0,00 INR

No products in the cart.

காவல்துறை கதையில் காதல் எதற்கு?காம்ரமைஸா?

‘டாணாக்காரன் இயக்குனர் தமிழ்’ நேர்காணல் :

ராகவ்குமார்

 

“காவல் துறையின் வழிமுறைகளும், அதன் சட்டங்களும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. இது மாற்றப்படவேண்டும்” என்ற கோரிக்கை பல்வேறு அமைப்புகளிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும் எழுப்பப்பட்டுவருகின்றன.

முதல் முறையாக இந்த குரல் முன்னாள் காவல் துறையை சேர்ந்தவரிடமிருந்தே தமிழ் சினிமாவில் எழுப்பபட்டுள்ளது. காவல் துறை பயிற்சி கல்லூரியில் பின்பற்றப்படும் சிஸ்டத்தை ‘டாணாக்காரன்’ என்ற திரைப்படமாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில்  வெளிவந்து பல்வேறு மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. விக்ரம் பிரபு  நடித்துள்ள இப்படத்தை தமிழ் இயக்கி உள்ளார். தமிழ் ‘ஜெய் பீம்’ படத்தில் டெரர் போலீஸ் அதிகாரியாக வந்து மிரட்டியவர்.

தமிழை சந்திக்க அவரது அலுவலகத்திற்கு சென்றால் அவரது அறை  முழுவதும் தமிழ் நாவல்களால் நிரம்பி உள்ளது. லட்சுமண பெருமாள் கதைகள், செம்மீன், புதுமைப்பித்தன், வால்காவிலிருந்து கங்கை வரை, சில சமூக நீதி புத்தகங்கள் இப்படி பல.

“புதுமைப் பித்தனின் தொகுப்பு ஒன்றை வாசித்துக்கிட்டிருக்கேன், வாங்க” என்று வரவேற்கிறார்.

என் சொந்த ஊர் ராமேஸ்வரம். என்னுடன் கூட பிறந்தவங்க என்னையும் சேர்த்து எட்டு பேர். எல்லோரும் படிச்சு நல்ல உத்தியோகத்துல் இருக்காங்க. எனக்கு சிறு வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் அதிகம். குடும்ப சூழலால் போலீஸ் வேலைக்கு வந்துட்டேன். பனிரெண்டு வருட சர்வீஸிற்குப் பின் வெற்றி மாறன் சார்கிட்ட உதவியாளராகச் சேர்ந்துடேன்” என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் தமிழ்.

காவல்துறை பற்றி சொல்ல வேண்டிய பிரச்னைகள் பல இருக்க காவலர் பயிற்சி பள்ளியில் நடக்கும் பிரச்னையை ஏன் படமாக்கினீர்கள்?

நான் போலீஸ் வேலைக்கு சேர்ந்த பின்பும், சினிமாவிற்கு வந்த பின்பும் பல்வேறு போலீஸ் நண்பர்களை காண நேர்ந்தது. அப்போதெல்லாம் நான் பயிற்சி எடுத்த  PRS (police recruit school ) எனப்படும் காவலர் பயிற்சி பள்ளியைப் பற்றி ஆர்வமுடன் விசாரிப்பேன். அப்போது அந்த நண்பர்கள் சொல்லும் தகவல்களை அடிப்படையாக வைத்து நகைச்சுவை கலந்த கதையாகத்தான் உருவாக்க எண்ணினேன். ஆனால் கதையை மெருக்கேற்ற, வடிவமும் போக்கும் சீரியல் கதையாக மாற்றி விட்டது.

பள்ளியில் பயிற்சியின் போது நீங்கள் சந்தித்த பிரச்னைகள் என்ன?

குறிப்பாக டாய்லெட் பிரச்னையை சொல்லலாம். நாங்கள் 560 பேர் வரை இருந்தோம். ஆனால் இருபது டாய்லெட் வரை தான் எங்களுக்கு அளித்தார்கள். இதனால் மாணவர்கள் சிலர் அதிகாலை இரண்டு மணிக்கு எழுந்து பல் தேய்த்து, காலை கடன்களை முடித்து  குளித்து காலில் பூட் அணிந்து தூங்கி விடுவார்கள். ஐந்து மணி ஆனவுடன் பயிற்சிக்கு ஓடுவார்கள். டாய்லெட் குறைவாக தருவதன் நோக்கம் என்பது அதிகாலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்பதுதான்.

நீங்கள் படத்தில் காட்டும் சித்தப்பாக்களை சந்தித்தது உண்டா?

சித்தப்பாக்களை என் பயிற்சியின்போது  சந்தித்தது இல்லை. ஆனால் நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். 80களின் தொடக்கத்தில் காவல் துறை பணிக்கு  தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் நீதிமன்றம், வழக்கு என்று போராடிவிட்டு  90களின் கடைசியில் நடுத்தரவயதில் போலீஸ் பயிற்சிக்கு வந்தார்கள். இவர்களில் பலர் தற்சமயம் பணியில் சேர்ந்து ஓய்வும் பெற்று விட்டார்கள். சித்தப்பாவின் வயது ஒத்த இவர்களின் பயிற்சி  செயல்பாட்டை பள்ளியில் உள்ள நண்பர்கள் நகைச்சுவையும், சோகமுமாக சொல்வார்கள். இதை முடிந்த அளவு பதிவு செய்து உள்ளேன்

இக்கதையை சொன்னவுடன் ஆக்‌ஷன் ஹீரோ விக்ரம் பிரபுவின் ரியாக்‌ஷன் எப்படி இருந்தது?

முழு மனதுடன் வரவேற்றார். அனைவருக்கும் நடிக்க வாய்ப்புள்ள படத்தில் தானும் நடிக்க பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டார். “படத்தில் என் கேரக்டர்  இறந்து போவது போன்று கூட நடித்து உள்ளேன். எனக்கு கதைதான் முக்கியம்” என்று சொன்னார். இப்படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லை. பன்ச் வசனங்கள் இல்லை. இருப்பினும் கதைதான் எல்லாம் என்பதை புரிந்துக்கொண்டு முழு ஒத்துழைப்பு தந்தார் விக்ரம் பிரபு.

ஈஸ்வரமூர்த்தி லால் கதைக்குள் வந்தது எப்படி?

கதையை எழுதும் போதே லால் சார் மனதில் வந்து விட்டார். லால் சார் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்தவர். மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர். ஒரு அண்ணனை போன்று இருந்து பல்வேறு அறிவுரைகளை ஸ்பாட்டில் வழங்கினார். லால் படத்தின் மிகப் பெரிய பலம்.

காவல்துறை கதையில் காதல் எதற்கு? காம்ரமைஸா?

காம்ரமைஸ்தான். இதில் தவறு இல்லை. படம் முழுவதும் மைதானத்தையே காட்டும் போது ரசிகனுக்கு ஒரு சிறு மாற்றம் தேவை என நானும் தயாரிப்பாளரும் நினைத்தோம். அதனால் தான் ஹீரோயின் காதல் எல்லாம்.

காவல் துறையினர் பொது மக்களிடையே காட்டும் இறுக்கமும் இடைவெளியும், இதுபோன்ற பயிற்சி பள்ளியில் தரப்படும் பயிற்சியும்  ஒரு காரணமா?

ஒருவேளை இருக்கலாம். காவல் துறையினர் ஒரே போன்று பணியை தொடர்ந்து செய்யும் சூழல் அவர்களை இயல்பாகவே அவர்களை மக்களிடையே இருந்து விலக்கி வைத்து உள்ளது.

இந்த நிலை மாறும் என நினைக்கிறீர்களா?

இந்த  சிஸ்டம் மாற்றப்பட வேண்டும். 2013ம் ஆண்டு police reforms என்ற கோரிக்கை விவாதிக்கப்பட்டது. இன்றும் விவாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் காவல் துறையில் மாற்றங்கள் ஏற்படலாம்.

‘ஜெய்பீம்’ படத்தில் நீங்கள் நடித்த கேரக்டரை வைத்து இங்கே சிலர் பிரச்னை செய்தார்கள். உங்களைப் போன்ற படைப்பாளிகள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?

இதை தமிழ் நாட்டின் துர்பாக்யமாக கருதலாம். ஹிந்தியிலும் தெலுங்கிலும் கட்சி, ஜாதி கொடியை அப்படியே பயன்படுத்துகிறார்கள். பெயரும் மாற்றாமல் சொல்கிறார்கள். அங்கே எந்த பிரச்னையும் இல்லை. தமிழ் நாட்டில் பல அமைப்புகள் பிரச்னை செய்கின்றன. சென்சார் அமைப்பு தாண்டி வேறு எதுவும் சினிமாவை கட்டுப்படுத்தும் சூழல் இருக்கக்கூடாது.

இலக்கிய வாசிப்பாளரான நீங்கள் நாவல்களை படம் ஆக்குவீர்களா?

இது சற்று சிரமமான விஷயம். நாவலை சினிமாவாக்கும் போது திரை மொழிக்கு ஏற்றார் போல மாற்ற வேண்டும். அதே சமயத்தில் நாவல் கருவும் மாறி விடக்கூடாது. இது கடினம். இந்த கலை என் ஆசிரியர் வெற்றி மாறனுக்கு கை வந்திருக்கிறது. நான் இன்னும் புரிந்துகொள்ள வேண்டும். கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு நல்ல நாவல்களை படமாக்குவேன்.

பல ஆண்டுகள் சிந்தித்து போலீஸ் கதையில் வெற்றி பெற்று
விட்டீர்கள். உங்கள் அடுத்த படம் எப்படி இருக்கும்?

என் அடுத்த படம் கேங்ஸ்டர் படமாக இருக்கும். இதற்கான ஸ்கிரிப்ட் டாணாக்காரன் படத்திற்கு முன்பே யோசித்தது.

ராகவ்குமார்
ராகவ்குமார் கல்வித் தகுதி: எம் பில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல்.கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக கல்கி குழும பத்திரிகைகளில் தம் படைப்புகளை ஏற்றி வரும் நிருபர், எழுத்தாளர். திரை விமர்சனங்கள், நேர்காணல்கள், சினி கட்டுரைகள் இவரது கோட்டை. 12 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியா, கிராபிக்ஸ் & அனிமேஷன் துறையில் ஆசிரியர் பணி.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...