0,00 INR

No products in the cart.

உங்கள் குரல்

பூமி முதல் குளவி வரையான 24 பேர்களின் செயல்களிலிருந்து குருமார்கள் கற்றுக் கொண்டதன் மூலம் வாசகர்கள் ஆகிய நாங்கள் ஞானம் பெறாவிட்டாலும் தெளிவுரை அடைந்தோம்.
– மதுரை குழந்தைவேலு

மௌனம் வலிமையா? வலியா…? என்ற கேள்விக்கு தராசார் அளித்த பதில், அதன் வலிமையையும், அதனால் வரும் வலியையும் ஒருசேர சிறப்பாக வலியுறுத்தியது.
– ராமசந்திரன், நாமக்கல்

சாமானிய நடுத்தர மக்கள் எந்தெந்த விதங்களில் விலைவாசி உயர்வை கடினமான ஒரு சூழலில் எதிர்கொள்கிறார்கள், அதை உடனடியாக அரசு ஆவணங்கள் செய்ய வேண்டும் என்ற தலையங்கம் இந்திய அரசு செவி சாய்க்கும் என்றே நம்புவோம்.

ரு வித்தியாசமான ஆட்சியினை டெல்லி மக்கள் ஏற்றுக் கொண்டு பயணம் செய்வது போன்ற நிலையை வரும் தேர்தலில் பஞ்சாப் மாநில மக்கள் ஆம் ஆத்மி கட்சியிடம் எதிர்பார்க்கிறார்கள் என்பதையே இவர் ஸ்டோரி உணர்த்துகிறது.
– சி. கார்த்திகேயன், சாத்தூர் – 626203

“தனுஷ் – ஐஸ்வர்யா” பிரிந்து விட்டார்களே என்பதைக் குறித்து கேட்ட கேள்விக்கு தராசுவின் பதில் மிகவும் அருமை. மிக கண்ணியமாக சொல்லப்பட்ட இந்த பதில் மூலம் தராசு தான் ஒரு நேர்மை சுவாதி என்று புரிய வைத்து விட்டது. அடுத்தவர் வீட்டு விவகாரங்களை பொதுவில் விமர்சிக்காமல் இருப்பதுதான் மிகவும் நல்ல முதிர்ச்சியான பார்வை என்ற அருமையான கருத்தை படித்ததும் தராசுவின் மீது இருந்த மதிப்பு மேலும் அதிகப்படுத்தியது. அருமையான பதில் பாராட்டுக்கள்.
– நந்தினி கிருஷ்ணன்

“கடைசிப் பக்கத்தில்” வரும் “சுஜாதா தேசிகன்”அவர்களின் “மனிதன் உருவாக்கிய புத்திசாலி” என்ற பாவம் தூக்கத்தில் வந்த செய்தி அருமை உண்மையில் அதுதான் என்று யோசிக்க வைத்தது. அவர் குறிப்பிட்ட எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய பாரதியாரின் கண்ணன் பாட்டு மிகவும் அருமையாக இருந்தது. எவ்வளவு ஒரு யதார்த்தமான உண்மையை மிக அழகாக சொல்லியிருக்கிறார். காக்கை, சிங்கம் முகத்தையும் வேண்டுமானால் வரை முடியுமே தவிர கம்பராமாயணத்தை, பொன்னியின் செல்வன் எழுத முடியாது என்பதால்தான் இன்றும் “பொன்னியின் செல்வன் போன்ற நாவல்கள் அதிகமாக விற்பனையாகிறது” என்ற சுஜாதா தேசிகன் அவர்களின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை. மிகவும் அருமையான கடைசிப்பக்கம் பாராட்டுக்கள்.
– ராதிகா, மதுரை

ஞ்சாபில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க. வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் சுழன்றாலும் , ஆம் ஆத்மி கட்சி அமைக்கும் தேர்தல் வியூகங்கள் மலைக்க வைக்கின்றன. அள்ளி வீசியுள்ள வாக்குறுதிகள் மக்களை அசைத்துப் பார்க்கிறது. ’முதலமைச்சரை மக்களே தேர்வு செய்யலாம்’ என்பது டிஜிட்டல் இந்தியாவில் புது வரவு. அதற்கு கிடைத்துள்ள ரெஸ்பான்ஸ் பல்லே …பல்லே. பகவமான் மாண்புமிகு பஞ்சாப் முதல்வர் ஆவாரா என்பது மார்(க்)ச் ரிசல்டில் தெரிந்துவிடும்.

‘கடமைக்கு பாராட்டும் மரியாதையும்  தேவையில்லை ‘ என்று கூறி கொடியேற்றத் தயங்கிய ஆசிரியை செல்வி தான் போக வேண்டிய தூரம் இன்னும் உள்ளது .  மாலையும், மரியாதையும் தனது இலக்கை திசை திரும்பி விடக்கூடாது என்று கவனம் எடுத்துக்கொண்டது அருமை. சாதிக்கத் துடிப்பவர்கள் தாம் புகழப்படும்போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பதோடு,  வீழ்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிறப்பான சிறுகதை ‘உச்சிதனை நீ முகர்ந்தால்.’
 – ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...

அற்புதமாக கொண்டாடி அசத்தி விட்டார்

0
உங்கள் குரல்   குழம்பிய மனநிலையில் இருந்த எனக்கு மகாசுவாமிகளின் அருளுரையை படித்த பிறகு மனத்தெளிவும், உறுதியும் கிடைக்கப் பெற்றேன். - கலைமதி, நாகர்கோவில் சுஜாதா தேசிகன் வெளிநாடு குறித்து சுஜாதா அன்று கூறியதாக கடைசி பக்கத்தில் பதிவிட்டது...

அந்த நிகழ்ச்சியை அப்படியே நேரில் பார்த்தது போல மனநிறைவு தந்தது. 

0
"சுஜாதா தேசிகன்" அவர்களின் கடைசிப் பக்கத்தில் வந்த "தலைவாழை" படிக்கும் போதே ‘இலையில் சாப்பிட வேண்டும்’ என்ற ஆர்வம் ஏற்பட்டது. என் அப்பா  வீட்டில் வாழை மரம் வளர்த்தார். அதில்தான் தினமும் உணவு...

மம்முட்டி வாராவாரம் கலக்குகிறார்.

0
உங்கள் குரல்   யார் வேண்டுமானாலும் இணைய இதழைத் தயாரிக்கலாம். ஜெயமோகன், ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா போன்ற எழுத்தாளர்கள் இணைய இதழை தன் பெயரிலேயே நடத்துகிறார்கள். இந்த இணைய இதழ்களைப் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அவரவர்களுடைய...