மனத்தெளிவையும் உறுதியையும் பெற…

மனத்தெளிவையும் உறுதியையும் பெற…
Published on

அருளுரை

சிருங்கேரி ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமிகள்

ர்ஜுனன் யுத்தம் செய்வதற்கு குருக்ஷேத்திரத்துக்கு வருகிறான். அவன் வில் வித்தையில் சமர்த்தன். ஆனாலும் அங்கே வரும்போது அவனுக்கு மனக் கலக்கம் உண்டாகிவிடுகிறது. தன்னுடைய பலத்திலேயே நம்பிக்கை போய் விடுகிறது. "தான் செய்வது சரிதானா" என்ற சந்தேகமும் ஏற்பட்டுவிடுகிறது. அப்போது கிருஷ்ண பகவான், "ஐயோ பைத்தியக்காரனே, நன்றாக ஆராய்ந்து செய்ய வேண்டிய தீர்மானம் எல்லாவற்றையும் நன்கு செய்துகொண்டு அல்லவா நீ போர்க்களத்திற்கு வந்திருக்க வேண்டும்? இங்கே வந்த பிறகு என்னுடைய கடமை என்ன என்று பேசுகிறாயே?" என்று கேட்டு உபதேசம் செய்கிறார். "நீ செய்வது எதையும் பற்றில்லாமல் கடமை உணர்ச்சியுடன் செய்தால் உன்னை அது பாதிக்காது" என்று சொல்லித் தருகிறார்.

வாழ்க்கையில் நமக்கும் இதுபோன்ற குழப்பம் ஏற்படுகிறது. முக்கியமான காரியங்களில் ஈடுபடும்போது நம்முடைய சந்திப்பிலேயே நமக்கு சந்தேகம் ஏற்பட்டு பயம் வந்து விடுகிறது. அப்போது நாம் செய்யும் காரியங்களைத் திறமையுடன் செய்ய முடிவதில்லை. அப்போது நம்மால் முடிந்ததை மனத்தெளியுடன் செய்ய ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறது. நம்மால் யாருக்கும் எந்தவிதமாகக் குறையும் ஏற்படுத்தாமல் நம்முடைய கடமையைப் பற்றில்லாமல் செய்ய ஒரு வழி தேவைப்படுகிறது. யார் மூலமாக என்ன நடந்தாலும் நாம் உத்வேகப்படக்கூடாது. மேலும் சந்தோஷம், வெறுப்பு, பயம், துக்கம் போன்றவற்றை நாம் கடந்து செயல்பட நினைக்கிறோம். இத்தகைய மனத்தெளிவையும் உறுதியையும் பெற விரும்புகிறோம். இதையே பகவத் கீதை நமக்குத் தருகிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com