மத்திய கலால் வரி தினம் - பிப்ரவரி 24

மத்திய கலால் வரி தினம் - பிப்ரவரி 24

வ்வொரு வருடமும் பிப்ரவரி 24ஆம் தேதி மத்திய கலால் வரி தினம் (Central Excise Day) அனுசரிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் கலால் வரி மற்றும் சுங்க வரித்துறை  ஊழியர்களை சிறப்பான முறையில் கலால் வரிவிதிப்பை மேற்கொள்ள ஊக்குவிப்பதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 1944 ஆம் வருடம் பிப்ரவரி 24ஆம் தேதி மத்திய கடல் மற்றும் உப்புச் சட்டம் ஏற்படுத்தப் பட்டதன் நினைவாக கொண்டாடப்படுகிறது.

இந்நாளில், மக்கள் நாட்டிற்கு செலுத்த கூடிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய (CBIC) துறையின் பங்களிப்பையும், அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அவர்களின் சேவைகளையும் கவுரவிக்கும் வகையில் அனுசரிக்கப்படுகிறது. இந்தத் துறையில் நேர்மையாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்படும். வரி செலுத்துவது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படும்.

நம் நாட்டிற்குள் தயாரிக்கப்பட்டு உருவாக்கப்படும் பொருட்களின் உற்பத்தியின் மீது விதிக்கப்படும் வரியே கலால் வரி எனப்படும் எக்சைஸ் ட்யூட்டியாகும். தொழிற்சாலையில் பொருட்கள் தயாரிக்கப்பட்ட பின் , அதன் உரிமையாளரால்  செலுத்தப்படுவதே கலால் வரி. விலக்கு அளிக்கப்பட்டுள்ள சில பொருட்களை தவிர அனைத்து பொருட்களின் மீதும் கலால் வரி வசூலிக்கப்படும். இந்தியாவில் மூன்று வகையான மத்திய கலால் வரிகள் விதிக்கப்படுகின்றன.

அவை: அடிப்படை கலால் வரி, கூடுதல் கலால் வரி, மற்றும் சிறப்புக் கலால் வரி.
1944 ஆம் ஆண்டு வரியை எளிதாக செலுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தால் இந்திய வரி முறை சீர்திருத்தப் பட்டது. மத்திய கலால் வரி மற்றும் உப்புச் சட்டம் தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைத்து சிறப்பு விதிகளைக் கொண்டு இந்த சட்டத்தை திருத்தப்பட்டது. 1890 ஆம் ஆண்டின் பம்பாய் உப்புச் சட்டம், 1884 ஆம் ஆண்டின் மெட்ராஸ் உப்புச் சட்டம் மற்றும்1882 ஆம் ஆண்டின் இந்திய உப்புச் சட்டம் போன்ற உப்பு உற்பத்தி சட்டங்களையும், போக்குவரத்து தொடர்பான அனைத்து முந்தைய சட்டங்களையும் இதன் மூலம் ரத்து செய்யப்பட்டது.

சுங்க வரி மற்றும் வரி வசூல் தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல், மத்திய கலால் வரிகள், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் ஐஜிஎஸ்டி, கடத்தல் தடுப்பு ஆகியவை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் கடமைகளாக உள்ளன. இதன் முக்கியத்துவத்தை இந்திய நாட்டு மக்களுக்குத் தெரிவிப்பதும், அவர்களின் பணிகளைப் பொறுப்புடன் மேற்கொள்வதும்தான் இந்த நாளைக் கொண்டாடுவதன் முக்கிய நோக்கமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com