0,00 INR

No products in the cart.

அமெரிக்காவில் தமிழ்ப்  புத்தகக் கண்காட்சி!

– சோம. வள்ளியப்பன்

ற்பொழுது நம் நாட்டைப் போலவே, அமெரிக்காவிலும் கோவிட் பெருந்தொற்று குறைந்து, இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அமெரிக்காவின் நியூ ஜெர்சி தமிழ் சங்கம், அக்டோபர் 17, ஞாயிறு அன்று ஒரு தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தது.

இந்நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வாக, ஓர்  அழகிய திருவள்ளுவர் சிலையை  சங்கத்தின் நிறுவனர் மற்றும்  இயக்குனரான  டாக்டர் பழனிசாமி சுந்தரம் அவர்கள்  திறந்து வைத்தார்.

இச்சிலை, உலகத் தமிழ் அமைப்பின் V.G. சந்தோஷம் அவர்களிடம்  வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்  பேரவை பரிசாகப் பெற்றதாகும்.

“தமிழ் என்றால் குறள்; குறள் என்றால் தமிழ்” அல்லவா? எனவே, தொடர்ந்த நிகழ்ச்சிகள் பலவும் திருக்குறளையே மையமாகக் கொண்டிருந்தன!

திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரத்தையே  நம் தமிழ்க் குழந்தைச் செல்வங்கள்  இசையுடன் பாடி பக்தி மணம் சேர்த்தனர்.

மூத்த அறிஞர் முருகானந்தம் “அன்றாட வாழ்வில் திருக்குறள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

‘ப்ளைன்ஸ்போரோ’ தமிழ் கிளப்பின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில  திருக்குறள்களை இரண்டு இரண்டாக வாசித்தது வித்தியாசகமாகவும் அடுத்தது என்ன என ஆவலைத் தூண்டுவதாகவும் அமைந்தது.

இவ்விழாவில் பங்கேற்றவர்கள் பெரிதும் பாராட்டியது அங்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்த புத்தகக் கண்காட்சியைத்தான்!

இது நியூ ஜெர்சியில் முதன்முறையாக நடைபெற்ற ஒரு பிரத்தியேகத்  தமிழ்ப் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆயிற்றே!

இக் கண்காட்சி, ஒரு துளிக் கவிதை, அட்லாண்டா தமிழ் நூலகம், வல்லின சிறகுகள், டிஸ்கவரி பப்ளிக்கேஷன்ஸ்  உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின்
முனைவர் வாசு ரெங்கநாதன் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

முனைவர் வாசு தனது உரையில், இத்தகைய  புத்தகக்  கண்காட்சிகள்,
ஒரு மொழியின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை என்றார்.
அத்துடன், நிகழ்வை ஏற்பாடு செய்வதில் சங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டினார்.

சங்கத்தின் தலைவர் பாலமுரளி கோதண்டராமன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் வரவேற்றனர்.

ஜெயகாந்தன்,  கவிஞர் வைரமுத்து, பிரபஞ்சன், ஈரோடு தமிழன்பன், தமிழ்ச் செம்மல் சோம வீரப்பன் போன்ற பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் உட்பட சுமார் 450 புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருத்தன.

கல்கியின் சிறுகதைகள், பிரபஞ்சனின் சிறுகதைகள், சோம வீரப்பனின்
“குறள் இனிது ” போன்ற  நூல்கள் உடனே விற்றுத் தீர்ந்தன!

‘பஞ்சதந்திரம்’  போன்ற குழந்தைகளுக்கான புத்தகங்களும் பலரைக் கவர்ந்தன.

இசை, நடனம், தீபாவளி ஷாப்பிங் மற்றும்  உணவு ஸ்டால்களுடன் கூடிய நிகழ்ச்சி பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்தது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 250க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் நேரில்  கலந்துகொள்ள முடிந்தது.

நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின்  துணைப்  பொருளாளர்
திருமதி அனுராதா சேஷாத்திரி, தகவல் தொடர்பு இயக்குனர் கவிதா சுந்தர், தலைமை  விருந்தினர்
முனைவர் வாசு ரங்கநாதன், பென்சில்வேனியா பல்கலைக்கழகம் சிறப்பு விருந்தினர் திரு முருகானந்தம்,
சங்கத்தின்  நிறுவனர் திரு பழனிசாமி சுந்தரம்,
சங்கத்தின் தலைவர் திரு பாலமுரளி கோதண்டராமன்,
துணைத் தலைவர் திருமதி கீதாஞ்சலி பொன்முடி, மற்றும் பொருளாளர்
திருமதி சுசித்ரா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்கிய பங்கேற்பாளர்கள்.

2 COMMENTS

 1. நியு ஜெர்ஸி நடத்திய புத்தகக் கண்காட்சியில் கல்கி
  யின் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன என்பது
  பெருமைக்குரிய விஷயம்தான். அந்தக் கல்கியின்
  வாசகனாக நான் இருப்பது மிகப் பெருமையான
  விஷனம்தான்.

 2. உலகின் எந்த பகுதியில் புத்தக க் கண்காட்சி நடந்தாலும் கல்கியின்
  ெ பான்னியின் செல்வன் நிச்சயமாக அக் கண்காட்சியில் இடம்பெறும். நான் பல கண்காட்சியில் கல்கியின் படைப் புகளைத்
  தே டி க் கண்டுபிடித்து வாங்கி இருக்கிறே ன்
  நாளது வரை ெபாக்கிஷமாக பே ணி
  காத்து வருகின்றேன்.
  து.சே ரன்
  ஆலங்குளம்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

அமெரிக்காவின் மதுரை

0
முனைவர் சோமலெ சோமசுந்தரம்   கொளுத்தும் வெயில், காரமான உணவு வகைகள், விறகு அடுப்புச் சமையல் என தமிழகத்திற்கும் டெக்சஸ் மாநிலத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. சந்திர மண்டலத்திலிருந்து முதலில் ஒலித்த வார்த்தை “ஹுஸ்டன்.’’ இந்த...

இறந்தும் இடம் மாறும் அதிபர்

0
- முனைவர் சோமலெ சோமசுந்தரம்     படைக்கு முந்து! தன்னார்வத் தொண்டிற்கு அமெரிக்கர்களும், அமெரிக்காவும் கொடுக்கின்ற முக்கியத்துவமே என்னுடைய முப்பத்தேழு ஆண்டு கால அமெரிக்க வாழ்வில் என்னை மிகவும் கவர்ந்த அமெரிக்கப் பண்பாகும். 65 சதவிகித அமெரிக்கர்கள்...

இரண்டு  வான்கோழிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய அமெரிக்க அதிபர் பைடன்

1
- ஹர்ஷா   அமெரிக்காவில் ‘நன்றி தெரிவிக்கும் நாள்’ என்று ஒரு நாள் கொண்டாடப்படுகிறது.  நன்றி தெரிவிக்கும் நாள் என்பது ஒரு வட அமெரிக்கப் பாரம்பரிய கொண்டாட்டம். 200 ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது.  இன்றைய காலகட்டத்தில் அரசியல், சமூக,...

மிதிவண்டிகளின் தோழன்!

0
அமெரிக்காவின்  முகங்கள்! - முனைவர் சோமலெ சோமசுந்தரம் மிதிவண்டிகளின் தோழன்  - ஆரெகன் மாநிலம்   உலகெங்கும் கிராமங்களில்கூட மிதிவண்டிகளின் எண்ணிக்கை குறைந்து, இரு சக்கர தானியங்கி வண்டிகளின் (Two Wheelers) ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. மிதிவண்டிகளை ஓட்டுவதால் நம்...

வெள்ளை மாளிகையில் தீபாவளி

0
வெள்ளை மாளிகையில் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய பைடன் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 40 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு திபாவளி தினத்தன்று அவர்களுக்கு...