
"தலைவரோட முழு நம்பிக்கையும் பெற்ற ஒரே 'மெய் காப்பாளர்' இவர் தான்!"
"எப்படிச் சொல்றீங்க?"
"தலைவர் சொன்ன உண்மைச் செய்தி எதையுமே அவர் வெளியே சொன்னதில்லை!"
"திடீர்னு அடுத்த ஜென்மத்து கனவெல்லாம் வருது டாக்டர்?"
"ஆபரேஷனைப் பற்றி நினைச்சுக்கிட்டே படுத்தீங்களா?"
"நடிப்புத் திறன் என்னை என்றைக்குமே கை விடாதுன்னு சொல்றாரே தலைவர்!"
"சினிமா இல்லாட்டி அரசியல்ல நடிச்சு பிழைச்சுக்கலாம்னு சொல்றாரோ…?"
"கபாலி திருடன்தானே தவிர பொய் பேசமாட்டான்."
"நிஜமாவா சொல்றீங்க?"
"ஆமா சார்… திருடின பொருட்களோட மதிப்பை பைசா குறைக்காமல் கரெக்டா சொல்லி, அதுக்கான மாமூலை பாக்கி வைக்காமல் கொடுத் துடுவான் சார்."
சர்வர் : "ரவா தோசை இருக்கு, ஆனா சாம்பார் – சட்னி இல்ல சார்!"
வாடிக்கையாளர் : "அப்ப, ராவா தோசைன்னு சொல்லு?"
"குழந்தைக்கு ஏன் தலைவர் பாலோடைன்னு பேர் வச்சு அனுப்பினார்?"
"வாய்ல நுழையிற மாதிரியான பேரா வேணும்னு கேட்டாங்களாம்!"