0,00 INR

No products in the cart.

கிருஷ்ணரிடம் சில கேள்விகள்

டி.வி ராதாகிருஷ்ணன்

 

36 ஆண்டுகள்  வங்கிப் பணி..30 நாடகங்களுக்கு மேல் எழுதி,தயாரித்து,இயக்கி நடித்துள்ள டி.வி ராதாகிருஷ்ணன் தன் நாடகங்களுக்காக பல முன்னணி அமைப்புகளிலிருந்து விருது பெற்றிருப்பவர். 20க்கும் மேற்பட்ட ஆன்மீக,சமூக,இலக்கிய நூல்கள் எழுதியிருக்கிறார். அவருடைய  “வால்மீகி ராமாயணம்” அமேசான் கிண்டிலில் மின்னூலாக வெளிவந்துள்ளது. கல்கி வாசகர்களுக்காக   கீதையை எளிய தமிழில் எவருக்கும் புரியும் வண்ணம்  இந்த  இதழ் முதல் எழுதுகிறார்.

கவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதல்..அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி இறுதிவரை அவருடனேயே இருந்தவர் உத்தவர்.

அவர், தனக்கென தன் வாழ்நாளில் கண்ணனிடம் எந்த உதவியையோ, வரங்களையோ கேட்டதில்லை.

இந்நிலையில் துவாபரயுகத்தில் தனது அவதாரப்பணி முடிந்த நிலையில் கண்ணன், உத்தவரிடம், “உத்தவரே! இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல
வரங்களும், நன்மைகளும் பெற்றுள்ளனர். ஆனால்… நீங்கள் இதுவரை என்னை எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள். உங்களுக்கு ஏதாவது நன்மைகள் செய்து விட்டு எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்” என்றார்.

அதற்கு உத்தவர், “கண்ணா… உன் லீலைகளில் எனக்குப் புரியாத  பல சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றைத் தீர்த்து வைப்பாயாக” என்றார்.

பின் உத்தவர் கேட்ட பல கேள்விகளுக்கான விளக்கத்தைக் கண்ணன் சொல்ல ஆரம்பித்தார்.

குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொன்னது “பகவத் கீதை”

உத்தவருக்குக் கண்ணன் சொன்னது “உத்தவ கீதை” எனப்படுகிறது.

இதில் பிறப்பு, இறப்பு, இறைவனை வழிபட வேண்டிய முறை போன்றவற்றிற்கு எல்லாம் விளக்கம் உள்ளது,

அவற்றை இனி பார்ப்போம்…

உத்தவகீதை – 1

இறைவனின் கிருஷ்ணாவதாரம் முடிந்து பூலோக வாழ்க்கை முடியும் வேளையில் வைகுண்டம் திரும்ப திட்டமிட்டு, செயல் பட ஆரம்பித்த நேரத்தில் தன் நண்பரும்… உதவியாளருமான உத்தவருக்கு அருளியதே உத்தவ கீதை.

ஸ்ரீமத் பாகவதம் , மகாபாரதம் போல இதுவும் ஸ்ரீ வேத வியாசரால் எழுதப்பட்டது.

ஸ்ரீமத் பாகவதத்தில் 11 வது பாகத்தில் காணப்படுகிறது இது.

இது ஒரு பக்தி மார்க்கத்தைப் போதிக்கும் நூல் . பக்தியின்
வழியில்… முக்தியை அடைய வழி காட்டுவது.

ஒருநாள் துவாரகையில்..பூலோக வாழ்க்கையிலிருந்து தன் இருப்பிடமான
வைகுண்டம் சென்றுவிட கிருஷ்ணன் திட்டமிட்டு விட்டதை அறிந்த உத்தமர்
..அவரிடம் வந்து “என்னால் உங்களைப் பிரிந்து வாழ முடியாது..எனக்கு ஒரு
வழி காட்டுங்கள்” என்றார்.

அப்போது கண்ணன் அருளிய உரையே உத்தவ கீதை எனப்படுகிறது.

“இன்னும் ஏழு நாட்களில் இறக்கக் கடவாய்” என்ற சாபம் பெற்ற பரிட்சித்
மன்னனுக்கு சுகர் மகரிஷியால் “ஸ்ரீமத் பாகவதம்” விளக்கிக் கூறப்பட்டது.

இது “நிவிருத்தி மார்க்கம்” எனப்படும்.

பாண்டவர்கள், கௌரவர்கள் யுத்தத்தில் அர்ஜுனனுக்குத் தேர்
ஓட்டியாகவும்… பாண்டவர்களுக்கு மதியூகியாகவும்… காப்பாளனாகவும்  இருந்த கிருஷ்ணன்… மகாபாரத யுத்தத்தின் போது… போரைக் கண்டு கலக்கமுற்ற அர்ஜுனனுக்கு… மனதில் தைரியம் ஏற்பட..”பகவத் கீதை”யை  அருளி..”பலனில் பற்று வைக்காமல் கர்மம் செய்” என்றார்.

பின் யுத்தத்தில் பாண்டவர்கள் வென்று கௌரவர்கள் அழிந்து தருமர் அரசணையேறினார்.

பின் கிருஷ்ணன் தன் இருப்பிடமான துவாரகைக்கு திரும்பினார்.அங்கு சுமார் 26 ஆண்டுகள் ஆண்டார்.அவருக்கும் வயது 125 ஆனது.

உலகில் உற்பத்தியானவை அனைத்தும் காலத்துக்கு கட்டுப்பட்டவை.நாம்
எல்லோரும் இன்று உடலும்,உயிருமாய் காணப்பட்டாலும்..ஒருநாள்..இந்த உடல் பஞ்ச பூதங்களை மறுபடியும் திரும்பி அடைய வேண்டும்.உயிரும் இந்த பிரபஞ்சத்தில் கலக்க வேண்டும்.இது இயற்கை நியதி.இது கிருஷ்ணன்
அறியமாட்டாரா என்ன?

கிருஷ்ணர், பாண்டவர்களின் தோழனாகச் செயல்பட்டுப் போரில் உதவி
புரிந்தாலும்,அவர் உலகில் அவதரித்ததன் நோக்கம்… கௌரவர்களுக்கும்,
பாண்டவர்களுக்கும் போர் மூளச் செய்து, அப்போரில்… இரு தரப்பிலும் மக்கள் சேதம் ஏற்படுத்தி அநீதியை அழித்து, தர்மத்தைக் காத்து..பூமியின்
பாரத்தைக் குறைக்க வேண்டும் என்பதே ஆகும். குருக்ஷேத்ர போர் என்பது ஒரு கருவியாகும்.

இதையே அவதார ரகசியம் என்பார்கள்.

அதே வேளையில் கிருஷ்ணரின் யது குலம் மிக வலிமை உடையதாகக்
காணப்பட்டது. யாராலும் வெல்ல முடியாத நிலையில் இருந்தது.

ஆகையால்… கிருஷ்ணர் தனது குலம்… தனித்து நின்று ஒரு பேரரசாக இருப்பதை விரும்பவில்லை.

தன் குலமாகிய யாதவ குலத்தார் ஒருவருக்கு ஒருவர் போரிட்டு அழிய வேண்டும் என்பதே அவரின் திட்டமாய் இருந்தது.

துரியோதனனும்,தர்ம புத்திரரும் ஆடிய சொக்கட்டான் சூதாட்டம் மகாபாரத
போருக்கு வித்திட்டது போல, முனிவரின் சாபம் ஒன்று, யாதவ குலம்
அழியவும், கண்ணன் இந்த உலகை விட்டு உடலை நீத்து வைகுண்டம் செல்லவும் காரணமானது. இதுவும்  கண்ணன் தீட்டிய திட்டம்.

ஒருநாள், யாதவ குல இளைஞர்கள், துவாரகைக்கு அருகில் உள்ள “பிண்டரகா” எனும் இடத்தில் உணவருந்தி… களித்து… விளையாடச் சென்றனர்.

அப்போது…ஜாம்பவதியின் புதல்வனான சம்பா என்பவனுக்கு , பெண்
வேடமிட்டு கர்ப்பவதிபோல அலங்கரித்து அங்கே வந்த முனிவரிடம் கேலி செய்ய வேண்டும் எனும் எண்ணத்தில் இந்தப் பெண்ணுக்கு பிறக்கப்போகும் குழந்தை “பெண்ணா” அல்லது “ஆணா” என வினவினர்.

இதற்கு அந்த முனிவர், இவர்கள் தன்னை சோதிக்கிறார்கள் என்று கோபம் கொண்டு, “இரும்பு உலக்கை பிறக்கும். அதனால் உங்கள் குலமே அழியும்” என சாபமிட்டார்.

அவர் கூறியபடி, அந்த இளைஞனும் ஒரு இரும்பு உலக்கையைப் பெற்றெடுத்தான்.

யாதவ இளைஞர்கள், துவாரகை நகர் திரும்பி, வசுதேவரிடமும் மற்றும் அங்குள்ள பெரியவர்களிடமும் இந்த நிகழ்ச்சியைப் பற்றி தெரிவித்தார்கள்.

2 COMMENTS

  1. படிக்க படிக்க அருமை யாக மனதைக்
    கவரும் வண்ணம் சிறப்பா க இருந்தது.
    பாராட்டுகள்.
    து.சே ரன்
    ஆலங்குளம்

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

அறிவும் இறைவனும்

3
  அறிவு பொய்த் தோற்றங்களை ஆய்ந்து, அனுமானித்து ஏற்கிறது. ஞானமோ திரைக்குப் பின் நோக்கி, காட்சியைப் பெறுகிறது. எண்ணம் என்பது உண்மையை நோக்கி எய்யப்படும் ஓர் அம்பு. தன் இலக்கின் புள்ளியை மட்டுமே அதனால்...

ஒரு  தேசியின் டைரி குறிப்பு

சுஜாதா தேசிகன்                          டைரி எழுதும் பழக்கம் எனக்கு (இதுவரை) இல்லை. நேற்று என் மனைவி எதையோ தேடும்போது “நீங்கள்...

மீண்டும் ராகுலுக்கு அமேதி மேல் ஒரு கண்!

0
பொலிடிகல் பிஸா   - எஸ். சந்திரமௌலி பிரஷாந்த் கிஷோரை வளைக்க போட்டி மம்தா பானர்ஜி, மு,க.ஸ்டாலின் இருவரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வியூகம் அமைத்துக் கொடுத்த பிரஷாந்த் கிஷோரை 23ஆம் வருட சட்ட மன்றத் தேர்தலுக்கு வளைத்துப்...

காவல்துறை நிஜமாகவே நம் நண்பர்கள்தான்.

2
முகநூல் பக்கம்   கிராமத்தில் என் நிலங்களை ஆக்கிரமித்து ஒரு மூன்றாம் தர அரசியல்வாதி அட்டகாசம் செய்தபோது, நான் வாட்ஸ் அப்பில் டிஜிபி திரு.திருபாதி அவர்களுக்கு புகார் மனு அனுப்பி வைத்தேன். உடனே புகார் மனுவின் பேரில்...

ஆபாச நகைச்சுவைகள், அருவருப்பான காதல் டூயட் காட்சிகள் இல்லாதிருப்பது பெறும் ஆறுதல்

1
விமர்சனம் - லதானந்த்   காவல் நிலையத்தில் ரைட்டர் பதவி பணிபுரியும் சராசரி மனிதரின் வாழ்க்கைச் சூழலைச் சொல்வதோடு, செய்யாத தவறுக்காகக் காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்ட அப்பாவி இளைஞன் ஒருவன் அனுபவிக்கும் கொடுமைகளையும் சொல்வதுதான் படத்தின் ஒன்லைன். உபரியாகக்...