0,00 INR

No products in the cart.

நீங்கள் நினைத்தால் மட்டும் தான்…

நூல் அறிமுகம்

 

இந்துமதி (வாசிப்போம்… தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு)

ந்த விஜயா பதிப்பகம் கழுகு போல் காத்திருக்குமோ?

மேன்மையானவற்றை கொத்திக் கொண்டு போகுமோ?அவர்களின் பார்வை மிகவும் கூர்மையானதாக இருக்க வேண்டும்-ராஜாளிப்பறவை மாதிரி.

உதிர்ந்தவற்றிக்கும், தானாக மடியில் விழுந்தவற்றிற்கும் ஆசைப்படாமல் உயர்ந்தவற்றை எட்டிப் பறிக்கும் வைராக்கியத்தை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும். (உதிர்ந்தவற்றிக்கும் – இதிலிருந்து வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும்- வரையிலான வரிகளின் உபயம்-திரு.வே.இறையன்பு IAS. அவர்களின்  ‘நரிப்பல்’ சிறுகதைத் தொகுப்பிலிருக்கும் ‘இழப்பீடு ‘ சிறுகதையிலிருந்து.)

அதனால்தான் தேர்ந்தெடுத்த புத்தகங்களாக வெளியிடுகிறார்கள். தமிழ் நாட்டின் இரு கண்களாக-முதலமைச்சரின் உறுதுணையாக-அரசாங்கத்தின் தூண்களாகக் கருதப்படும் தலைமைச் செயலாளரின் புத்தகங்களையும், காவல் துறை இயக்குநரின் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். எனக்குப் படிக்கக் கிடைத்த நல்ல புத்தகங்களைப் பதிப்பித்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் நம் காவல் துறையின் இயக்குநர் பொறுப்பை ஏற்றிருக்கும் திரு.சைலேந்திரபாபு IPS. அவர்களின் புத்தகம் ‘உனக்குள் ஒரு தலைவன்!’

அட்டைப் படத்தின் கம்பீரமே அடையாளம் காட்டுகிறது அவருக்குள் இருக்கும் தலைவனை.

அப்படிப் பட்ட தலைவன் இருந்த காரணத்தினால்தான் இப்படிப்பட்ட தலைமைப் பதவி அவரைத் தேடி வந்திருக்கிறது.

அதனை அவன் கண்விடல்!

இந்த நூல் முற்றிலும் மாணவர்களுக்கானதே. மாணவர்களைக் குறி வைத்தே எழுதப்பட்டது. பெற்றோர் சொன்னாலும், உற்றார் சொன்னாலும், ஆசிரியர்கள் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் மாணவர் சமுதாயம் இவரைப் போன்ற ஆளுமை நிறைந்த தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் அதிகாரிகள் சொன்னால் நிச்சயம் செவி சாய்க்கும் என்கிற நம்பிக்கை மட்டுமின்றி தாங்கள் உயர்ந்த அளவுக்கு ஒவ்வொரு மாணவனும் உயர வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க முக்கிய நோக்கம் என்றே கருதுகிறேன்.

இந்நூலைப் படிக்கும்

உங்களுக்காகவே

இந்நூல்

அர்ப்பணிக்கப்படுகிறது.

என்று நூலை வாசிப்பவர்களுக்கே சமர்ப்பித்தும் உள்ளார் திரு.சைலேந்திரபாபு. வாசிப்பவர்கள் மீது அவருக்கு உள்ள நேசிப்பு புரிகிறது.

என்னுடைய மகனுக்கு எட்டு வயதாகிறது. நண்பர்கள் தினத்தன்று அவன் குறுஞ்செய்தி அனுப்புகிறான்.

“நண்பர்கள் தினவாழ்த்துகள்”

“நான் உனக்கு நண்பனா?” என்று கேட்கிறார் இவர்.

“ஆம். நீங்களும் நானும் நல்ல நண்பர்கள்.”- என்று பதிலளிக்கிறார் மகன்.

மிக நல்ல புரிதல்! எட்டு வயது மகனுக்கு எத்தனை எண்ண விசாலம்!

முதலில் வீட்டிலிருந்தே தொடங்குகிறது. எந்த அறமும் முதலில் வீட்டிலிருந்து தான் தொடங்கப்பட வேண்டும்.

இல்லத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும்!

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை..

இது புரியாதவரா அவர்?

விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்..?

‘My father is my hero ‘- எனச் சொல்லாமல் சொல்லும் மகன்!

“தன் மகனைப் போலவே அனைத்துப் பெற்றோர்களின் மக்களும் நன் மக்களாக வேண்டும்” என்கிற எண்ணத்தை இப்புத்தகத்தின் ஒவ்வொரு வரியும் எடுத்துக் கூறுகிறது.

நீங்கள் நினைத்தால் மட்டும்தான் உங்களால் படிக்க முடியும்!

நீங்கள் நினைத்தால் மட்டும்தான் முதல் மார்க் வாங்க முடியும்!

நீங்கள் நினைத்தால் மட்டும்தான் படித்த பள்ளிக்குப் பெருமை சேர்க்க முடியும்!

நீங்கள் நினைத்தால் மட்டும்தான் உங்கள் பெயரும், பள்ளியின் பெயரும் பத்திரிகைகளில் வரும்!

ஆகவே, மாணவர்களே நினையுங்கள்.பள்ளியின் பெயர் பரவலாக எல்லாப் பத்திரிகைகளிலும் வர பள்ளி முதல்வருக்கு உறுதுணையாக இருங்கள் என்கிறார்.

இதைப் படிக்கும் மாணவர்களால் எப்படி நினைக்காமல் இருக்க முடியும் சொல்லுங்கள்.

மேலும் சொல்கிறார்.

நான் படித்த பள்ளியின் கணித ஆசிரியர் ராமசாமி, ஆங்கிலப் பாடமும் நடத்துவார். அவர் முறுக்கு மீசையுடன் ராணுவ அதிகாரி போல் இருப்பார். நன்றாகப் பாடம் எடுப்பார்.

ஒரு நாள் என்னை அழைத்தார்.

“நான் உனக்கு என்.சி.சி. யூனிஃபார்ம் வைத்திருக்கிறேன். நீ இன்றிலிருந்து என்.சி.சி.யில் சேர்ந்து கொள்…” என்கிறார்.

அவர் எங்கள் பள்ளியின் என்.சி.சி ஆசிரியரும் கூட. அவர் யூனிஃபார்ம் அணிந்தால், இந்திய ராணுவத் தளபதி போல் இருப்பார். அவர் கொடுத்த யூனிஃபார்மை அணிந்து கொண்டேன்.

“அந்தக் கண்ணாடியில் போய்ப் பார்.” – கட்டளை வந்தது.

என்.சி.சி.யில் யூனிஃபார்ம் அணிந்து ‘யூ ஆர் ஸ்மார்ட் ‘ என்று எழுதப்பட்ட கண்ணாடியில் போய்ப் பார்க்க வேண்டும். பார்த்துவிட்டு வந்து நான் அவரிடம் சென்றேன்.

“யூ ஆர் லுக்கிங் வெரி ஸ்மார்ட் சைலேந்திரபாபு…” என்றார்.

அன்று போட்ட யூனிஃபார்ம்!

இன்றும் அதைக் கழற்றவே இல்லை.

இன்று நான் ஒரு காவல்துறை அதிகாரி!

“ஓர் ஆசிரியர் என்பவர் தன் அனைத்து மாணவர்களையும் நேசிப்பவராக இருக்க வேண்டும். மாணவர்களை சமமாக நேசிக்காத ஒருவர் நல்ல ஆசிரியராக இருக்கவே முடியாது” என்பது இவரது ஆழமான அபிப்பிராயம்!

தமிழ் நாட்டில் சென்ற வருடம் திருநெல்வேலியைச் சேர்ந்த யாஸ்மின் என்ற மாணவி 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாக வந்தார். அவர் அரசுப் பள்ளியில் படித்த ஓர் ஏழை மாணவி.

அதற்கு முந்தைய வருடம் கன்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோஸ்ரி ஜான் என்ற மாணவர் 496 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவனானார்.

நான் அவரை சந்தித்துக் கேட்டேன்.

“எது உன்னை இந்தப் பெருமுயற்சி எடுக்கத் தூண்டியது?”

அதற்குக் கிடைத்த பதில்.

“எங்கள் வீடு குடிசை வீடு. என் தந்தை ஒரு மீன் வியாபாரி. காலை 5 மணிக்கெல்லாம் கடலுக்குச் சென்று மீன் பிடித்து, சைக்கிளில் கொண்டு போய் வீடு வீடாக விற்று விட்டு வருவார். பின் சாப்பிட்டுப் படுத்தால் அடித்துப் போட்ட மாதிரி தூங்குவார். நான் ஏரோநாட்டிக் இன்ஜினீயரிங் படித்து, அமெரிக்கா போய், நாசாவில் விஞ்ஞானியாகச் சேர்ந்து, நிறைய சம்பாதிக்க வேண்டும். பின் ஊருக்குத் திரும்பி வந்து, நல்ல வீடு கட்டி என் அப்பா அம்மாவை அதில் உட்காரவைத்து அழகு பார்க்க வேண்டும்!”

எப்பேர்ப்பட்ட உன்னதமான கனவு! எத்தனைப் பெரிய லட்சியம்!

அதை நிறைவேற்றுகிற துடிப்போடு செயலில் இறங்கியதால் தானே அவரால் 496 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவனாக முடிந்தது!

ஆகவே மாணவர்களே,

இந்த ஜோஸ்ரி ஜானை முன் உதாரணமாகக் கொள்ளுங்கள்‌. உள்ளத்தில் அவரைப் போன்ற பெரும் லட்சியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.பின்னர் அதனைச் செயல் படுத்துகிற முயற்சியில் இறங்குங்கள்.

நாளை நிச்சயம் உங்களுடையதே!

திரு.சைலேந்திரபாபுவுக்கு சினிமா பார்க்கின்ற கல்லூரி மாணவ-மாணவியர் மீது பெரும் வருத்தம் இருக்கிறது. ‘சினிமா பார்ப்பதைத் தவிர்த்தாலே வாழ்க்கையில் முன்னேறிவிட முடியும்’ என்பது இவரது கருத்து. சில தொலைக்காட்சித் தொடர்கள் தொல்லைக் காட்சித் தொடராக இருப்பதையும், மிகக் கேவலமானதாக இருப்பதையும் கூட சுட்டிக் காட்டுகிறார்.

மேலாண்மைக் கல்விக்கு இவர் தரும் விளக்கம் அருமையானது.

“இரண்டு மனிதர்களுக்கிடையே உள்ள உறவுகளை சிறந்த முறையில் வளர்க்கும் திறனே மேலாண்மை” என்கிறார்..

அதற்கான பயிற்சிகளைக் கட்டாயம் எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறார்.

சாதாரண கிராமப்புறங்களிலிருந்து கற்க வந்திருப்பவர்களுக்கு ஆங்கில அறிவு வளரவேண்டும் என்பதற்காக நிறைய டிப்ஸ் தருகிறார்.

1) தினமும் ஒரு மணி நேரம் செய்தித்தாள்களைப் படியுங்கள்.

2) தவறாமல் ஆங்கிலச் செய்திகளைக் கேளுங்கள்.

3) ஆங்கிலக் கதைப் புத்தகங்களைப் படியுங்கள்.

நான் சிறுவனாக இருந்தபோது என் தந்தை தினமும் ‘ஹிந்து’ பேப்பர் வாங்கிக் கொடுத்து படிக்கச் சொல்லி வற்புறுத்துவார். நல்ல புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பார். அவர் சொன்னதைத் தவறாமல் கடைப்பிடித்ததால்தான் கிராமத்தில் தமிழ் வழிக் கல்வி பயின்ற எனக்கு ஆங்கிலம் மிகவும் இயல்பானதாகவும், சரளமாகியும் போயிற்று.

காலை 5 மணிக்கு எழுந்திருங்கள்.

பாடப் புத்தகங்களைப் படியுங்கள்.

பாட சம்பந்தமாக எழுத வேண்டியதை எழுதுங்கள்.

நிறைய சிந்தியுங்கள்!

சிந்தித்துத் தெளிவு பெற்றவர்கள் தோற்றுப் போவதே இல்லை.!

இவற்றையெல்லாம் விடுத்து, ”பெரிய தொழிலதிபருக்குப் பிள்ளையாகப் பிறந்திருந்தால் நான் பெரிய நிறுவனத்தைத் தொடங்கியிருப்பேன். நான் கலெக்டர் பிள்ளையாகப் பிறந்திருந்தால் நானும் கலெக்டராகியிருப்பேன்” என்று நினைப்பதும், கூறுவதும் அறிவுடமையல்ல. தொழிலதிபர் பிள்ளைகள் தொழிலதிபர் ஆவதில்லை. கலெக்டர் பிள்ளைகள் கலெக்டர்களாவதில்லை.

இந்தியாவின் முதல் நூறு பணக்காரர்களின் பெயர்களை எழுதினால் அவர்களெல்லாம் பணக்கார்கள் வீட்டில் பிறந்தவர்களாக இருக்க மாட்டார்கள். இன்று உலகப் பணக்காரர்களாகத் திகழும் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி இவர்களின் தந்தை திருபாய் அம்பானி ஒரு சாதாரண லாரி டிரைவர் என்பது உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்…?

“உனக்குள் ஒரு தலைவன்”
ஆசிரியர் : டாக்டர் சி.சைலேந்திரபாபு IPS.
விஜயா பதிப்பகம், கோவை.
பக்கம் :104
விலை : ரூ 80/-

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

‘ஏய் நத்தையே, உன் கதை என்ன?’

0
நூல் அறிமுகம்  கருணா மூர்த்தி(வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம்.குழு) நாட் என்று சொல்வார்கள். Knot என்பது திரையுலகில் சகஜமாக புழங்கும் வார்த்தை. ஒரு நாட் கிடைத்துவிட்டால் அதைக் கொண்டு இரண்டரை மணி நேரம் அல்லது மூன்று...

படியுங்கள். உங்களுக்கும் பிடிக்கும்

0
  நூல் அறிமுகம்   சுபாஷ்ணி ரமணன்   செல்லம் ஜெரினாவின்  நந்தனின் அநுராகம். பெயரே வசீகரமாய் இருக்கிறது. கதையும் அப்படியே. நந்தன் யார்? அவன் அநுராகம் எது என்பதுதான் கதை. சௌந்திரம்மாளின் அண்ணன் மகன் தான் நந்தன். பெற்றோரை இழந்த அவன்...

இந்த நூலை மிஸ் பண்ணவே கூடாது.

நூல் அறிமுகம்   வேதா கோபாலன்   ‘கதைகளும் திரைப்படங்களும்’ பற்றி சுபாஷிணி ரமணன் முக நூலில்  எழுதிய பதிவுகள், என்னை மட்டுமின்றிப் பலரையும் திரும்பிப் பார்க்க வைக்கவும் வியந்து பாராட்டவும் செய்யக் காரணங்கள் பல இருந்தன. முதல் காரணம் ...

தூக்கு மேடையின்  அமைப்பு எப்படி இருக்கும்?

1
நூல்  அறிமுகம் பொன் விஜி  (வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழு)   தனது சொந்தத் தொழிலான விவசாயி ஒருவனுக்கு, இன்னொரு பரம்பரை பரம்பரையாகச் செய்துவந்த ஒரு தொழிலை, வறுமையின் நிமித்தம் ஏற்றுக் கொள்ள வேண்டிய...

குறுகத் தரித்த உலக சரித்திரம்

நூல் அறிமுகம்   சித்தார்த்தன் சுந்தரம்   வரலாறு என்றாலே அதை ஓர் அசூயையாகப் பார்க்கும் போக்கு நம்மில் பலருக்கும் பள்ளிக்கூட நாட்களில் இருந்திருக்கிறது. கணிதம், அறிவியல் போன்ற பாடங்களுக்குத் தந்த மதிப்பை நம்மில் பெரும்பாலோர்...