டைரிகளுக்கும் வாசம் உண்டு

டைரிகளுக்கும் வாசம் உண்டு

ப்போது யார் டைரி எழுதுகிறார்கள்? எல்லாமே செல்போனிலும் கம்ப்யூட்டர்களிலும் பதிவாகிறது. தவிர கூகுள் காலண்டர் மிக உதவியாக இருக்கிதே என்ற எண்ணம்தான் பலருக்கும் எழுகிறது. ஆனால், மார்க்கெட் நிலவரம் வேறு தகவலைச்சொல்லுகிறது. கொரோனா கால வீழ்ச்சிக்கு பின் எழுந்த தொழில்களில் இந்த டைரி தயாரிக்கும் தொழிலும் ஒன்று. நெல்லையில் இந்த டைரி, காலண்டர் தயாரிப்பை மட்டுமே செய்யும் நிறுவனங்கள் இந்த ஆண்டு ஜோராக தொடங்கியிருக்கிறது என்கிறார்கள். அது மட்டுமில்லை... “விலைகள் 30% அதிகரித்த நிலையிலும் ஆர்டர்கள் அதிகம் வந்துகொண்டிருக்கிறது” என்கிறார்கள். 2023ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு டைரிகள், காலண்டர் விற்பனைக்கு குவிக்கப்பட்டு வருகிறது. உறவினர்கள், நண்பர்களுக்கு டைரி கொடுத்து வாழ்த்துவர்கள், டைரி எழுதும் பழக்கம் உள்ளவர்களும், புதுவரவு டைரிகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவர். இவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் வித்தியாசமான டைரிகளை தயாரித்து அறிமுகப்படுத்துகின்றனர் நெல்லை, திண்டுக்கல் நகரங்களிலிருக்கும் நிறுவனங்கள்.

வெறும் தேதிகளை காட்டும் பக்கங்களாக இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது புதுமைகளை செய்து வாடிக்கையாளார்களை கவர்கிறார்கள். கடந்த ஆண்டுகளில் மினி பேக்(mini pack) வகையிலான டைரியின் உள்பகுதியில் செல்போன் வைத்துக் கொள்ளும் வசதி, பேனா ஸ்டாண்டு போன்றவை அறிமுகமாகி வரவேற்பை பெற்றன. இந்தாண்டு புதிய அறிமுகமாக ‘‘வாசனை டைரி’’ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. புதிய அறிமுகமாக டைரியின் பக்கங்களை புரட்டினால் நறுமணம் கமழும் டைரி அறிமுகமாகி உள்ளது.

தலைவர்கள் படங்களுடன் டைரிகளை பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்தியவர்கள் தி.மு.க.வினர். அதிகார பூர்வமாக கட்சி தலைமை அலுவலகம் வெளியிடும் டைரிகளிலிருந்து மாவட்ட தலைமைகள் வெளியிடும் டைரிகள் மிகவும் பாப்புலராக இருந்து. கடந்த சில ஆண்டுகளில் மெல்ல இந்த வழக்கம் மறைந்துவிட்டது. இந்த ஆண்டு அந்தப் பாணியை கையிலெடுத்திருக்கிறது எடப்பாடி அணி அ.தி.மு.க.

இந்த ஆண்டு டைரிகளின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ரூ.130 முதல் ரூ.150 வரையிலான விலையில் கடந்த ஆண்டு விற்கப்பட்ட டைரிகள் ரூ.200ஐ கடந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com