சூரியனின் ஆயுள் குறைகிறதா?

மே 3 - உலக சூரிய தினம்
சூரியனின் ஆயுள் குறைகிறதா?

பிரபஞ்சத்தின் அளப்பரிய ஆற்றல்களின் மூல சக்தியாக சூரியன் அளிக்கின்ற பயன்பாடுகளை அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொண்டு, மேன் மேலும் அதை பயன்படுத்திக் கொள்ள அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா 1978ம் ஆண்டு அன்றைய அமெரிக்க குடியரசுத்தலைவர் ஜிம்மி கார்ட்டர் அறிவுறுத்தலின் பேரில் ஒவ்வொரு ஆண்டும் மே 3ம் தேதியை சர்வதேச சூரியன் தினமாக அடையாளப்படுத்தியது.

பூமியின் அருகில் உள்ள ஒரு விண்மீன் தான் சூரியன். நமது 200 மில்லியன் பால் வெளி நட்சத்திரங்களில் ஒன்று தான் சூரியன். இது இரண்டு டிரில்லியன் எடையை கொண்ட ஒரு நெருப்பு கோளம். இதன் மேற்பரப்பில் ஏறத்தாழ 5500०C வெப்பமும், உள்ளே 15 மில்லியன்०C க்கும் அதிகமான வெப்பமும் கொண்டு ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் நிரப்பப்பட்டது சூரியனிடமிருந்து வெளிப்படும் ஆற்றல் உத்தேசமாக 386 மில்லியன் மில்லியன் மெகா வாட்கள் என்கிறார்கள்.

சூரியன் 454 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவானதாக ஜெர்மன் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர். நிலவு 10 கோடி ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள். சூரியனுள்  1,000,000 பூமியை நிரப்ப முடியும் காரணம் சூரியனின் விட்டம் 14,00,000 கிமீ என்கிறார்கள்.  பூமியிலிருந்து குத்துமதிப்பாக 14960 மில்லியன் கிமீ தொலைவில்  சூரியன் உள்ளது. சூரியனிடமிருந்து சூரிய ஒளி பூமிக்கு வர 8.3 நிமிடங்களாகிறது என்கிறார்கள்.

சூரியனும் ஒரு நட்சத்திரம்தான், ஆனால் அது தன் எடையை வெப்பமாகவும், ஒளியாகவும் மாற்றிக்கொண்டு தன் எடையை இழக்கிறது. சூரியன் ஒவ்வொரு விநாடியும் 4 மில்லியன் டன்கள் ஹைட்ரஜனை ஆற்றலாக மாற்றி அண்டவெளியில் கதிர் வீச்சாக உமிழ்கிறது. இதனால் தனது ஆற்றலை இழந்து கொண்டே வருகிறது அதனால் அதன் எடையும் குறைந்து வருகிறது. சூரியனுள் ஒரு அணு உலையில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளும் அப்படியே நடக்கின்றது. அதனால் சூரியன் தன் எடையில் 1.5 மில்லியன் டன் எடையை அனல் காற்றாக வீசுகிறது.

சூரியனிடமிருந்து வீசும் அனல் காற்று நொடிக்கு ஆயிரம் கிமீ என்ற வேகத்தில் இருந்தாலும். ஒரு பூமியைவிட 100 மடங்கு அதிக எடை கொண்ட சூரியன் 4.5 மில்லியன் வருடங்களுக்கு மேலாக எரிந்து தன் எடையை இழந்து வந்தாலும் அதன் எடையில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள் சூரியன் 20 நொடிகளில் 6 மில்லியன் டன்கள் எடையை எரிந்து . இழந்தும். 4.5 மில்லியன் வருடங்களில் தன் எடையில் 0.5 சதவீதம் அதாவது 2000 ல் ஒரு  பகுதியை மட்டுமே இழந்திருக்கிறது என்கிறார்கள். சூரியனின் ஆயுள் 500- 700 கோடி ஆண்டுகள் என மதிப்பீடு செய்துள்ளனர்.

மனிதன் மற்றும் அனைத்து ஜீவராசிகளுக்கும் வாழ்வாதாரமாக இருக்கும்  சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தூரம் 1.5 செ.மீ வருடம் தோறும் அதிகரிக்கிறதாம். சூரியனிடமிருந்து பூமிக்கு கிடைக்கும் ஆற்றல் உலக மக்கள் அனைவரின் ஆற்றலைப்போல 6000 மடங்குக்கு இணையானது என்கிறார்கள். பூமியைப்போலவே சூரியனும் தனது அச்சில் மெதுவாக நிமிடத்திற்கு 217 கிமீ வேகத்தில் சுழல்கிறது.சூரியன் தன் வாழ்நாளில் 20 முறை மட்டுமே பால்வெளியில் சுற்றி வருமாம்.

பொதுவாக பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் 90,000,000 கிமீ ஆனால் அதே சூரியன் மார்ச் 20 முதல் ஆகஸ்ட் வரை 1,52,000,000 கிமீ தொலைவில் இருக்கும். இந்த நிகழ்வை "அப்ஹீலியன் நிகழ்வு" என்கிறார்கள். எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சூரியன் சில நேரங்களில் தூங்கும் நிலைக்கு செல்லுமாம் அதாவது இந்நிலையில் சூரியனில் இருக்கும் "சன் ஸ்பாட்" எல்லாம் மறைந்து அதன் வெளிப்பகுதி பெரிதாக ஆரவாரம் இல்லாமல் வெறும் வெள்ளை நிற கிரகம் போல காட்சியளிக்கும்.

நார்வே நாட்டிலுள்ள ஸ்பிட் பெர்ஜன் எனுமிடத்தில் வருடத்திற்கு ஒருமுறை சூரியன் தொடர்ந்து 3 நாட்கள் வெளிச்சம் தந்து கொண்டிருக்கும்

வெப்ப கிரகமான சூரியனை ஆராய்வதற்காக 1974 மற்றும் 1976 ம் ஆண்டுகளில் 'ஹீலியோஸ்1. மற்றும் ஹீலியோஸ் 2' என்ற செயற்கைக்கோள்களை அமெரிக்காவும், ஜெர்மனியும் கூட்டாக விண்ணில் செலுத்தின  அப்போது அது சூரியனை 43 மில்லியன் கிமீ தொலைவில் இருந்து ஆராய்ந்தது. சூரியனை மிக அருகில் 6.12 மில்லியன் கிமீ தொலைவில் இருந்து ஆராய்வதற்காக "பார்க்கர் சோலார் புரோப்" என்ற செயற்கைக்கோளை நாசா 2018 ல் விண்ணில் செலுத்தியது. அது 2024லில்  தன் வேலையை துவங்கும்.

நாசா விண்வெளி ஆய்வு மையம் முதல் முறையாக ஒரு செயற்கைக்கோளுக்கு உயிருடன் இருக்கும் ஒருவரின் பெயரை சூட்டியது அப்போதுதான். சூரியனில் ஏற்படும் புயல்கள் பற்றி 65 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்து கூறிய யுகேன்  பார்க்கர் பெயர்தான் அந்த செயற்கைக் கோளுக்கு சூட்டப்பட்டது. சூரியனின் மேற்பரப்பில் நிலவும் காந்தப்புயல்கள்  தான் சூரியனை பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது என்று கூறியவர் பார்க்கர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com