0,00 INR

No products in the cart.

அந்த நிகழ்ச்சியை அப்படியே நேரில் பார்த்தது போல மனநிறைவு தந்தது. 

“சுஜாதா தேசிகன்” அவர்களின் கடைசிப் பக்கத்தில் வந்த “தலைவாழை” படிக்கும் போதே ‘இலையில் சாப்பிட வேண்டும்’ என்ற ஆர்வம் ஏற்பட்டது. என் அப்பா  வீட்டில் வாழை மரம் வளர்த்தார். அதில்தான் தினமும் உணவு சாப்பிடுவார். கடைசியில் சொன்ன கண் பார்வையற்றவர் ரசத்தை சாப்பிட்ட விதம் மிகவும் ரசிக்க வைத்தது.  “இலையில் சாப்பிடுவது ஆரோக்கியம்” என்று உணர வைத்த கடைசி பக்கத்திற்கு பாராட்டுக்கள்.
– ராதிகா, மதுரை

‘நமக்கும் இளையராஜாவுக்கும் இடையிலான உறவு  அவரது இசை  மட்டும்தான்’ என்பதில்,  அவர் இசை  மீது  தராசார் வைத்துள்ள மதிப்பும் , அவரை விமர்சிப்பதில்லை என்பதில் தராசாருக்கு உள்ள வருத்தமும் வெளிப்படுகிறது.

நான்கு எல்லைகளிலும் அனுமன் சிலைகள் நிறுவப்படுவதற்கான கேள்விக்கு  தராசார் பதில்  சிறப்பு.  இருப்பினும் மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கும்  நாட்டின் பிரதமர், தான் சார்ந்த மதத்தின் சார்பாகவே நிற்பது சரியல்ல என்பது சரியான கருத்து.
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

“திரும்பிப் பார்க்கவைத்த தமிழ்நாடு” என்ற “இல்லம் தேடி கல்வித் திட்டம்” குறித்த கட்டுரை அருமை. மிகவும்  பயனுள்ள திட்டம்.  “கொரோனா கொடிய அரக்கன்” என்று திட்டியவர்கள் கூட இல்லம் தேடி கல்வித்திட்டம் வரமாக கொடுத்த கொரோனாவை நிச்சயம் பாராட்டுவார்கள்.                        நந்தினி கிருஷ்ணன், மதுரை -6

“இந்தக் காலத்தில் இப்படியும் மனிதர்களா” என்ற முகநூல் பக்கத்தில் வந்த செய்தியைப் படித்ததும் கண்ணில் நீர் துளிர்த்தது.  ரேவதி அவர்கள் அவர் கொடுக்க நினைக்கும் அன்பளிப்பை நேரில் இடம் தேடி சென்று தருவதாக வாக்களித்து இருப்பது அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது. மிகவும் அருமையான முகநூல் பக்கம் பாராட்டுக்கள்.
– முத்துராமன், மதுரை

“காலத்தை காட்டும் கண்ணாடி” என்ற கல்கி விழா பற்றிய கட்டுரை  அந்த நிகழ்ச்சியை அப்படியே நேரில் பார்த்தது போல மனநிறைவு தந்தது.  விழா சென்னையில் நடந்ததால் “நம்மால் அங்கு பங்கு பெற முடியவில்லையே” என்ற ஆதங்கத்தைப் போக்கிய அருமையான பக்கம்.  இந்த விழாவில் பங்கு பெற்றவர்களுக்கு எப்படி அது ஒரு இனிய மாலையாக இருந்ததோ அதே போல் அதை படிக்கும்போது எனக்கும் ஒரு சந்தோஷமான மாலையினை என் கழுத்தில் அணிந்து கொண்டது போல இருந்தது.
– பிரகதாநவநீதன், மதுரை

 தமிழ்நாடு அரசியல் மொழியுடன் இணைந்தது என்பதை தலையங்கத்தில் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.
– மதுரை குழந்தைவேலு 

‘நிருபரின் டைரி’ தொடர் வாராவாரம் சுவையாக இருக்கிறது. கல்கி போன்ற பத்திரிகைக்கு நிருபராகியிருப்பது வரம். எத்தனை விதமான அனுபவங்கள் !
– மனோன்மணி, திருநகர், சென்னை

ந்தி தொடர்புமொழி என்பது இந்தி பேசும் வட இந்தியாவுக்குப் பொருத்தமாக இருக்கலாம். நாட்டில் தலை விரித்தாடும் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இதுபோன்ற விஷயங்களை முன்னிலைப்படுத்துவது அந்தப் பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை திருப்பும் முயற்சியே. அமைச்சரின் பேச்சு தென் இந்திய மாநிலங்களில் மொழிப்பிரச்னையை உருவாக்க காரணமாகிவிடும். தென் இந்தியாவில் மொழிகளுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்புகளை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று தலையங்கத்தில் கேட்டிருப்பது வேண்டுகோள் என்பதை விட நமது நியாயமா உரிமையை முன்னெடுத்து வைப்பதாகும்.
– ஆ. மாடக்கண்ணு பாப்பான்குளம்

கிலன் கண்ணன் எழுதிய “மரங்கொத்திப் பறவைகள்” சிறுகதை யதார்த்தனமான உண்மை. நாட்டில் நடக்கும் விஷயங்களை சிறுகதையாக வடிக்கும் திறன் நிறைய பேரால் முடியாது. ஆனால் அகிலன் கண்ணன் அவர்களால் முடிகிறது.
– கவிச்சுடர் எஸ்.வி.ரங்கராஜன்

விட்டில் பூச்சிகளாகவும் இருக்கிறார்கள். மரங்கொத்திகளாகவும் இருக்கிறார்கள். ரெண்டும்தான். நாம கவனமா இருந்து கானகம் (காடு) போய்ச் சேரணும். அதுவரை நம்ம சேமிப்பை நம்ம பக்கமே பாதுகாப்பா வச்சிக்கணும். நம்பிக் கொடுத்துட்டோம்னா நட்டாற்றுல நிற்க வேண்டிதான். உரிமையோட வந்து இருக்கத் தெரிஞ்சவங்களுக்கு உருவிக் கொடுக்க மனசில்லையே? உருவி உருவிக் கொடுத்து வீண் செலவு செய்வாங்க…அவசியத்தை உணரத் தெரியாது…இதுதான் இன்றைய உலகம்.

ளிய நடை…தெளிவான சொல்லாடல். நறுக் பதில்கள்…நல்ல கதை…பாராட்டுக்கள்.
– உஷா தீபன், திருச்சி

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...