0,00 INR

No products in the cart.

காலண்டர் வாங்கலையோ காலண்டர்

-தனுஜாஜெயராமன்

 

க்டோபர் மாதம் முடியும் போதே ஆரம்பிச்சிருவாங்க  நம்ம மக்கள் காலண்டர் வேட்டைக்கு…

தலையை சொறிந்தபடி “சார்”  காலண்டர் வந்துடுச்சிங்களா? ஹி… ஹி… ஹி…

இன்னும் வரல சார்…பிரிண்ட் குடுத்துருக்கோம்… வந்தா தரோம்…

அந்த புள்ளையார்பட்டி விநாயகர் கேலண்டர் வந்தா எடுத்து வையுங்க. உங்க கடை காலண்டர் ரொம்ப விசேஷம் சார். வருஷா வருஷம் உங்கள் காலண்டர்தான் எங்க வீட்ல ரொம்ப புடிக்கும்….(எல்லா கடைலயும் சேம் டயலாக்கை தானே சொல்லுவோம்)

இவரெல்லாம் டெய்லி தேதி கிழிச்சி என்ன கிழிக்க  போறாரோ தெரியலயே என கடை ஓனர் மைண்ட்  வாய்ஸில் நினைத்துக்கொண்டே … இதுக்காகவே சிவகாசியிலயிருந்து அச்சடிச்சி வாங்குறோமே.. இருக்காதா பின்ன என பெருமையுடன் சிரிப்பார்.

எல்லார்ட்டயும் இந்த காலண்டர் வாங்கி சேர்த்து என்ன பண்ண போரோம்ங்குறது  அந்த ஈசனுக்கே வெளிச்சம். ஆனாலும் அதை வாங்குறதில் ஒரு பேரின்பம் பலருக்கும்.

பொதுவாக  இந்த தி.நகர் பகுதியில் காலண்டருக்கும் பஞ்சமிருக்காது… கடைகளுக்கும் பஞ்சமிருக்காது… கடைகடையாக ஏறி இறங்கி காலண்டரை பெற்று விடுவதில் ஒரு போதை இருக்கத்தான் செய்கிறது மனிதர்களுக்கு..

காலண்டர் வேட்டையில் இந்த அம்மணிகளும் கொஞ்சமும் சளைச்சவங்க இல்லே..

ஏண்டியம்மா… இந்த 3D பிள்ளையார் காலண்டர் எங்க வாங்கினேள்..

போத்தீஸ்ல மாமி…

நான் போறச்சே அந்த கடை(கடங்)காரன் வேற காலண்டர்ல குடுத்து விட்டானே..என ஆதங்கத்துடன் கேட்க…

இது இரண்டாவது ரவுண்ட் போட்டதாம் மாமி.

என்னவோ போடியம்மா…நான் போறச்சே வெச்சுண்டே தராம அழிச்சாட்டியம் பண்றதுகள். ஒரு எட்டு போனியனா எனக்கு ஒன்று சித்த வாங்கிண்டு வரேளாடீயம்மா….

சரிங்கோ மாமி…

ஏய்… கீதா வர்யாடி  வேல்முருகன்ல நல்ல டிசைன் போட்ட காலண்டர் தராங்களாமாம்… சீக்கிரம் வாங்கிட்டு வரலாமா? காலியாகிற போவுது??

சும்மா போனா தரமாட்டாங்களே மாலா…

ரெண்டு ஜாக்கட் பிட்டு வாங்கிட்டு ரெண்டு காலண்டர் ஆட்டைய போட்றலாம் வாம்மா…

ஜாக்கெட்டை வாங்கி பில்லை கொடுத்து  ஏம்பா அந்த.முருகர் படம் போட்ட காலண்டர் தர்றீயா ? “இரண்டு காலண்டரா தாப்பா ”

அக்கா ” ஆயிரம் ரூபாய் மேல பர்ச்சேஸ் பண்ணா தான்க்கா காலண்டர்”
(உங்கள மாதிரி எவ்வளவு பேரே நாங்க பாத்திருப்போம் எங்ககிட்டயேவா… இதுவும் அந்த கடைகாரர் மைண்ட் வாய்ஸ்)

“ஙே”

சரி , நீ வாம்மா  ” k R T ” ல சூப்பர் டிசைன்ல காலண்டர் போட்ருகாங்களாம். உறவுக்கார பையன் அங்க வேலை செய்யுறான். அவன்ட்ட சொல்லி நான் வாங்கித் தர்றேன்.

“அண்ணா , காலண்டர்  இருக்கா தறீங்களா?

ஏம்மா , அதெல்லாம் அப்பவே குடுத்து முடிஞ்சிடுச்சிமா…மே மாசம் வந்துடுச்சி… அடுத்த வருஷ காலண்டரே போடபோறோம் …இன்னுமாமா காலண்டர் கேப்பீங்க? என சலித்துக்கொள்கிறார் கடைக்காரர்.

“ஙே”

கடையில் காலண்டர் வாங்கவே ஏதாவது வாங்க போகும் பலரை பார்த்ததுண்டு. அடித்து பிடித்து எட்டாவது மாடியில் ஒரு துண்டு கர்சிப்பை வாங்கி அலுங்கி நலுங்கி பில்லை போட்டு கொண்டு… கீழே திருப்பதி பெருமாளை பார்க்கும் கூட்டம் போல சாரைசாரையாக லைனில் நிற்கும் காலண்டர் ப்ரியர்களோடு ஜோதியில் ஐக்கியமாகி ஒரு காலண்டரை பெற்று கொள்வதில் ஒரு அல்ப சந்தோஷம் நமக்கு. அதனை அடித்து பிடித்து வாங்கி கொண்டு வெளியே வரும் போது ’மன்னன்’ பட ரஜினி கவுண்டரை போல ஒத்தை கண்ணாடியோடு வெளியே வருவது என்பதெல்லாம் வேறு விஷயம்.

இந்த மாதிரி காலண்டர் பைத்தியமாக நாமும் இருந்திருப்போம்… இப்படி அலைந்து திரிந்துக்கொண்டு வரும் பல காலண்டர்களை நாம் பயன்படுத்துவதே இல்லை என்பதே யதார்த்தம். ஏதாவது ஒன்றை மட்டுமே பயன்படுத்துவோம். இவ்வாறு சேர்த்து வைக்கப்படும் காலண்டர்களில் குப்பையும் தூசுகளும் , பாசி பூச்சிகளும் , செல் பூச்சிகளும் அரித்து வருட கடைசியில் குப்பையில் எறிந்து விடுவோம் என்பதே நிஜம்.

காலண்டர் கூட பரவாயில்லை பிடித்தை மாட்டி பயன்படுத்துவோம்.

ஏம்பா இந்த வருஷம் டைரியே வரலையே? என்னை மறந்துட்டயா? நம்ம பழக்கம் அவ்வளவு தானே?

என்னவோ டைரி தந்ததும் எழுதி கிழித்து விடுவது போல் கேட்டு வைப்போம்.

அப்படி சண்டையிட்டு வாங்கும் டைரியை நாம் தொட்டு கூட பார்ப்பதில்லை. நம்மில் பலருக்கு டைரி எழுதும் பழக்கம் என்பதே கிடையாது. பின் எதற்கு டைரிக்கும் அலைகிறோம் என்று நமக்கும் தெரியாது.  இதற்காக நமக்கு தெரிந்தவர்களிடம் ’டைரி தரவில்லை’ என்று சண்டை கூட போடுவோம்…

பலர் அந்த டைரிகளில் பெயரை மட்டும் எழுதி வைப்பதோடு சரி… சிலர் வரவு செலவு கணக்கை எழுதி வைப்பது ஓரளவுக்கு பரவாயில்லை எனலாம்.

சிலர் ஶ்ரீ ராமஜெயம் எழுதி கொள்வர். அதற்கு ஒரு ஐம்பது பக்க நோட்டு போதுமே… டைரி தேவையில்லையே என நாம் யோசிப்பதில்லை.

ஆனாலும் இந்த காலண்டர் மேனியாக்களும், டைரி மேனியாக்களும் குறைவதேயில்லை நமக்கு. எங்கேயாவது யாராவது குடுப்பதாக இருந்தால் வாங்கி அதை சுமந்து வருகிறோம் இலவசமாக தருகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக..

தனது வாடிக்கையாளர்களுக்காக ஒவ்வொரு வருடமும் டயரி மற்றும் காலண்டருக்காக பல நிறுவனங்கள் செலவிடும் தொகை ஏராளம். அதை விளம்பர செலவாக நினைத்தே நிறுவனங்களும், சிறுகடைகளும் வருடாவருடம் செலவழிக்கின்றனர். இதை நம்பியே சிவகாசியில் பல குடும்பங்கள் பிழைத்து வருகின்றன என்பது கள யதார்த்தம்.

ஏ புள்ள… செந்தில் வேலன் ஸ்டோர்ஸ்ல புது மாடல் காலண்டர் தராங்களாமாம் புள்ள…

தோ வந்துட்டேன் மாமா… வாங்க போகலாம்……!!!!

1 COMMENT

  1. விறுவிறு நடையில் யதார்தத்தை படம் பிடித்து காட்டியுள்ளார். படிக்க படிக்க சுவாரஸ்யமாக உள்ளது.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

அப்பா, அம்மாவைத் தேடியபோது கிடைத்த அக்கா

1
- மோகன்   கோவையில் 1970களில் ப்ளூ மௌண்டேன் என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்கு விஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்...

ஆழ்ந்த அஞ்சலி என்று எளிதில் விலகிவிட முடியாது …

3
அஞ்சலி  குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அண்மையில் காலமானார்.  அவரைக் குறித்து அவரது நண்பரும் எழுத்தாளாருமான பாரதிபாலன்...   பாரதி பாலன்  அது 1987 குமுதம் ஆசிரியர்...

இந்த  நாற்காலி மட்டும் ஏன் இவ்வளவு உயரம்?

0
  வினோத்   டென்மார்க் நாட்டில் கோபன்ஹேகன் நகரில் பார்க்குகளில், பெரிய  தெருக்களில் இப்படி உயரமான பெஞ்சுகளை  அமைத்திருக்கிறது  ஒரு டி.வி சானல் நிறுவனம். முதலில் ஏதோ டிவி  ஷூட்டிங் என்று பலர் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அருகில் சென்று...

‘ இசைக்கருவிகள் எழுப்பும் இனிய ஓசையே என் சுவாசம்’

1
நேர் காணல் ''எதைச் செய்தாலும் அதை ரசித்து, நேர்மையாகச் செய்தால் மக்கள் தங்கள் ஆதரவைத் தரத் தயாராக உள்ளனர்''   ஸ்வர்ண ரம்யா   ‘திருவிளையாடல்’  திரைப்படத்தில் “பாட்டும் நானே-பாவமும் நானே” என்ற பாடலில்  சிவாஜி பாடும்...

வட்டத்துக்குள் சதுரம்

- செல்லம் சேகர்   இப்படியும் சேமிக்கலாம்...! செலவை சுருக்காமல் வருமானத்தை பெருக்குவதன் மூலம் சேமிக்கலாம். நம் தந்தை காலத்தில் எதை அனாவசியம் என்று நினைத்தோமோ அதெல்லாம் இன்று அத்தியாவசியம் என்று நினைக்க தோன்றுகிறது ... அது நம்மை...