சென்னை மெட்ரோ ரயில்கள் டிரைவர் இல்லாமல் ஓடப்போகிறது

சென்னை மெட்ரோ ரயில்கள் டிரைவர் இல்லாமல் ஓடப்போகிறது

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் உலகின் பல முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.   சென்னை உட்பட  சில இந்திய நகரங்களிலும் இப்போது மெட்ரோ ரயில்கள் ஒடுகின்றன. இந்த மெட்ரோக்கள் மிக நவீனமானவை.  இது நகரின் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் உயர் மட்டபாதை, சுரங்கபாதை, ஆறுகளின் அடையில்   என்று மாறி மாறி வெகு வேகமகச்செல்லும் . முழுவதும் கணினிகளின் உதவியுடன் செயல்படுகிறது.  சில இடங்களில் இந்த மெட்ரோ  ரயில் நிலையமே பூமிக்கடியில் இருக்கும். அதுமட்டுமில்லை, அந்த நிலையமும் இரண்டு அல்லது மூன்றடுக்காகஇருக்கும்

சென்னை மெட்ரோவின் இரண்டாம்  கட்ட பணிகள் தொடங்கியிருக்கின்றன.  இதில் சில இடங்களில் இப்படி .  மெட்ரோ  ரெயில் சுரங்கம் பல அடுக்குகளாக அமைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையங்கள்  குறுகியதாகவும், ஆழத்திலும் அமைய உள்ளது. 35 மீட்டர் ஆழத்தில் ஒன்றன் மேல்  ஒன்றாக 2 சுரங்க வழித்தட பாதை அமைக்கப்பட உள்ளன. மயிலாப்பூரில் மெட்ரோ  ரெயில் 3 அடுக்கு சுரங்கப்பாதையாக அமைக்க திட்டமிட்டு உள்ளது. அமெரிக்க ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருப்பது  போல சென்னை  நகரிலும் நிலத்தடியில் பல அடுக்களில் மெட்ரொ ரயில்பாதைகள் அமையப்போகிறது.

இப்படி ரயில் பாதைகள்  அமைப்பது  மிகச்சவாலான பணி. 2026 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரப்போகும் இந்த திட்டத்தில் அறிமுகப்படுத்தவிருக்கும்  மற்றொரு நவீனம். இந்த மெட்ரோக்களில் ஓட்டுநரே இருக்க மாட்டார். தானியிங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அண்மையில்   பிரதமர் நாட்டின்  முதல்  தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை டெல்லியில் தொடங்கி வைத்தார். சுமார் 37 கி.மீ நீளத்திற்கு இந்த ரயில் இயங்குகிறது.

இப்படி ஆளில்லாமல் ரயில் இயங்குவது பாதுகாப்பானதா? அது எப்படி இயங்குகிறது ?

உலகின் முதல் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை 1981ம் ஆண்டில் ஜப்பானில் கோஸ்ட் நகரில் தொடங்கப்பட்டது. இதைப் பின்பற்றி உலகெங்கிலும் 46 நகரங்களில் தானியங்கி சுரங்கப்பாதை ரயில்கள் இயங்கி வருகின்றன.

தொலைத்  தொடர்பு அடிப்படையில் இயங்கும் ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் டிரைவர் இல்லாத ரயில்கள் இயக்கப்படும்.

* டிரைவர் இல்லாத மெட்ரோ சேவையில் ரயில் புறப்படுவது, 2 நிலையங்களுக்கு இடையிலான ரயிலின் இயக்கம், அவசர காலங்களில் ரயிலை நிறுத்துவது, கதவுகளை திறப்பது, மூடுவது என அனைத்தும்  தானியங்கி முறையில்  நடைபெறும்.

*கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள கணினி, வழித்தடத்தில் உள்ள கணினி, ரயிலில் உள்ள கணினி மூன்றும் இணைந்து இந்த டிரைவர் இல்லா பயணத்தை வழி நடத்துகின்றன.


* ரயில்  நிலையம் மற்றும் தண்டவாளம் பற்றிய தகவல்களை வழித்தடத்தில் உள்ள கணினி கட்டுப்பாட்டு மையத்தோடு பகிர்ந்து கொள்கிறது. 2 கணினிகளும் தரும் தகவல்களின் அடிப்படையில் ரயிலில் உள்ள கணினி ரயிலை இயக்குகிறது.


* ஒரு நிலையத்தில் பயணிகள் அனைவரும் ஏறிய பின்னர் கதவு மூடப்படும். ரயிலின் அனைத்து கதவுகளும் மூடாவிட்டால் ரயில் புறப்படாது.


* ரயில் முழுவதும் கண்காணிப்பு கேமரா வசதி செய்யப்பட்டிருக்கும்.


* தண்டவாளத்தில் ஏதேனும்  ஒரு பொருளோ அல்லது நபரோ விழுந்து விட்டால் அதுகுறித்த தகவலை வழித்தடத்தில் உள்ள கணிணி அனுப்ப, உடனடியாக ரயில் நிற்கும்.


* அவசர காலங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் பயணிகள் தொடர்புகொள்ளும் வசதி செய்யப்பட்டிருக்கும். அவசர கால பிரேக்கை பயணி ஒருவர் பயன்படுத்தினால் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ரயிலில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க முடியும்.


* ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தால் ஒரே ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் கூடுதல் ரயில்களை அந்த வழித்தடத்தில் இயக்க முடியும்.

 எல்லாம் சரி அப்போதாவது மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் பேருந்து நிலையங்கள் அமைக்கப் படும் வசதிகள் அமைக்கப்படுமா? என்று கேட்கிறார் அலுவலகம் செல்ல மெட்ரோவை பயன் படுத்தும்  ஒரு பெண்மணி (இப்பொது சென்னை மெட்ரோ நிலையங்களின் அருகில்  வசதியான  பேருந்து நிறுத்தங்கள்  இல்லை)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com