0,00 INR

No products in the cart.

சக்தியும் சிவமும் சேர்ந்த நிலையே உயிர்களின் தோற்றம்

அருளுரை

 

ந்து மதத்தில் பெண்களுக்கு இரண்டாம் தரமான இடம் அளிக்கப்படுவதாகச் சொல்வது தவறு. ரிக்வேதம் அவர்களை எல்லாவற்றுக்கும் மேலான சக்தியாகக் குறிப்பிடுகிறது. (பத்தாவது மண்டலம்) மகாபாரதத்தில் பெண்களை வைத்து வழிபடுவது பற்றிய குறிப்பு உத்தியோகப் பருவத்தில் வருகிறது. மகாபாரதத்திலேயே அனுசான பருவத்தில், பெண்களை மகிழ்ச்சிகரமாகவும் மனநிம்மதியுடனும் வைத்துக்கொள்ளாத நாடு முன்னேற முடியாது என்ற குறிப்பு வருகிறது.

அர்ஜுனனுடைய மனைவி சித்தராங்கதா புகழ்பெற்ற வீராங்கனையாக விளங்கி இருக்கிறாள். உபநிடதங்கள் பலவற்றிலும் பெண்கள் வேதாந்த சர்ச்சையில் முக்கியமான இடம் பெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிருகதா ரண்யக உபநிடதத்தில் கார்க்கி என்ற பெண் ஞானி யாக்ஞவல்கியரிடம் சாமர்த்தியமான கேள்விகளைக் கேட்கும் பகுதி வருகிறது.

நமது வாழ்க்கைக்கு மிக அவசியமான பூமி, நீர் தரும் நதி, கலைகளை அருளும் தேவி, சக்தியைக் கொடுக்கும் தேவி, செல்வத்தை வழங்கும் தேவி ஆகிய வடிவங்கள் அனைத்தும் பெண்களே. ஆக இந்து மதம் மற்ற மதங் களைக் காட்டிலும் பெண்களுக்கு உயர்ந்த இடத்தையே அளித்திருக்கிறது. பிற்காலத்தில் படையெடுப்பின்போது, பெண்களுக்குப் பலமுறையிலும் தீங்கு இழைக்கப்பட்டது. அவற்றிலிருந்து பெண்களைக் காப்பாற்றுவதற்காகவே அவர்கள் குடும்பத்தின் எல்லைக்குள் பத்திரமாக வைத்துப் பாதுகாக்கப்பட்டனர்.

ஆலயங்களில் சிவ வழிபாட்டுக்குரிய சின்னமாக அமைந்திருப்பது சிவலிங் கம். பரந்த கருத்துக்கள் பல இச்சின்னத்தில் புதைந்து கிடக்கின்றன. ஆவுடையாள் என்னும் கீழ்ப்பகுதி, சக்தியின் சின்னம். அதில் நாட்டப் பெற்றிருக்கும் லிங்கம் சிவத்தின் சின்னம். சிவசக்தியின் ஐக்கியத்தால் சராசரங்கள் அனைத்தும் தோன்றியுள்ளன என்பதை அது குறிக்கிறது. உருவமற்ற பொருள் உருவம் எடுக்கவும் வல்லது என்பதை அது உணர்த்துகிறது.

உலகில் உள்ள உயிர்கள் காமத்துக்கு வசப்பட்டு, குடும்ப வாழ்க்கையில் இறங்குகின்றன. சிவமும் – சக்தியும் அவர்களுக்குப் புகட்டும் பாடம் அதற்கு மாறானது. ஆசையை வெல்லுபவர்களே வாழ்க்கையில் வெற்றி காண் கிறார்கள். அண்ணலின் அருளுக்குப் பாத்திரமாகும் பொருட்டு, உமாதேவி நெடுங்காலம் தவம் புரிந்தாள். சிவபெருமானோ தனது நிறைநிலை
கலையாது பூரணப் பொருளாகவே நிலைத்திருந்தார். இந்த நிலைக்குக் ‘கோரத்தபசு’ என்றும், ‘உக்கிரத்தபசு’ என்றும் பெயர்.

உமாதேவியார் அவரை ஆராதித்துக் கொண்டிருந்தபோது, அந்த ‘உக்கிரத் தபசை’க் கலைக்கக் காமத்துக்கு உரிய தேவனான மன்மதன் வந்தான். காம பாணத்தைத் தொடுத்துத் தவத்தைக் கலைத்து இச்சையை உண்டாக்க முயன்றான். ஆனால், சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து அவனை எரித்துச் சாம்பலாக்கிவிட்டார். இந்த நிகழ்ச்சி ‘காமதனம்’ என்று இன்றும் தமிழ்நாட்டில் பல கிராமத்துக் கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. இப்படி கொண்டாடப்படுவதன் தத்துவம் என்ன?

ஆசையை வேர் அறுத்த பின்பே சிவமும் சக்தியும் ஒன்றுபட்டன.
ஆசைகளை ஒழித்தபின்பே ஒருவனுக்கு வாழ்க்கையில் சக்தியின் அருளும் வெற்றியும் கிடைக்கும். அதையே இந்தப் பண்டிகை விளக்குகிறது.
சக்தியும் – சிவமும் சேர்ந்த நிலையே உலகில் அனைத்து உயிர்களின் தோற்றம். இதையே சிவலிங்கம் விளக்குகிறது. காமத்துக்கு அடிமைப்படாத மனை வாழ்வில், மாட்சிமைகள் அனைத்தும் நிறைந்துள்ளன என்பதே சிவபெருமானின் வடிவம் தரும் உண்மை.

– சுவாமி சித்பவானந்தர்

1 COMMENT

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...