0,00 INR

No products in the cart.

மோடி போப்பாண்டவரைச் சந்தித்திருக்கிறாரே?

நீங்கள் கேட்டவை / தராசு பதில்கள்

 

? மோடி போப்பாண்டவரைச் சந்தித்திருக்கிறாரே?
– யூசப் ஜாகிர், வந்தவாசி
! தவறேதுமில்லையே. அவர் கத்தோலிக்கக் கிருத்துவர்களின் தலைவர் மட்டுமில்லை; ‘வாட்டிகன்’ என்ற நாட்டின் அதிபரும் கூட. இந்தியாவுடன் நல்லுறவிலிருக்கும் நாடுகளில் அதுவும் ஒன்று. போப்பாண்டவரைக் கட்டி அணைத்துக்கொண்டது
மேல்நாட்டு முறைப்படியான மரியாதை.
கோவா தேர்தலையும் இதையும் முடிச்சுப்போடுவது அரசியல் அநாகரிகம்.

? ‘நான் அரசியலுக்கு வருவது என் தந்தைக்கேகூடப் பிடிக்கவில்லை’ என்கிறாரே துரை வைகோ?
– ஆர்.மாதவ ராமன், கிருஷ்ணகிரி
! தந்தைக்குப் பிடிக்காத விஷயத்தையா அவரது கட்சி மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளும் ஒருமனதாகச் செய்திருக்கிறார்கள்?

? அது என்ன ‘32 வகை தர்மம்’?
நெல்லை குரலோன், பொட்டல்புதூர்
! 32 தர்மங்களின் பட்டியலை அறப்பளிச்சுர சதகத்தில், ஒரே பாடலில், அம்பலவாணக் கவிராயர் அழகாகக் கொடுத்துள்ளார். ஏன் 32 என்பது தெரியவில்லை. ஆனால் வியப்பான விஷயம் சிறைக் கைதிகளுக்கு உணவு கொடுப்பது, அனாதைப் பிணங்களை அடக்கம் செய்வது , மிருகங்களுக்குத் தீவனம் கொடுப்பது, கல்யாணம் செய்ய உதவுவது, பிள்ளைகளுக்குக் கல்விச் சாலைகள் அமைப்பது, மருந்து கொடுப்பது போன்று இன்று தருமமாகக் கருதப்படுவது பற்றி நம் புராண, இதிகாசங்களில் உள்ள விஷயங்கள் ஒவ்வொன்றும் எதில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் விளக்குகிறார். அனைத்தையும் இங்குப் பட்டியல் போட இயலாது. அம்பலவாணக் கவிராயர் பாடலுடன் விளக்கத்தையும்
‘தமிழும் வேதங்களும்’ என்ற தளத்தில் பாருங்கள்.

? ‘அண்ணாத்தே’ எப்படி?
– உஷாமுத்துராமன், மதுரை
! எந்த அணுகுமுறை, தங்களைப் பிரபலமாக்கியதோ அதையே தொடர்ந்து செய்யும் பிரபலங்களுக்கு, ‘அது செயல்படுவது நின்றுவிட்டது’ எனும் உண்மை புரிய வெகுகாலம் ஆகின்றது.

? ‘இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பெற்ற வெற்றியைக் கொண்டாடினால் தேசத்துரோக வழக்கு பாயும்’ என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளாரே?
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்
! எது ‘தேச பக்தி’ என்று புரியாதவர்கள் இந்த நாட்டில் மாநில முதல்வர்களாக இருப்பது நாம் செய்த புண்ணியம்!

? அரசுப்பள்ளி மாணவன் ஐஐடி நுழைவுத்தேர்வில் வென்றிருக்கிறாரே?
சம்பத்குமாரி, பொன்மலை
! நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம் இது. மிகக் கடினமான நுழைவுத்தேர்வான ஐஐடி நுழைவுத் தேர்வை ஒரு எளிய குடும்பத்திலிருந்து வந்த அரசுப்பள்ளி மாணவன் சந்தித்துச் சாதித்திருக்கிறான். அதுவும் மிக அதிகமான கட்டணக் கொள்ளையடிக்கும் பயிற்சி பள்ளிகளில் படிக்காமல், ‘மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி மையத்தின் உதவியால்’ என்பது பெருமைக்குரியது. “தக்க பயிற்சியும் ஊக்கமும் அளித்தால் அரசுப் பள்ளி மாணவர்களும் சாதிப்பார்கள்” என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாவட்ட ஆட்சியரும், அந்த மாணவனின் கல்விச்செலவை தமிழக அரசே ஏற்கும் என்ற முதல்வர் ஸ்டாலினும் பாராட்டுக்குரியவர்கள்.

? சசிகலாவின் அரசியல் பயணங்கள் எந்த விளைவை ஏற்படுத்தும்?
– செல்லப்பாண்டியன், தூத்துக்குடி
!அ.தி.மு.க.வில் குழப்பத்தையும் சில நாட்களுக்கு அறிக்கைகள் மூலம் அறிமுகமாகும் புதிய தலைவர்கள் உருவாதைத்தவிர வேறு ஒன்றும் நிகழாது.

அண்மையில் நடந்த பல இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வி கண்டிருக்கிறதே?                                     – மாறன், திருச்சி
! இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிக்குத் தோல்வி என்பது அரசியலில் எச்சரிக்கை மணியாகக் கருதப்படும் விஷயம்.

? ‘2021ல் உ.பி.யில் யோகி ஆதித்யநாத் முதல்வர் ஆனால்தான் 2024ல் மோடி பிரதமராக முடியும்’ என அமித்ஷா பேசியிருக்கிறாரே?
– சந்திர மோகன்,  திண்டுக்கல்
! அப்படியா? மோடியின் பெயரைச் சொல்லி நாடுமுழுவதும் ஓட்டுக்கேட்டு இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க.வின் தலைவர் இன்று ஒரு மாநில முதல்வர் வெற்றியினால்தான் அவர் மீண்டும் பிரதமராக முடியும் என்று பேசியிருக்க வாய்ப்பில்லை.

? தமிழகக் ஆளுநர் துறைச்செயலாளர்களிடமிருந்து நேரிடையாக அறிக்கை கேட்டிருக்கிறாரே?
– குமரன், ஸ்ரீரங்கம்
! ஒரு மாநில ஆளுநர் தனக்கு வேண்டிய தகவல்களை அரசிடமிருந்து பெறுவது வாடிக்கையான நடைமுறை. அதை அவர் மாநில முதல்வர் மூலமாகத் தலைமைச்  செயலரிடமிருந்து பெறுவார். அதைத்தான் இந்த ஆளுநரும் செய்திருக்கிறார். “மாநில உரிமையில் தலையிடுகிறார்” என்று பேசுவது அபத்தம்.

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டிருப்பது குறித்து?
– ஜோஷ், அயன்புரம்
! ஒரு வழியாக அ.தி.மு.க.விற்குப் போராட ஒரு விஷயம் கிடைத்துவிட்டது!

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

ப்ளாகிங்

சுஜாதா தேசிகன்                                             ...

வெற்றிடம்

1
சுவிஸ்நாட்டில் ஜெனிவா நகரில் அதன் அழகான ஏரிக் கரையிலிருக்கிறது இந்த நவீன சிற்பம். “உலகெங்கும் பெற்றோர்கள் வயதான காலத்தில் தங்கள் குழந்தைகள் தங்களுடன் இல்லாமல் தனித்து வாழ்வதைச்சொல்லுகிறது” என்கிறது அதன் அருகிலிருக்கும் குறிப்பு. சிலைக்குச்...

மிகக்கொடூரமான ஒரு சமூகத்தில் வாழ்கிறீர்கள்.

0
முகநூல் பக்கம் சென்னையை விட்டுக் கிளம்பி 24 மணி நேரம் ஆகிறது. கன்னியாகுமரிக்கு படப்பிடிப்பிற்கு வந்திருக்கிறேன். பயணம் தொடங்கியதிலிருந்து இந்த நாட்டில் ஒரு சக்கர நாற்காலி உபயோகிப்பவரின் துயரங்கள் எங்கு போனாலும் என்னை தொடர்ந்தவண்ணம்...

அமெரிக்காவில் தமிழ்ப்  புத்தகக் கண்காட்சி!

- சோம. வள்ளியப்பன் தற்பொழுது நம் நாட்டைப் போலவே, அமெரிக்காவிலும் கோவிட் பெருந்தொற்று குறைந்து, இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அமெரிக்காவின் நியூ ஜெர்சி தமிழ் சங்கம், அக்டோபர் 17, ஞாயிறு...

இந்த வாரம் இவர்

1
"சர்தார் படேல் வரலாற்று ஆளுமை மட்டுமல்ல; அவர் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் வாழ்கிறார்" - நரேந்திர மோடி     ஓவியர் ஸ்ரீதர்