அடேய்யப்பா.. இத்தனை புதிய பகுதிகளா?

அடேய்யப்பா.. இத்தனை புதிய பகுதிகளா?
Published on

டேய்யப்பா  இத்தனை பகுதிகளா?  புத்தாண்டு சிறப்பிதழின் புதிய பகுதிகளைப் பற்றிய அறிவிப்புகள் ஆவலைத்தூண்டுகின்றன. ஒரு வாரந்தானே காத்திருக்கிறோம்.
– சந்திர மெளலி குடும்பத்தினர்,   திண்டுக்கல்

புத்தகங்களை எங்கு வாங்கினால் எப்படி கிடைக்கும் என்று அழகாக விளக்கம் சொன்ன தராசுக்கு பாராட்டுகள். உண்மைதான். நாம் தேடினாலும் கிடைக்காத சில புத்தகங்களை நானும் நடைபாதையில் வாங்கியிருக்கிறேன். அந்த அனுபவம் எனக்கும் உண்டு. அதனால் நடைபாதையில் பளபளப்பான அட்டை இல்லாமல் நல்ல புத்தகங்களும் கிடைக்கும் என்று சொல்லி உற்சாகம் கொடுத்த தராசுக்கு பாராட்டுக்கள்.
– உஷாமுத்துராமன், மதுரை

"உஷாதீபன்"அவர்கள் எழுதிய "ஆறுதல்" சிறுகதை படித்ததும் உடலெல்லாம் சிலிர்த்தது . எவ்வளவு ஒரு உன்னதமான மனிதன். உடல் உறவு மட்டும் இல்வாழ்க்கை இல்லை என்பதை மிக அழகாகவும் தெளிவாகவும் சொன்ன சிறுகதைக்கு பாராட்டுக்கள். நமக்கு ஒரு குழந்தையாவது கொடுத்து இருக்கிறானே. குழந்தை இல்லாதவர்களை விட இதுதான் நமக்கு ஆறுதல் என்று நல்ல ஆறுதல் சொல்ல இதுபோன்ற கணவன் கிடைக்க அந்த மனைவி நிர்மலா கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  அருமையான சிறுகதை பாராட்டுக்கள்.
– பிரகதாநவநீதன், மதுரை

 "பெண்ணின் திருமண வயது 21 என்ன அவசியம்? இந்த சட்டம் கொண்டு வந்ததன் பின்னணி என்ன?"  என்ற ஒரு அலசல் மிகவும் அருமையாக இருந்தது. பல புரியாத கேள்விகளுக்கு பதில் சொல்வது போல தெள்ளத் தெளிவாக சொன்ன விளக்கம் "கல்கி" இதழுக்கு பாராட்டுக்கள்  மிக அருமையான விளக்கம் "ஒழுங்காக அமல்படுத்தி பெண்களுக்கு பாதுகாப்பு தருவது தான் இன்றைய அவசியத் தேவை என்று அடித்துச் சொன்னது மிகவும் அருமை. பாராட்டுக்கள்.
– நந்தினி கிருஷ்ணன், சென்னை

டைபாதை கடையில் வாங்கும் புத்தகங்கள், புத்தக கண்காட்சியில் வாங்கும் புத்தகங்கள், இவை இரண்டுக்கும் இடையில் உள்ள உணர்வுபூர்வமான வேற்றுமையை அருமையாக தராசார் உணர்த்தி விட்டார்.
– பி. வெங்கட்ராமன், கும்பகோணம்

'இந்த வாரம் இவர்' பகுதியில் ஓவியர் ஸ்ரீதர் வரைந்த 'மிருதங்க சக்ரவர்த்தி' உமையாள்புரம் சிவராமன் அவர்களின் திருவுருவ ஓவியம், சிறந்த காவியமாய் நெஞ்சில் மின்னியது.
– என். ராமசந்திரன், நாமக்கல்

ம்மிடமிருக்கும் குழந்தை மனது எப்படி மரணித்துவிட்டது என்பதைச் சொல்லும் அழகான் கவிதை " ஏன் அழுகிறது அந்த குழந்தை."
– மரகதமணி,  ராஜபாளையம்

முகநூல் பக்கத்தில், 'நாம கொஞ்சம் மாறியிருக்கலாம்' பகுதி, நம்மைப் பற்றிய பழைய நினைவுகளைத் திரும்பிப் பார்க்கத் தோன்றியது.
– எஸ். ராஜம், திருச்சி

டைசிப் பக்கத்தில் 'கார்ட்டூன்கள் பலவிதம்' புன்னகைக்க வைத்தது. அந்தக்கால கார்ட்டூனிஸ்ட்களை என்றும் மறக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.
– பிரசன்னா, ஸ்ரீரங்கம்

தார் அட்டையுடன், வாக்காளர் அட்டை இணைக்கப்படுவதன் மூலம், இரண்டிலும் பெயர்கள் வேறு வேறாக இருந்ததால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் 55 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ள நிலையில்,  அரசு மக்களின் கருத்துகளைக் கேட்பதோடு, எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் தந்து ஒருமித்த கருத்தோடு  இரண்டையும் இணைப்பதே மிகப்பெரிய நம் ஜனநாயக நாட்டிற்கு அழகு. ஜனநாயகம் மேலும் வலுப்பெறும்.  கல்கி தலையங்கம் ஜனநாயகத்தின் அங்கம்.

பெண்ணின் திருமண வயது 18ல் இருந்து 21ஆக உயர்த்தப்படுவதற்கு மருத்துவரிடம், அரசியல் சிந்தனையாளரிடம் கருத்துகள் கேட்டு அலசப்பட்ட கட்டுரை. படிப்போர் மனதில் தெளிவை  ஏற்படுத்தி இருக்கும். டாக்டர்  காயத்ரி,  18 வயதில் பெண்களுக்கு திருமணம் என்பதால் உடல் ரீதியாக அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், கல்வி கற்பது நிற்றல் பற்றி கூறியுள்ளது  மிகக் சரியே. மாதர் சங்க செயலாளர் பாலபாரதி, "பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்களை வலுப்படுத்த வேண்டும்" என்பதை முன்வைத்துள்ளது மறுக்க முடியாதது.  அனைத்து பெண்களின் வாழ்வும் மேம்பட ,  கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் பெரிய அளவில் உருவாக்கப்பட்டு, அவர்கள்  பொருளாதார சுதந்திரமடையும் சூழலை அரசு உறுதியான  நடவடிக்கைகள்  மூலம் மேற்கொள்ள வேண்டும் அவசியம் தற்போது  எழுந்துள்ளது.
– ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com