0,00 INR

No products in the cart.

சுஜாதாவும் வெளிநாடும்

கடைசிப் பக்கம்

 

சுஜாதா தேசிகன்

 

‘வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு’ என்று இந்தியாவைத் துறந்து அமெரிக்கா செல்லும் இளைஞர்களைப் பற்றி சுஜாதா ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

இன்று சென்னை, பெங்களூர் மாதிரி நகரங்களில் திரியும் அத்தனை இளைஞர்களையும் உற்றுப் பார்க்கும் போது ஓர் ஆட்டு மந்தைத்தனம் தெரிகிறதுஜீன்ஸ் போன்றவை ஸ்கூட்டர் மெக்கானிக் வேலைகளுக்கு சரி. மற்றவர்களுக்குத் தேவைதானா என்பதே எனக்குச் சந்தேகம், “ என்று கட்டுரையைப் படித்த பல இளைஞர்களுக்கு அந்தக் கட்டுரை சுருக்சென்று குத்த வழக்கம் போல சுஜாதாவை காய்ச்சி எடுத்தனர்.

கட்டுரை வந்த மறுவாரம் சுஜாதா அக்கட்டுரைக்கு ஒரு ‘ஃபாலோ-அப்’ எழுதியிருந்தார். அதில் ஒரு பகுதி…

முக்கியமாக சிலர் உன் இரண்டு பிள்ளைகளுமே அமெரிக்காவில் வாசம் செய்கிறார்களேஉனக்கு என்ன தகுதியிருக்கிறது மற்றவருக்கு உபதேசம் செய்ய, புத்தி சொல்ல என்று கேட்டிருந்தார்கள். அவர்கள் கட்டுரையைச் சரியாகப் படிக்கவில்லை. நான் போகாதே என்று சொல்லவில்லை. தாராளமாகச் செல்லுங்கள். செல்லும்முன் அதற்குக் கொடுக்கும் மறைமுகமான விலைகளை அறிந்து செல்லுங்கள் என்றுதான் எழுதியிருந்தேன். வெளிநாட்டில் போய் சம்பாதிப்பதைத் தவிர்க்க அல்ல. மேலும் என் பிள்ளைகள் இருவரும் அமெரிக்கா சென்று வேலைசெய்வதால்தான் என்னால் அந்தக் கட்டுரையை உண்மையாக எழுத முடிந்தது என்பதை அவர்கள் அறியவில்லை. கட்டுரையில் சொல்லப்பட்டு இருக்கும் விளைவுகளை எல்லாம் சந்தித்தவன் என்கிற தகுதியில்தான் எழுதினேன்

என்று எழுதியிருந்தார்.

நான் கல்லூரியில் படித்த போது சுஜாதாவின் எழுத்தின் மீது மோகம். இதைப் பற்றி சில வாரங்கள் முன் எழுதியிந்தேன். “ஏண்டா நாளைக்கு காலேஜ் இருக்கில்ல” என்று அம்மாவின் பேச்சிலிருந்து தப்பிக்க மாடிக்குச் சென்றேன். மாடியில் தனி அறை நிம்மதியாக படிக்கலாம்.  ஆனால் ஒரு பிரச்னை இருந்தது.  எங்கள் வீட்டு மாடிக்கு இரவில் யாரும் அதிகம் போக மாட்டார்கள். பல வருடங்கள் முன் நாங்கள் குடிவருவதற்கு ஓர் இளம் பெண் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்டாள் என்று என் பாட்டி சொல்லியிருக்கிறாள்.

சுஜாதா எழுத்தின் பாய்ச்சல் பேயை ஓவர் டேக் செய்தது. இரவு 11.30 மணிக்குச் சின்னதாக ஒரு விளக்கைப் போட்டுக்கொண்டு படிக்க ஆரம்பித்தவுடன், அதில் ஆழ்ந்துவிடுவேன்.  அதனால் பேய் போடும் சின்ன சின்ன சத்தங்கள் என் காதில் விழுந்ததில்லை. விடியற்காலை ஐந்து மணிக்குப் புத்தகம் படித்து முடித்து,  கொஞ்சம் தூக்கம், காபி, குளியல் மீண்டும் அடுத்த புத்தகம் என்று கல்லூரிப் படிப்பையும் முடித்து வேலையில் சேர்ந்த  காலகட்டத்தில் வெளிநாடு செல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்க டாலரை இந்திய ரூபாயுடன் பெருக்கல் செய்து வரும் தொகை மனதில் பேராசையைக் கிளப்பும்.  இந்தியாவில் பல வருடங்களில் குப்பை கொட்டினால் கிடைக்கும் சம்பளத்தை ஒரே வருடத்தில் சுருட்டிக்கொண்டு வந்து நிம்மதியாக இங்கே வாழலாம் என்ற மோகம் விரகதாபத்துக்கு ஒப்பானது.

அப்பாவிடம் “வெளிநாட்டுக்குப் போகட்டுமா ?… நல்ல சம்பளம் இவ்வளவு கிடைக்கும்” என்றேன்.

“வாழ்க்கையில் உனக்கு எது முக்கியம் என்று நீயே தீர்மானித்துக்கொள்,  it all depends what you value in life, its your choice” என்றார்.

நான் தீர்மானித்தேன்.

சுஜாதாவின் கட்டுரைகள் அடங்கிய ‘கடவுள்களின் பள்ளத்தாக்கு’ என்று நான் தொகுத்த புத்தகத்தில் வெளிநாடு செல்லும் இளைஞர்களைப் பற்றிய முன்பு சொன்ன அந்தக் கட்டுரையைச் சேர்த்திருந்தேன்.  அது பிரசுரமான போது நிகழ்ந்த நிகழ்வுகளை அவரிடம் நினைவுகூர்ந்தேன்.  அப்போது சுஜாதா என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.

“தேசிகன், நீங்க ஏன் வெளிநாடு போகவில்லை ?”

“போகணும் என்று தோன்றவில்லை… ஆனால் என்னுடன் காலேஜில் படித்தவர்கள் எல்லாம் போய்விட்டார்கள்” என்றேன்.

“சரி… நீயும் போகலாமே… “

“இந்திய மண்ணுக்கு… “

சிரித்துக்கொண்டு “இது ஜல்லி” என்றார்

கொஞ்சம் தயங்கி அந்த உண்மையைச் சொன்னேன்.

“சார் நீங்க இங்கே இருக்கும் போது உங்களை விட்டுவிட்டு போக மனசு வரவில்லை…” என்றேன்.

ஒரு சின்ன புன்னகை.

என் அப்பா ஒரு முறை “நீ ஏன் அமெரிக்கா போகலை என்று எனக்கு தெரியும். சுஜாதா இருக்கிறார் என்பதால் தானே ?” என்றார்.

டக் என்று பொய் சொல்ல முடியவில்லை. “ஆமாம்” என்றேன்.

போயிருந்தால் பல லட்சம் டாலர் சம்பாதித்திருப்பேன். ஆனால் சுஜாதா உட்பட பல விஷயங்களை இழந்திருப்பேன். இந்தக் கடைசிப் பக்கம் உட்பட!

 மே 3’ – சுஜாதா பிறந்த தினம்.

1 COMMENT

  1. நிஜமாகவேவா? உங்கள் சுஜாதா பக்தியை பார்க்கும்பொழுது அடு விவேகமா ? விசித்ரமான்னு புரியவில்லை. ஆனால் மனுதுக்கு எது சந்தோஷமும் நிம்மதியும் தருகிறதோ அந்த இடம் தான் சொர்க்கம்.
    ராமன் இருக்கும் இடம் ஸீதைக்கு அயோத்தி. சுஜாதா இருந்த இடம் சுஜாவிற்கு சொர்க்கம் தானே !

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...