பதவியைப் பறிகொடுத்தாலும் பேசினால் காசு !

பதவியைப் பறிகொடுத்தாலும் பேசினால் காசு !

“அரசியல்வாதிகள் அழகாக பேசினால் ஓட்டு கிடைக்கும்” என்று நமக்கு தெரியும் . ஆனால் “நிறையப் பணமும்  கிடைக்கும்” என  ஓர் இங்கிலாந்து அரசியல்வாதி நீருபித்திருக்கிறார். 

2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு போரிஸ் ஜான்சன் தான் தலைமையேற்றிருக்கும்  கன்சர்வேடிவ் கட்சியை மிகப்பெரிய வெற்றியைப் பெறவைத்து அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர்.

ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர்  மாதம்   தனது சொந்த எம்.பிக்கள் பலரின் ஆதரவை இழந்து, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவிலிருந்து விலகினார்.  

இப்போது கட்சி அரசியலில் தீவிரம் காட்டுவதில்லை. ஆனால் படு பிஸியாகயிருக்கிறார். பிரதமராயிருந்ததை விட அதிகம் சம்பாதிக்கிறார். கடந்த 3 மாதங்களில் அவர் சம்பாதித்திருப்பது ரூ. 10 கோடி.

எப்படி? அவர் ஒரு சிறந்த பேச்சாளர். நிர்வாகம், அரசியல், பொருளாதாரம் போன்ற பல தலைப்புகளில் உரையாற்றுபவர். ஒரு கூட்டத்தில் பேச 2 கோடி முதல் 3 கோடி வரை கட்டணமாக பெறுகிறார். 

“நியூயார்க்கில் உள்ள வங்கியாளர்கள், அமெரிக்காவில் உள்ள காப்பீட்டாளர்கள், போர்ச்சுகலில் நடந்த உச்சிமாநாடு, இந்தியாவில் நடந்த பல்வேறு  கருத்தரங்களில்  அவர் பங்கேற்று பேசியதால் அவருக்கு இந்தப் பணம் கிடைத்திக்கிறது”  என்கிறது   இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நலன் பற்றிய அதிகாரப்பூர்வ இணைய தளம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com