0,00 INR

No products in the cart.

எப்படி மரியா இதெல்லாம் சாத்தியமாயிற்று?

முகநூல்  பக்கம்

 

ள்ளத்தில் உறுதியாக ஒன்றை நினைத்து விட்டால் அந்த உள்ளம் எப்பாடுபட்டாவது அதனை முடித்துக் கொடுத்து விடும்.
டாக்டர் மரியா விஜி. கேரளத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண்.
சக்கர நாற்காலி இல்லாமல் எங்கேயும்  போக முடியாது இந்த டாக்டருக்கு.
இந்த மரியா விஜி, தனது மருத்துவ படிப்புக்காக கேரள மாநிலத்தின் தொடுப்புழா மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்த ஆண்டு 2015.
அப்போதெல்லாம் மரியாவால் நன்றாக நடக்க முடியும், ஓட முடியும், விளையாட முடியும். ஆனால் இப்போது… எல்லாமே சக்கர நாற்காலிதான்..!
இதற்கெல்லாம் காரணம் கல்லூரி முதலாம் ஆண்டில் ஏற்பட்ட அந்த எதிர்பாராத விபத்துதான். அப்போது ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார் மரியா.

ஒரு நாள் இரண்டாம் மாடியில் நின்று கொண்டு, துவைத்த துணிகளை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து உயரத்தில் கட்டிய கொடியில் காயப் போட்டுக் கொண்டிருந்தாள். ஈரமான தரை. ‘பார்த்து … ஜாக்கிரதை’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார் மரியா. எவ்வளவோ ஜாக்கிரதையாக கால் எடுத்து வைத்தும், ஏதோ ஓர் இடத்தில் மரியாவின் கால் சற்றே சறுக்க… “அம்மா…!!!” என்ற அலறலுடன் இரண்டாவது மாடியிலிருந்து அப்படியே தரையை நோக்கி விழுந்தார்.
பலத்த அடி. வலியால் துடிதுடித்து மயங்கிப் போனார் மரியா. அவசரம் அவசரமாக ஆம்புலன்ஸ் வரவழைத்து உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள்.

கழுத்து எலும்பும், கால் எலும்பும் நொறுங்கிப் போய் இருந்தது. மிகவும் சிக்கலான நிலைமையில்தான் சிகிச்சையை ஆரம்பித்தார்கள். ஆறுமாதம் படுத்த படுக்கை. அசைய முடியாமல் முடங்கிக் கிடந்தார் மரியா. அவரை பார்க்க வந்த பலரும் ஆறுதல் சொல்வதாக நினைத்துக்கொண்டு, ‘கல்லூரிக்குப் போக முடியவில்லையே, டாக்டர் ஆக முடியவில்லையே என்று மனதை போட்டு வருத்திக் கொள்ளாதே மரியா. உனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான். டாக்டர் கனவை விட்டுவிடு.’ பலரும் இப்படி சொல்லிவிட்டுப் போக, கலங்கிய கண்களோடு இதையெல்லாம் கேட்டுக் கொண்டு மருத்துவமனை படுக்கையில் அசையாமல் படுத்து இருந்தார் மரியா.

அவர்கள் சொல்லச்சொல்ல மரியாவின் மனதில் ஏதோ ஒரு தீவிர உறுதி.
விரைவில் குணமாகி, தான் மருத்துவ கல்லூரிக்கு போவதாகவும், மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்வதாகவும் தனது ஆழ் மனதுக்குள் திரும்பத் திரும்ப நினைத்து பார்த்தார் மரியா. அதற்கான பிசியோதெரபி பயிற்சிகளையும் ஒன்று விடாமல் செய்தார். எதிர்பார்த்ததைவிட சீக்கிரமே உடல் நலம் தேறி எழுந்து அமர்ந்தார்.

“டாக்டர், நான் வீல்சேரில் அமரலாமா ?”

“ஏன் மரியா ?”

“நான் கல்லூரிக்கு போக வேண்டும்.”

அது தேர்வு நேரம். ஆனால் மரியாவால் பரீட்சை எழுத முடியாது. கைவிரல்கள் வளைந்து கொடுக்கவில்லை. விரல் மூட்டுகள் ஒழுங்காக ஒத்துழைக்கவில்லை. ஆனாலும் போராடி போராடி ஓரளவு கைவிரல்களை நீட்டி மடக்கி ஒருவழியாக தேர்வை எழுதி முடித்தார்.
‘இவளால் எப்படி தேர்வு எழுத முடியும், எப்படி வெற்றி பெற முடியும்’ என்றும் மரியா காதுபடவே உறவினர் சிலர் பேசிக் கொண்டார்கள்.
இதைக் கேட்க கேட்க மரியா மனதுக்குள் உறுதி மேலும் மேலும் கூடிக்கொண்டே போனது. தேர்வு முடிவுகள் வெளிவந்தன.

மரியா பாஸ்.

மரியா மருத்துவ படிப்பில் வெற்றி பெற்று டாக்டர் ஆகிவிட்டார்.
64 சதவீதம் மதிப்பெண்கள். தனக்கு சிகிச்சை கொடுத்த அத்தனை மருத்துவர்களுக்கும், தன் கூடவே இருந்து உடல் நலம் தேறும்வரை ஒத்தாசை செய்த அத்தனை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆனந்தக் கண்ணீர் வழிய நன்றி கூறினார். தான் படித்த தொடுப்புழா மருத்துவக் கல்லூரியிலேயே இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து ஹவுஸ் சர்ஜன் ஆக சேர்ந்திருக்கிறார் மரியா.

அடுத்து என்ன மருத்துவ மேற்படிப்பு படிக்கலாம் என சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.

‘எப்படி மரியா இதெல்லாம் சாத்தியமாயிற்று’ என்று கேட்டால் புன்னகையுடன் சொல்கிறார்.

“சின்ன வயதில் என் அக்காவுடன் நான் விளையாடியதே டாக்டர் விளையாட்டுதான். வளர்ந்து பெரியவளான பின் டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இடையில் கொஞ்சம் தடுமாறி விட்டேன். அதனால் என்ன ? இந்த வீல் சேரில் இருந்தே நான் மேலே மேலே படிப்பேன். என்னுடைய லட்சியங்களை நிச்சயமாக நான் நிறைவேற்றுவேன்” என்று சிரித்தபடி சொல்கிறார் டாக்டர் மரியா.
“என்னால் டாக்டராக முடியவே முடியாது என்று மற்றவர்கள் சொன்ன உதாசீன வார்த்தைகள்தான், உந்து சக்தியாக இருந்து என்னை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. அவர்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும்.”

மரியாவின் வீல்சேர் நகர ஆரம்பிக்கிறது. திரும்பி நம்மை பார்த்து புன்னகை செய்கிறார் மரியா. அந்தப் புன்னகை சொல்கிறது, “நிச்சயமாக மரியா மருத்துவத்துறையில் சாதனைகள் பல படைப்பார்” என்று..!
வாழ்த்துகள் மரியா..!!

லஷ்மணன் செட்டியார் முகநூல் பக்கத்திலிருந்து…

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...