0,00 INR

No products in the cart.

ஆசைகளுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுபவன் ரஜோ குணம் உடையவன்

உத்தவ கீதை – 18

டி.வி. ராதாகிருஷ்ணன்

 

சாங்கிய தத்துவம்

உத்தவரே! உங்களுக்கு சாங்கிய தத்துவத்தை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். இதனை அறிந்தால் உலகிலுள்ள பலவாக பார்க்க மாட்டீர்கள். யாவையும் ஒன்றென உணர்வீர்கள்.

இந்த நான்கு யுகங்களும் உண்டாவதற்கு முன் இந்தப் பிரபஞ்சம் ஒன்றாவவே காணப்பட்டது.

அதுபோலவே… இந்த யுக ஆரம்பத்திலும், சத்திய யுகத்திலும், மக்கள் மிகவும் புத்திசாலிகளாகவும், பகுத்தறிவு உடையவர்களாகவும் காணப்பட்டார்கள். பின்பு, சிருஷ்டி மாயையால் “பிரகிருதி” (காரண காரியங்களுக்குக் கட்டுப்பட்டது) என்றும்,”புருஷன்” (தனிப்பட்ட ஆன்மா) என்றும்  இரண்டாகப் பிளவுபட்டது.

பிரகிருதியினின்று முக்குணங்கள் (ஸத்துவம், ரஜோ, தமோ) தோன்றின. அவற்றினின்று “மகத்” என்று சொல்லக் கூடிய அறிவினால் “மாயை” என்று நாம் கூறும் “நான்” எனும் அகங்காரம் தோன்றியது.

அந்த அகங்காரம் மூன்று வகைப்பட்டது.”ஸாத்வீக”, “ரஜசிக்”, “தமசா”

“தமசா”விலிருந்து ஐந்து பூதங்களும்(மண், நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்) ,

“ரஜசிக்” அகங்காரத்திலிருந்து ஐந்து ஞானேந்திரியங்களும்,ஐந்து கர்மேந்திரியங்களும்,

“சாத்வீக” அகங்காரத்திலிருந்து 11 தேவதைகளும் உண்டாயினர்.          (நான்கு திக்பாலர்கள், வாயு, சூரியன், வருணன், அஸ்வினி குமாரர்கள், அக்னி, இந்திரன், விஷ்ணு, மித்திரன், பிரம்மா, சந்திரன்) மேலும் “மனது”.

இவையாவும் சேர்ந்து, ஒரு உருண்டை வடிவத்தில் எனது இருப்பிடமானது. அந்த உருண்டை நீரில் மிதந்திருந்தது. என்னுடைய நாபிக் கமலத்திலிருந்து ஒரு தாமரை உண்டாகி, அதில் பிரம்மா… நான்கு முகங்களுடன் உண்டானார்.

அந்த பிரம்மா, எனது ஆசையால் மேலேயுள்ள புவர்லோகங்களையும், கீழேயுள்ள அதல, விதல, சுதல, ததல, மகாதல, ரசதல, பாதாள உலகங்களையும் மேலேயுள்ள புவர்லோகம், சுவர்லோகம், மகரலோகம், ஞானலோகம், தபலோகம், சத்திய லோகங்களையும் அவற்றிற்குரிய அதிதேவதைகளையும் உண்டு பண்ணினார்.

சுவர்லோகம், கடவுளின் இருப்பிடமாகிய சுவர்க்கமாயிற்று. புவர்லோகம், ஆவிகளுக்கும் பூலோகம் மனிதர்கள், மிருகங்கள், ஊர்வன போன்றவற்றுக்கும் இருப்பிடமாயின.

அதற்கு மேலுள்ள உலகங்கள் சித்தர்களுக்கும், முனிவர்களுக்கும் இருப்பிடமாயின.

கீழ்க்குணமுடைய அசுரப் பிறவிகள் கீழேயுள்ள உலகங்களுக்கு இருப்பிடமாயினர். யோகத்தினாலும், பக்தியினாலும், கர்மத்தாலும், ஞானத்தாலும் அவரவர் தகுதிக்கு ஏற்றபடி உலகங்களையும், மறுபடி உயிர்களையும் அடைவார்கள்.

இந்த உலகிலுள்ள யாவையும் இந்தப் பிரகிருதி, புருஷ தத்துவத்துக்கு உட்பட்டவை. நான் காலமாகயிருக்கிறேன். அவரவர் கர்மங்களுக்கு ஏற்றபடி மேலேயும், கீழேயும் குணச்சேர்க்கையால் செல்கிறார்கள்.

“பிரகிருதி” என்று சொல்லப்படும் பௌதிக உலகமும்,”புருஷன்” என்று சொல்லப்படும் உயிரும், எல்லாவற்றுக்கும் முக்கியமான “காலமும்” இந்த மூன்றுக்கும் காரணமான பிரம்மமும் ‘நானே”.

இந்தப் பிரபஞ்சமே காலத்துக்குக் கட்டுப்பட்டதாகும். எல்லாமே தோன்றிப் பின்பு மறையும் தன்மையுடையவை.

மிருகங்களின் உடம்பு உணவால் உண்டாகின்றது. உணவு விதையால் உண்டாகிறது. விதைகள் பூமியாலும், பூமி வாசனையாலும் உண்டாகின்றன. இப்படி ஒன்றுக்கொன்று காரணமாகின்றன. கடவுளுக்கும் மனதே காரணமாகிறது.

மனதுக்கு முக்குணங்களும், பிரகிருதிக்கு முக்குணங்களும் காலமும் காரணமாகின்றன.

காலத்துக்கு முக்கிய காரணம் எப்பொழுதும் நிலைத்து நிற்கும். ‘நானே'(பிரம்மமே)யாவேன்.

இதுவே சாங்கிய தத்துவம்.

மனிதர்களில் சிறந்த உத்தவரே! குணங்களின் சேர்க்கையால் மனிதன் எப்படி செயல்படுகிறான் என்பதைத் தெரிந்துகொள்…

இந்திரியங்கள் மற்றும் மனத்தை கட்டுப்படுத்துவது பொறாமை, பகுத்தறியும்  தன்மை, கடமையில் கருத்து,நேர்மை, இரக்கம், “போதும்” என்ற நிறைவு மனப்பான்மை, பெருந்தன்மை, நம்பிக்கை, தர்மம் செய்தல், ஆன்ம திருப்தி ஆகியவை சத்துவ குணங்களாகும்.

தீவிர செயல்பாடுகள், கர்வம், பேராசை, பொருளாசை, புலனின்பத்தில் நாட்டம், எதையும் வெற்றிகொள்ள வேண்டும் என்ற எண்ணம், புகழுக்கு ஆசை, அதிகாரத்தைப் பயன்படுத்துதல், ஆதிக்க மனப்பான்மை ஆகியவை ரஜோ குணத்தின் செயல்பாடுகள்.

கோபம், பேராசை, பொய் சொல்லுதல், பிச்சை எடுத்தல், சோம்பல், காரணமின்றி சண்டை போடுதல், சுய பச்சாதாபம், காமம், தோல்வி மனப்பான்மை, பயம் ஆகியவை தமோ குணத்தின் செயல்பாடாகும்.

“நான்”, “எது” என்பவை , முக்குணங்களாலும், இந்திரியம் மற்றும் மனத்தின் சேர்க்கையாலும் ஏற்படுகின்றன.

ஒருவன் தன் கடமைகளை சரிவர செய்து… செல்வம் ஈட்டி, தனது தேவைகளையும் , ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்வது என்பது முக்குணங்களின் சேர்க்கையால் உண்டாவது. இவைகளால், நம்பிக்கையும், செல்வமும், பொருட்பற்றும் ஏற்படுகிறது.

ஒருவன் குடும்ப வாழ்க்கை நடத்தித் தன் கடமைகளைச் சரிவரச் செய்து செல்வம் சேர்ப்பானாகில் அவன் முக்குணங்களின் சேர்க்கையால் செயல்படுகிறான். மனத்தைக் கட்டுப்படுத்தியவன் சத்துவ குண மேம்பாடுடையவன் என்றும், ஆசைகளுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுபவன் ரஜோ குணம் உடையவன் என்றும், கோபத்தில் செயல்படுபவன் தமசிக குணம் உடையவன் என்றும் உணர்.

ஆணோ, பெண்ணோ எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் என்னை பக்தியால் வழிபடுகிறார்கள் என்றால் அவர்கள், சத்துவ குணங்களால் நிரம்பியவர்கள் என்பதற்கு அறிகுறி.

விரும்பிய காரியங்கள் நிறைவேறுவதற்காக என்னை வழிபடுபவர்கள் ரஜோ குணம் படைத்தவர்கள் என்றும், பிறருக்குத் துன்பம் விளைவிக்க வேண்டும் என்று என்னை வேண்டுபவர்கள் தமசிக குணங்கள் படைத்தவர் என்றும் உணர். இந்த மூன்று குணங்களும்  என்னை கட்டுப்படுத்தாது. உலகில் படைக்கப்பட்ட  ஜீவன்களையே கட்டுப்படுத்தும். மக்கள் மனத்தில் தோன்றி, அவர்களை அதில் கட்டுப்படுத்தி, அவர்களுக்கு பொருட்பற்று ஏற்படுத்தும்.

சத்துவகுணம் மேலிட்டபோது, மனதில் இன்பமும், நேர்மையும்,ஞானமும் காணப்படும்.

ரஜோ குணத்தால் பற்று, செயல்களில் ஈடுபடுதல், சோம்பலிலிருந்து விடுபடுதல், செல்வம், புகழ், கர்வம், அதனால் துன்பம் ஆகியவை ஏற்படும்.

தமோ குணத்தால், காமம், அறியாமை, சோம்பல், மனத்தில் துயரம், தூக்கம், பேராசை போன்றவை ஏற்படும்.

இந்திரியங்கள் அடங்கி, மனமும் கட்டுப்பட்டு, உடலும் செயலற்று, பற்றற்று நிற்கும்போது. “நான்” (இறைவன்) உணரப்படுவேன்.

ஒருவன் புத்தியின் செயல்பாட்டால் கர்மத்தில் ஈடுபட்டு, இந்திரியங்கள் அமைதியின்றி இருந்து, மனதும் பதற்றத்துடன் செயல்பட்டால், ரஜோ குணம் மேலோங்கி இருப்பதாகப் பொருள். மனத்திலும், உடலிலும் சோர்வு காணப்பட்டு, தன்னை உணராமல் வாழ்க்கையில் சலிப்பு காணப்பட்டால் அப்பொழுது தமோ குணம் மேலிட்டுள்ளது என்று பொருள்.

சத்துவ குணம் மேலிடும்போது கடவுளும், ரஜோ குணம் மேலிடும் போது அசுரர்களும், தமோ குணம் மேலிடும் போது அரக்கர்களும் ஆதிக்கம் பெறுகின்றனர்.

சத்துவ குணத்தால் விழிப்புணர்வும், ரஜோ குணத்தால் கனவுகளும், தமோ குணத்தால் தூக்கமும் ஏற்படுகிறது.

சத்துவ குணத்தால்  மனிதன் மேலே உயர்ந்து பிரம்ம உலகம் வரை அடைவான்.

தமோ குணத்தால் மனிதன் கீழான நிலைக்குத் தள்ளப்படுவான்

ரஜோ குணத்தால் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் வாழ்வான்

அறியாமையால் ஏற்படும் இன்பம் “தமோசா”

இறைவனால் ஏற்படும் இன்பம் முக்குணங்களையும் கடந்தது. சாத்வீக, ரஜோ, தமோ குணத்தின் காரணமும் தன்மையும் விளக்கப்பட்டன.

இவையாவையும் புருஷன், பிரகிருதியின் செயல்பாட்டுக்குக் கட்டுப்பட்டவை.பார்ப்பவையும்,கேட்பவையும், புதியதாக எண்ணப்படும் எண்ணங்களும் ,குணங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன.

இறப்புக்குப் பின் ஏற்படும் மறுபிறவியும் குணங்களின் செயலால் கட்டுப்பட்டது.

குணங்களின் செயலில் இருந்து விடுபட்டவன் என்னை அடைந்து, என்னோடு கலப்பான் (சாயுச்சய பதவி)

ஆகையால் இந்த புனித உடலை அடைந்து ஞானம் பெற்று முக்குணங்களின் பிடியிலிருந்து விடுபடுவாய்.

என்னைச் சரணடை

ஞானமுள்ளவன், எல்லாப் பற்றுகளையும் நீக்கி, விழிப்புடன் இந்திரியங்களையும் அடக்கி, என்னைப் பூஜிப்பான்.

சத்துவகுணத்தால், ரஜோ, தமோ குணத்தையும் கட்டுப்படுத்துவான். பின்பு அறிவால், ஞானத்தால் சாத்விக குணத்தையும் வென்று, ஆசைகளை அகற்றி, முக்குணங்களிலிருந்து விடுபட்டு, உடலை நீத்து… என்னை அடைவான்.

(தொடரும்)

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

ஜோக்ஸ்

0
“தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?” “ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?” “நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!” - சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா “டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம்...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...