ராஜாஜி என்னும் மாமனிதர்.

ராஜாஜி என்னும் மாமனிதர்.

ன்று ராஜாஜி பிறந்த நாள். சுதந்திர போராட்ட வீரர், காந்தியவாதி ; தாராளவாத கொள்கைகளுக்காக தொடர்ந்து தள்ளாத வயதிலும் போராடியவர். சோசியலிச பொருளாதார கொள்கைகள் நாட்டை அழித்து, ஊழலை பெருக்கும் என்று மிகச்சரியாக கணித்து சொன்ன தீர்க்கதரிசி. அதற்காக அன்று அவர் ‘பிற்போக்குவாதி’ என்று தூற்றப்பட்டார் !!

அவர் ஒரு சாதி வெறியரோ, இந்துத்துவரோ அல்லர். ஆனால், அப்படி ஒரு பிம்பம் உருவாகியுள்ளது. அவரின் புதிய கல்வி திட்டத்தை ‘குலக்கல்வி திட்டம்’ என்று பெரியார் மிக தவறாகப் புரிந்துகொண்டு எதிர்த்ததால் அப்படி ஒரு பிம்பம் உருவானது.

“அவர் முதல்வராக இருந்தபோது 6000 பள்ளிகளை மூடினார்” என்ற பெரும் பொய் இன்றும் உலாவுகிறது. அப்படி எதுவும் இல்லை. எந்தெந்த பள்ளிகளை (எந்த மாவட்டங்களில்) மூடினார் என்ற விவரம், ஆதாரம் இதுவரை வெளியாகவில்லை. என் தந்தை தீவிர பெரியாரியவாதி. 1937இல் பிறந்து, 40களில், 50களில் கல்வி பயின்றவர். அவரிடமும், இன்னும் பலரிடமும் விசாரித்து, தேடி அலைந்திருக்கிறேன். ஆனால் ஒரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை.

சேலத்தில் பெரும் செல்வதந்தராக, மிக அதிகம் வருமானம் கொண்ட வழக்கறிஞர் தொழிலை 1925இல் காந்தியின் கோரிக்கையை ஏற்று உதரியவர், பின்னர் சுமார் 10 ஆண்டுகள் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை உருவாக்கி, அங்கு ஒரு எளிய குடிசையில் வாழ்ந்து, கதருக்கும், கிராம மேம்பாட்டுக்கும் தன்னலமில்லா சேவை செய்த ஒப்பற்ற மனிதர். தலித் மேம்பாட்டுக்காகவும், கல்விக்காகவும் உழைத்தவர். தலித் மாணவர்கள் கல்விக்காக ஆசிரமத்தில் இருந்து பாடுபட்டார். (இதர காந்தி ஆசிரமங்களைப் போல்).

பட்டேல், ராஜேந்திர பிரசாத் போன்ற பெரும் தலைவர்களுடன் பொருளியல் கொள்கைகளில் ஒன்றுபட்டாலும் (நேருவின் சோசியலிச கொள்கைகளை எதிர்த்து), அவர்களின் இந்து தேசிய பார்வையை நிராகரித்து, மதவெறிக்கும், அடிப்படைவாதத்திற்கும் எதிராக நேருவின் துணை நின்ற genuine secular liberal leader. ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவாவாதிகள் பின்னாட்களில் பட்டேல், ராஜேந்திர பிரசாத் போன்ற தேசிய தலைவர்களை ‘சுவீகரிக்க’ முயன்றாலும், அவர்கள் என்றும் ராஜாஜியை ‘தங்களவர்’ என்று காட்டிகொள்ள முயலவில்லை என்பது முக்கியம். முடியவும் முடியாது. 1959இல், தனது 81ஆவது வயதில், சுதந்திரா கட்சியை உருவாக்கி, காங்கிரஸின் சோசியலிச கொள்கைகளை எதிர்த்து துணிந்து போராடினார். அன்றைய அரசியல் சூழலில், intellectual climate which was completely dominated by socialist philosophy, unlike today, அப்படி ஒரு போராட்டத்தை துவக்க மாபெரும் மனோதிடமும், courage of convictionம் வேண்டும். இன்று தாராளவாத பொருளியல் கொள்கைகளை ஆதரிப்பது மிக சுலபம்.

அவரின் பன்முக ஆற்றலை, பன்முகத்தன்மையை பற்றி எழுதி மாளாது. அவரின் பொருளாதார கொள்கைகளைதான் இன்று இந்தியா செயல்படுத்துகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com