந்த பிறகு முகத்தை பாத்து பேசறதேயில்லை சாப்பிடும்போது கூட மொபைலையே முறைச்சிட்டு இருக்கானுங்க…

இந்த வார்த்தைகள் ஒலிக்காத தமிழக இல்லங்கள் மிகவும் குறைவே…

உங்க வீட்டில எப்படிங்க….?

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com