0,00 INR

No products in the cart.

விறுவிறுப்பான திரைக்கதை எழுதி முழுநீள படத்தை எடுக்கலாம்.

நூல் அறிமுகம்

 

அருள் மெர்வின்

ராஜராஜனின் கொடை

ங்க  ஊர்ப்பக்கத்தில் கோயில் திருவிழாக்களை ‘கொடை’ என்பார்கள்.

பெரும்பாலும் கோயில் நிலங்கள், கோயில்களுக்கான வரி விலக்குகள், கோயில் பராமரிப்புகள் யாராவது கொடையாக கொடுத்ததாக இருக்கும். பெரும்பாலும் மன்னர்கள். அப்படி கொடை கொடுத்ததைக் கொண்டாடும் பழக்கம் பல காலமாக இருந்திருக்கிறது. கடைசியில் கொடை மட்டும் கொண்டாடப்படும், கொடுத்தவர் யாரென்று மக்கள் மறந்துவிடுவார்கள்.
‘விகாரமான உருவம்’ என்பது தமிழில் உபயோகிக்கப்படும் சொற்றொடர். ‘அசிங்கமாக இருக்கிறான்’ என்ற அர்த்தத்தில் பௌத்தம், சமணம் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் பல இன்று தமிழில் இழிச் சொற்களாக வலம் வருகின்றன. ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று ‘விகாரம்’.

விகாரை, விகாரம் என்பவை பௌத்த பிக்குகள் தங்கியிருந்த இடம்.
ராஜராஜ சோழர் ஒரு ‘கொடை’ கொடுத்திருக்கிறார். நாகப்பட்டினத்தில் ஒரு பௌத்த ‘விகாரை’ கட்ட அவர் என்ன கொடுத்தார் என்பதை ஒரு முப்பது கிலோ எடையுள்ள செப்பேட்டில் சாசனமாக அப்போதே எழுதியிருக்கிறார்கள். எப்படி அந்த காலங்களில் செம்மறி ஆடு எடை உள்ள செப்பேடுகளைக் கையில் தூக்கி வாசித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அந்த சாசனத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒரு வரி, “ஆதிசேஷன் இந்த உலகத்தைத் தாங்குகிற வரையிலும் இந்த விகாரைக்குக் கொடுக்கப்பட்ட இந்தத் தானம் நிலைபெறுவதாக.”
இப்போது அந்த செப்பேடும் இல்லை. அவர் கொடுத்த விகாரையும் இல்லை. நிற்க, செப்பேடு நெதர்லாந்தில் உள்ளது. நாகப்பட்டினத்திலிருந்த விகாரை இடிக்கப்பட்டுவிட்டது.

‘சிவபக்தர்’ என்று சொல்லப்படுபவர், தஞ்சை பெரிய கோயில் கட்டியவர் நாகப்பட்டினத்தில் பௌத்த விகாரை கட்ட ஏன் கொடை கொடுத்தார்? செப்பேடு எப்படி நெதர்லாந்து சென்றது? விகாரை யாரால் இடிக்கப்பட்டது?
இந்த செப்பேடுகளைத் தேடி நெதர்லாந்து செல்வதிலிருந்து ஆரம்பிக்கிறது, ‘ராஜராஜனின் கொடை’ என்ற புத்தகம். ஃப்ளாஷ்பேக் சுற்றுகிறது.

தெற்காசியத் தீவுகளை (மலேசியா, கம்போடியா, ஜாவா, சுமத்தரா மற்றும் பல எட்டாங்கிளாஸில் ஹிஸ்டரி டீச்சர் சொல்லிக் கொடுத்த தீவுகளை) ஆண்ட பௌத்த மன்னனுடன் நட்புறவைப் பேண, தமிழ் பௌத்தத்தைக் காப்பாற்ற இந்தக் கொடையை அளிக்கிறார் ராஜராஐ சோழர். பிரம்மாண்டமான விகாரை எழுப்பப்படுகிறது. அதற்கான வணிக, மத காரணங்கள் பின்புலத்தில். செப்பேடு எழுதப்படுகிறது. ராஜேந்திர சோழர் ஆட்சிக்கு வருகிறார். அரசியல் மாறுகிறது. சீனா மூக்கை நுழைக்கிறது. அரசியல்-வியாபார சதிகள் அரங்கேறுகின்றன. ராஜராஜ சோழர் எந்த தெற்காசியத் தீவுகளின் அரசுக்காக விகாரை கட்டினாரோ அந்தத் தெற்காசியத் தீவுகளைத் தாக்கிக் கைப்பற்றி சோழர்களின் கடல் மேலாண்மையை நிரூபிக்கிறார் ராஜேந்திர சோழர். கடாரம் கொள்கிறார். அடுத்து குலோத்துங்கச் சோழர் ஆட்சிக்கு வருகிறார். தெற்காசியா இன்னும் சோழர்கள் கைவசம்தான். பௌத்த விகாரைக்கான கொடை தொடர இரண்டாவது செப்பேடு எழுதுகிறார் குலோத்துங்கச் சோழர். பிளாஷ்பேக் பாஸ்ட் ஃபார்வேர்ட் ஆகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு. கடல் கடந்து ஆட்சி செய்த சோழர்களும் இல்லை, கடல் கடந்து பரவிய பௌத்தமும் இல்லை தமிழ்நாட்டில். செப்பேடுகளை டச்சுக்காரர்கள் நெதர்லாந்து கொண்டுபோய்விட்டார்கள். பௌத்தவிகாரை பரிதாபமாக நின்று கொண்டிருக்கிறது நாகப்பட்டினத்தில். பிரஞ்சு கத்தோலிக்க மிஷனரிகள் அதை இடித்து பக்கத்தில் கல்லூரி கட்டுகிறார்கள். பிளாஷ்பேக் முடிகிறது. நமக்கு கண்ணீர் வருகிறது நம் வரலாற்றை நினைத்து.

‘பொன்னியின் செல்வன்’ போன்ற ‘எது உண்மை எது ஃபிக்‌ஷன்’ என்று தெரியாத விஷயங்களைக் கஷ்டப்பட்டு படமாக எடுத்து வருபவன் போவனிடத்திலெல்லாம் பேச்சுவாங்குவதைவிட
முனைவர் க. சுபாஷிணியின் ‘ராஜராஜனின் கொடை’ புத்தகத்தை வைத்து விறுவிறுப்பான திரைக்கதை எழுதி முழுநீள படத்தை எடுக்கலாம். அவ்வளவு சுவாரசியம் இருக்கிறது. அத்தனைக்கும் ஆதாரம் உள்ளது. பாதி புத்தகம் பின்னிணைப்புதான். ராஜேந்திரச் சோழரும், குலோத்துங்கச் சோழரும் தொட்ட செப்பேட்டையே கையில் தொட்டுப் பார்த்திருக்கிறார்கள்.

விலை விபரங்கள் அறிய :
https://www.commonfolks.in/books/d/rajarajanin-kodai

 

 

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மொழி‘பெயர்ப்பு’

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் ‘ஆலியா பட்’ நடித்த ’டார்லிங்ஸ்’ என்ற திரைப்படத்தை சில நாட்கள் முன் ’ஓடிடி’யில் பார்த்தேன். ஹிந்தி தெரியாத காரணத்தால் என் விருப்பத்தேர்வாக ஆங்கிலத்தில் அதைப் பார்த்துக்கொண்டு இருக்க, ஒரு...

தினந்தோறும் தேசியக் கொடி

0
  - எஸ். சந்திரமௌலி   இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு அமுதத் திருவிழாவின் ஓர் அங்கமாக இந்தியக் குடிமக்கள் தங்கள் வீடுகளில் நமது மூவர்ணக் கொடியேற்றி சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாடும்படிக் கேட்டுக் கொண்டது மத்திய...

ஒரு குடும்பமல்ல ஒரு சமூகமே கல்விப் பெற்றதற்கு சமம்

0
முகநூல் பக்கம்   மஹாலட்சுமியின் முகநூல் பக்கத்திலிருந்து (மஹாலட்சுமி ஜவ்வாது மலைப் பகுதி பழங்குடி கிராமப்  பள்ளி ஆசிரியர்)   "ஒரு குழந்தை Hostel கிடைச்சா மட்டும்தான் படிக்கமுடியும் என்ற நிலை இருந்தா உடனே அந்தக் குழந்தையை Hostelல Admission...

மாணவர்களும் ஆசிரியர்களும் ஒரு சேரப் படித்துணர வேண்டிய நூல்

0
நூல் அறிமுகம்   1988 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்", உலகளவில் 9 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் அச்சிடப்பட்டு, அறிவியல் எழுத்திலும் உலகளவில் பாராட்டிலும் பிரபலத்திலும் ஒரு முக்கிய புத்தகமாகும். ஆல்பர்ட்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

0
வாசகர் ஜோக்ஸ்                                             ...