ஓர் ஒற்றனின் வாக்குமூலம்

ஓர் ஒற்றனின் வாக்குமூலம்

லகெங்கும் பல நாடுகளில் பணிபுரியும் ஒற்றர்களின் பணி ரகசியமானதைப் போல அவர்கள் வாழ்க்கையும் ரகசியமானது. என்ன பணி செய்கிறோம் என்பதைக்கூட குடும்பத்தினரிடம் பகிர்ந்துகொள்ள முடியாத நிலை. தங்கள் சாதனைகளைக் கொண்டாட முடியாமல், வேதனைகளை வெளிச் சொல்லமுடியாத பணியில் இருப்பவர்கள்.

அப்படி ஓர் ஒற்றராக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (National Security Agency (NSA) யில் பணியாற்றியவர் எட்வர்ட் யோசப் ஸ்னோடென். இவரது பணி கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட், ஆப்பிள், முகநூல், டுவிட்டர் என்று பல வழிகளில் தனிநபர்கள் மற்றும் அரசாங்கங்கள் தகவல் பரிமாற்றம் செய்வதை அவர்களுக்குத் தெரியாமல் ஒற்றாடுவது. இது நடந்தது 2013ல் கவனியுங்கள்... இன்று கூகுள் செய்யும் வேலையை 2013லேயே வல்லுனர்களை நியமித்து அமெரிக்க உளவுத்துறை செய்து வந்திருக்கிறது. இதற்காக பயன்படுத்தப்படும் கருவிகளையும் சாப்ஃட்வேர்களையும் உருவாக்கியவர் இந்த எட்வர்ட் ஸ்னோடன்.

தீவிரவாத நடவடிக்கைகளை கண்டுபிடிப்பதற்காக அவர் சில சாப்ஃட்வேர்களை உருவாக்கி கொடுத்தார். ஆனால். அந்த உளவு பார்க்கும் செயலிகளை வைத்து தீவிரவாதிகளை மட்டுமின்றி வேறு சிலரையும் அமெரிக்கா உளவு பார்த்துள்ளது. பல நாட்கள் அமெரிக்கா இப்படி தவறாக முறையின்றி உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த்தை கண்ட ஸ்னோடன் தான் செய்யும் பணி அமெரிக்க மக்களின் அடிப்படை குடியுரிமைகளை, குறிப்பாக அந்தரங்க உரிமைகளை மதிக்காமல், திருடப்படுவதைக் கண்டு மனம் வெறுத்துப்போனார். இந்த செயல்களை அவரது மனசாட்சி ஏற்கவில்லை. மிகுந்த மன அழுத்தத்திலிருந்த ஸ்னோடன் ஒரு நாள் காலையில் அரசுகள் அத்துமீறிய செயல்கள் என்பதால் அதை வெளியிடவேண்டும் என்று கருதினார்.

பொதுவாக என்எஸ்ஏ அலுவலகத்திற்கு வெளியே எதையும் எடுத்து செல்ல முடியாது. ஆனால் அங்கே இருக்கும் பாதுகாவலர்களை மிக சாதுர்யமாக ஏமாற்றி அமெரிக்கா செய்த உளவு வேலைகளை எல்லாம் அப்படியே ஒரு பென் டிரைவில் போட்டு அதை என்எஸ்ஏ அலுவலகத்திற்கு வெளியே கொண்டுவந்து விட்டார்.

இதன் மூலம் திடுக்கிடும் தகவல்களை எல்லாம் ஆதாரத்தோடு வெளியிட்டார். தன்னை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டிருப்பதை அறிந்து ஸ்னோடன் தப்பி தேசத்தை விட்டு வெளியேறினார். ரகசியமாக ஹாங்காங் வழியாக அவர் சென்ற இடம் ரஷ்யா.

ஆனாலும், இவரிடம் விசா ஏதும் இல்லாததால் இவர் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டார். அங்கிருந்து கொண்டே இவரனுப்பிய அரசியல் தஞ்சக் கோரிக்கைகளைப் பல உலக நாடுகள் நிராகரித்து விட்டன. இறுதியில் 2013 இவருக்கு ஓராண்டு காலம் தங்குவதற்கு தற்காலிக உரிமையை ரஷ்யா வழங்கியது. தொடர்ந்து அவர் அடைக்கலம் கேட்டுவந்த ‘அகதி’யாக ரஷ்யாவில் வாழ அனுமதிக்கபட்டார்.

2013லிருந்து அமெரிக்க இவர் அரசு சொத்தை திருடியது, தேசிய பாதுகாப்பு தகவல்களை அனுமதியற்ற முறையில் வெளியிட்டது மற்றும் பாதுகாக்கப்பட்ட புலனாய்வுத் தகவல்களை அனுமதிக்கப்படாத நபருக்கு வெளியிட்டது போன்ற குற்றங்களைச் செய்த எங்கள் நாட்டின் தேசத்துரோக குற்றவாளி அவர். அவரை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது.

ஆனால் “மனித உரிமை காவலர்”களாக தங்கள் கொள்கைகளைச் சொல்லிக்கொண்ட ரஷ்யா மறுத்து வந்தது. 2020ல் ரஷ்ய அரசு ஸ்டோனுக்கு நிரந்தரமாக் தங்க விசா வழங்கியது. இது ஸ்னோடன் ஒரு ரஷ்ய எஜென்டாக(டபிள் ஏஜென்ட்) நம் உளவுத்துறையிலேயே வேலை செய்தவர் என்ற அமெரிக்காவின் சந்தேகம் உறுதியானது மீண்டும் வலுவாக அவரை திருப்பி அனுப்பும்படி கேட்டது.

ஆனால், அமெரிக்க உளவுத்துறையையே கதற விட்ட இந்த மனிதக்கு அண்மையில் ரஷ்ய குடியுரிமை வழங்கியிருக்கிறது. இதன் மூலம் அவருக்கு ரஷ்ய அரசின் பாதுகாப்பு கிடைக்கும் இப்படி குடியுரிமை வழங்கியிருக்கும் விஷயம் ரஷ்ய அதிபர் புடினின் விளம்பரமில்லாத ஒரு சாதாரண அறிக்கையின் மூலம் 72 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கிய லிஸ்டில் எட்வர்ட் ஸ்னோடன் பெயரும் இடம் பெற்றதின் மூலம் தான் தெரிய வந்திருக்கிறது.

இதன் மூலம் எட்வர்ட் ஸ்னோடன் அவரின் மனைவி, குழந்தை எலோரும் ரஷ்ய குடிமக்களாகிவிட்டனர். இனி அமெரிக்கா அவர்களை திருப்பி அனுப்ப கேட்க முடியாது.

ஒற்றர்களின் உலகம் ரகசியமானது மட்டுமில்லை, வினோதமானதும் கூட.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com