0,00 INR

No products in the cart.

ஆபாச நகைச்சுவைகள், அருவருப்பான காதல் டூயட் காட்சிகள் இல்லாதிருப்பது பெறும் ஆறுதல்

விமர்சனம்

– லதானந்த்

 

காவல் நிலையத்தில் ரைட்டர் பதவி பணிபுரியும் சராசரி மனிதரின் வாழ்க்கைச் சூழலைச் சொல்வதோடு, செய்யாத தவறுக்காகக் காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்ட அப்பாவி இளைஞன் ஒருவன் அனுபவிக்கும் கொடுமைகளையும் சொல்வதுதான் படத்தின் ஒன்லைன். உபரியாகக் காவலர்களுக்கு சங்கம் அமைப்பதன் தேவையையும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

காவல்துறை அராஜகங்கள், நல்ல வழக்கறிஞரின் பங்களிப்பு போன்ற அம்சங்களான இக்கால ட்ரண்டுக்கு ஏற்ப வெளியாகியிருக்கும் இன்னொரு படம்தான் ரைட்டர்.

நடுத்தர வயதைத் தாண்டித் தொப்பையுடனும் மீசையற்ற முகமுமாய் இரண்டு சம்சாரங்களின் கணவராய் வலம்வரும் காவல்துறைப் பணியாளரின் பாத்திரத்துக்குக் கச்சிதமாய்ப் பொருந்திப்போயிருக்கிறார் சமுத்திரக்கனி. ரைட்டரின் சொந்த வாழ்க்கை திரைப்படத்துக்கு நேரடியாகத் தொடர்பில்லாதது ஒரு குறைதான் என்றாலும் அந்தக் காட்சிகளிலும்கூட மிக இயல்பாகத் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார் சமுத்திரக் கனி. ஹேட்ஸ் ஆஃப் சார்!

ஆரம்பத்தில் பெயர் போடும்போதே காண்பிக்கப்படும் காவலர் சீருடை அணிவகுப்பின் காட்சிகளோடு மிடுக்குடன் ஆரம்பிக்கிறது படம். பெரும்பாலான காட்சிகள் காவல் நிலையங்களை யதார்த்தமாகச் சித்தரிக்கின்றன. நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை சுமுகமாக முடிக்க சமுத்திரக்கனி இயல்பாகக் கையாளும் வழிமுறைகள் ஆச்சர்யத்தையும் லேசான அதிர்ச்சியையும் ஒருங்கே தருகின்றன. கத்தி ஒன்றைக் கழுவிக்கொண்டிருக்கும் சமுத்திரக்கனி  ஒரு காட்சியில் சொல்வார்: “கொலையப் பண்ணிட்டுக் கத்திய ஆத்துல வீசிடுறானுங்க. புதுக் கத்தி வாங்க வேண்டியிருக்கு!”

சமுத்திரக்கனியின் பணி மாறுதலுக்குச் சிறியதாக விழா ஒன்றை ஏற்பாடு செய்திருப்பார்கள். பின்னணியில் தெரியும் பேனரில், ‘பணி நிறைவு விழா’ என எழுதியிருப்பார்கள். பணி ஓய்வைத்தான்  ‘பணி நிறைவு’ என்பார்கள். ஆனால் அங்கு நடப்பது பணி மாறுதல் பாராட்டு விழா!

காவல் துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும் இளைஞனைப் பாதுகாக்கும்  ‘பாரா ட்யூட்டியில்’ இருக்கும் ரைட்டர் சமுத்திரக்கனி, இரவில் மது அருந்திவிட்டு கதவையும் திறந்துபோட்டுவிட்டு மட்டையாகிக் கிடப்பாரா என்ன? அப்படி ஒரு காட்சி வைத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த இளைஞன் ஏற்கெனவே ரைட்டரைத் தாக்கிவிட்டுத் தப்பி ஓட முயன்றவன்!

படத்தின் முற்பகுதி மெதுவாக நகர்வது போன்ற ஒரு ஃபீல். குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் தேவகுமாரன் என்ற இளைஞன் கோபித்துக்கொண்டு நகரத்துக்குத் திரும்பிப் போக முயற்சிக்கும்போது அவரது அண்ணன் சேவியர் தடுக்கும் காட்சியைச் சொல்லலாம். சீரியல் மாதிரி சொன்னதையே திருப்பித் திருப்பி வேறு வேறு வார்த்தைகளில் சொல்லி நம் பொறுமையைச் சோதித்துவிடுகிறார்கள். பிற்பகுதித் திரைக் கதையும் காட்சிகளும் மிக விறுவிறுப்பாக ஈடுசெய்துவிடுகின்றன.

ஆபாச நகைச்சுவைகள், அந்தரத்தில் பறந்து தாக்கும் சண்டைகள், அருவருப்பான காதல் டூயட் காட்சிகள் போன்றன இல்லாதிருப்பது பெறும் ஆறுதல். தயாரிப்பாளர் ரஞ்சித்துக்கும் இயக்குநர் ஃப்ராங்ளின் ஜேக்கப்புக்கும் சல்யூட்!

ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருக்கிறார்கள். வடக்கத்திய காவல்துறை உயர் அதிகாரியாகவும், இன்ஸ்பெக்டர் பெருமாளாகவும், குதிரையேற்ற ரைடராக விரும்பும் சரண்யாவாகவும், ஸ்டேஷனில் எடுபிடி வேலைசெய்யும் முன்னாள் திருடனாகவும், வழக்கறிஞராகவும் நடித்திருப்பவர்கள் மிக இயல்பாக மிகை நடிப்பின்றி அமர்க்களமாக நடித்திருக்கின்றனர்.

“படிச்சா மேலத் தெருவுக்கு வர முடியாது. ஆனா மேல வரலாம்” போன்ற கூர் வசனங்கள் ஆங்காங்கே!

மொத்தத்தில்: ரைட்டர் = Right, Sir!

1 COMMENT

  1. “ரைட்டர்ஸ்” படத்தின் மெய் நிலவரத்தை சிறப்புடன் தெ ளிவாக எடுத்துரைத்த லதானந்தைப் பாராட்டலாம். படத்தில் பாடல் ,
    ஸ்டண்ட்,காட்சி யின் வீரியம்,ஔிப் பதிவின் நுட்பம் பாே ன்ற பலதரப்பட்ட அம்சங்களைத் தெ ரிவித்திருந்தால் கூடுதல் தகவலாக ப் படித்து இன்புற்றிருந்திருப் பாே ம்.
    து.சே ரன்
    ஆலங்குளம்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

“கடவுளே ஒரு குறையை வச்சாலும், தாய் நினைச்சா அதைச் சரி செஞ்சிடுவா”

0
 O2 சினிமா விமர்சனம்   - லதானந்த்   ஆக்ஸிஜன் வாயுவின் மாலிக்யுலர் ஃபார்முலாவான O2 என்பதைத் தலைப்பாக வைத்திருக்கிறார்கள். (O2 அல்ல…. O2). கதையில் முக்கியப் பங்கு வகிப்பதும் ஆக்ஸிஜன்தான். மண் சரிவில் முற்றாகப் புதையுண்ட பேருந்து...

ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் சூர்யா நடிப்பு சூப்பர்

0
விக்ரம் சினிமா விமர்சனம் - லதானந்த்   படத்தில் அடிதடி சண்டைகள் இருக்கலாம்; ஆனால் படம் முழுக்க குத்து, வெட்டு, துப்பாக்கிச் சூடு, கொப்பளிக்கும் ரத்தம் எனவே இருந்தால் எப்படி? விகரம் அப்படித்தான் இருக்கிறது. ஒரு புறம் காவல்துறை...

காட்சி மனதைவிட்டு அகலாது பல மணி நேரங்களுக்கு நீடிக்கிறது.

0
  சேத்துமான் - சினிமா விமர்சனம் - இராமானுஜம்   எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’ என்ற சிறுகதையே ‘சேத்துமான்’ என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. இலக்கியத்தில் இருந்து சினிமா திரைக்கதை என்பது அவ்வப்போது தமிழ் சினிமாவில் அபூர்வமாக...

“எல்லாரும் சமம்னா யார் ராஜா?”

0
நெஞ்சுக்கு நீதி விமர்சனம் - லதானந்த் தாத்தாவின் சுயசரிதைத் தலைப்பு என்பதைத் தவிரப் பேரனின் திரைப்படத்துக்கும் தலைப்புக்கும் அதிக சம்பந்தம் ஏதும் இல்லை. “வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுத் தூக்கில் தொங்கவிடப்படும் இரு சிறுமியரின் இறப்புக்குக் காரணம் ஆணவக் கொலையே”...

“முயலும் ஜெயிக்கும்; ஆமையும் ஜெயிக்கும்; முயலாமைதான் ஜெயிக்காது”

0
டான் சினிமா விமர்சனம் - லதானந்த்   முற்பாதியில் பிள்ளைகளை எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும் எனப் பெற்றோர்களுக்கும், பிற்பாதியில் பெற்றோர்களை எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும் எனப் பிள்ளைகளுக்கும் பாடம் எடுப்பதுதான் கதை. ‘டான்’ என்ற பெயரைப் பார்த்ததும் ஏதோ கேங்க்ஸ்டர் படம்...